உயரும் இந்திய ஜிடிபி: 'ஆபத்து நீங்கவில்லை' என எச்சரிக்கும் நிபுணர்கள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், அலோக் ஜோஷி
- பதவி, மூத்த பொருளாதாரச் செய்தியாளர்
இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 20.1% உயர்ந்துள்ளது. இது இந்தியாவின் வளர்ச்சியில் புதிய சாதனையாகும். தவிர, இந்தியா இப்போது உலகின் மிக வேகமான வளர்ச்சி விகிதத்தை நோக்கி நகர்கிறது என்பதற்கான அறிகுறியுமாகும்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்திற்கும், பொது மக்களுக்கும் மட்டுமல்லாமல், அரசுக்கும் பங்குச் சந்தைக்கும் கூட இது ஒரு நற்செய்தியாகும்.
இந்த நல்ல செய்தி திடீரென வந்து விடவில்லை. அனைத்து பொருளாதார வல்லுநர்களும் இப்படித் தான் நடக்கும் என்று பல மாதங்களாகக் கணித்து வந்துள்ளனர். பெரும்பாலான கணிப்புகள், இந்த எண்ணிக்கை 18 முதல் 22 சதவிகிதம் வரை இருக்கும் என்று கூறின.
பங்குச் சந்தை இதற்காகத் தான் காத்திருந்தது. இதை எதிர்பார்த்துத் தான் கடந்த பல நாட்களாகப் பங்குச் சந்தை குறியீடுகள் உயரத் தொடங்கின. இந்தத் தரவு வெளியான பிறகும், தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. சென்செக்ஸ் முதல் முறையாக 57,550 புள்ளிகளைக் கடந்தது. நிஃப்டி, சென்செக்ஸ் இரண்டுமெ வரலாறு காணாத உயர்வை எட்டியுள்ளன.
பங்குச் சந்தை உச்சத்தைத் தொட்டிருந்தாலும், பொருளாதாரம் அல்லது ஜிடிபியில் இந்த விரைவான உயர்வு, பொருளாதாரம் மிக வேகமாக மீள்கிறது என்றோ வர்த்தகம் விரைவாக உயர்ந்துவிட்டது என்றோ பொருள் கொள்ள முடியாது.
ஏமாற்றும் புள்ளிவிவரங்கள்
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்த விரைவான வளர்ச்சிக்கு மிகப்பெரிய காரணம், கடந்த ஆண்டு இதே காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 24.4% வீழ்ச்சி அடைந்தது தான் என்று கூறப்படுகிறது. அதாவது, நாடு ஒரு பெரிய மந்தநிலையின் பிடியில் இருந்தது. அங்கிருந்து 20% உயர்வு என்பது பழைய நிலைக்கு சற்று கீழே தான் உள்ளது என்றே காட்டுகிறது.
ஜிடிபி உயர்வின் புள்ளிவிவரங்கள் மீதான விவாதங்கள் இவை.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
ஆனால் வளர்ச்சியின் யதார்த்தத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டுமானால், இந்தியாவின் ஜிடிபி என்றால் என்ன என்று பார்க்க வேண்டும். அதாவது நாட்டின் மொத்த பரிவர்த்தனைகள் எவை என்று பார்க்க வேண்டும்.
கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரை, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ .26.95 லட்சம் கோடியாக இருந்தது, இது இந்த ஆண்டு ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இருபது சதவீதம் அதிகரித்து 32.38 லட்சம் கோடியாக உள்ளது என்று ஜிடிபி புள்ளிவிவரங்களின் அரசாங்க வெளியீட்டில் கூறப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
ஆனால் கடந்த ஆண்டு இந்தக் காலாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி முந்தைய ஆண்டை விட 24.4% குறைவாக இருந்தது என்று இதில் குறிப்பிடப்படவில்லை. அதாவது, 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரை, இந்தியாவின் ஜிடிபி ரூ .35.85 லட்சம் கோடியாக இருந்தது. இந்த மூன்று புள்ளிவிவரங்களை ஒன்றாக வைத்துப் பார்த்தால், நாட்டின் பொருளாதாரம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையை கூட எட்டவில்லை என்பது தெளிவாகிறது. 7 ஆண்டுகால மோதி அரசின் பொருளாதார நிலையை புரிந்து கொள்ள 7 படங்களைப் பார்க்கலாம்.
கட்டுமானத் துறையில் வெற்றி
நாம் பார்க்க வேண்டிய மற்றொரு புள்ளிவிவரம் உள்ளது. அரசின் இந்த அறிக்கையில் அடுத்தடுத்த காலாண்டுகளிடையேயான ஒப்பீடும் காணப்படவில்லை. இதில் அரசாங்கத்தின் தவறு எதுவும் இல்லை, பொருளாதாரத்தில், ஒரு வருடத்திற்கு முந்தைய புள்ளிவிவரங்களுடன் ஒப்பிட்டுத் தான் இந்தக் கணக்கீடு செய்யப்படுகிறது.
ஆனால், கிடைக்கப்பெற்ற தரவுகளின் அடிப்படையில், இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை ஒப்பிடுகையில் ஏப்ரல் மற்றும் ஜூன் வரையிலான மூன்று மாதங்களில் உற்பத்தியில் சுமார் 17 சதவிகிதம் சரிவு ஏற்பட்டுள்ளது. அதாவது, கொண்டாட வேண்டிய தருணமன்று இது என்பதை இது காட்டுகிறது.

பட மூலாதாரம், Getty Images
அப்படியானால் இதில் மகிழ்ச்சியடைய என்ன இருக்கிறது என்று கேட்டால், கட்டுமானத் துறையில் தான் அத்தகைய நற்செய்தி உள்ளது. அத்துறையில், கடந்த ஆண்டு இதே நேரத்தில் சுமார் 50 சதவீதம் சரிவு ஏற்பட்டது. இந்த மூன்று மாதங்களில் 68.3% உயர்ந்துள்ளது, அதாவது, இங்கு மந்தநிலையிலிருந்து வெற்றிகரமாக மீண்டுள்ளது.
இந்தத் தொழிலில் பலர் வேலைவாய்ப்பு பெறுகிறார்கள். தவிர, கட்டுமானப் பணிகள் அதிகரித்தால், இரும்பு, சிமென்ட் போன்ற பொருட்களின் நுகர்வு அதிகரிக்கிறது. மேலும், சரக்குப் போக்குவரத்தும் அதிகரிக்கிறது. இதன் காரணமாக, அனைத்து வகையான சிறிய மற்றும் பெரிய வணிகங்கள், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நன்மையடைகின்றன.
இதேபோன்ற மற்றொரு தாவல், உற்பத்தித் துறையில் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல்-ஜூன் மாதங்களில் 36% வீழ்ச்சியடைந்திருந்த இது, இந்த ஆண்டின் அதே காலாண்டில் 49.6% அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கவனத்துக்குரியவை எவை?

பட மூலாதாரம், K.V. SUBRAMANIAM
உற்பத்தி அதாவது தொழில்துறை உற்பத்தி வேலைவாய்ப்பை அதிகரிக்க உதவுகிறது. இவற்றின் உயர்வு, அத்தகைய பொருட்களின் நுகர்வு நாட்டில் அதிகரித்துள்ளது என்பதற்கான குறியீடுமாகும். அதாவது பொருளாதாரச் சக்கரம் சுழல்கிறது என்று பொருள்.
மற்ற பல துறைகளிலும் உயர்வு பதிவாகியிருந்தாலும், அவை அவ்வளவு குறிப்பிடத்தக்கதாக இல்லை. மாறாக, கடந்த ஆண்டு வீழ்ச்சியின் போது இருந்த வேகம் இப்போது இல்லை என்ற கவலையையே அவை ஏற்படுத்துகின்றன.
ஆனால், தலைமைப் பொருளாதார ஆலோசகர் சமீபத்திய ஜிடிபி புள்ளிவிவரங்களின் உதவியுடன், சென்ற ஆண்டு அவர் உறுதியளித்தது போல, பொருளாதாரத்தில் "வி வடிவ" மீட்பு சாதிக்கப்பட்டுள்ளதாக நிரூபிக்க முயன்றார்.
ஆனால் இதில் எந்த அளவு உண்மை உள்ளது என்பதை ஏற்கெனவே பார்த்தோம். ஒரு சில வல்லுநர்கள் கணித்தபடி, 'கே-வடிவ' மீட்பு, அதாவது ஏற்றமும் இறக்கமும் கலந்த நிலை தான் உண்மையாகி வருகின்றன.
உற்பத்தியில் வலுவான முன்னேற்றம் இருந்தாலும், சேவைத் துறைகளில் சிறிதளவே முன்னேற்றம் உள்ளது. இதுவும் கவலைக்குரிய விஷயம். ஏனென்றால் இந்தியாவின் பொருளாதாரம் இப்போது பெரும்பாலும் சேவைத் துறையையே சார்ந்துள்ளது.
மூன்றாவது அலை வந்தால், அதன் தாக்கம் எப்படி இருக்கும்?
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேவைத் துறையின் பங்கு 50 சதவிகிதத்திற்கும் மேல் உள்ளது. உற்பத்தி, கட்டுமானம், அத்துடன் மின்சாரம், நீர், எரிவாயு மற்றும் பிற அத்தியாவசிய சேவைகளைச் சேர்த்தாலும், அவற்றின் பங்கு 25 சதவிகிதத்தை மட்டுமே அடைகிறது.
'கே வடிவ' மீட்பின் மற்றொரு அம்சம் இங்குதான் வருகிறது. இந்த அரசாங்கத்தின் ஆட்சியின் கீழ், இந்தியாவில் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளி மிக வேகமாக அதிகரித்துள்ளது. கொரோனா நெருக்கடி இருந்தபோதிலும், பணக்காரர்களின் செல்வம் அதிகரிக்கும் வேகம் ஒரு புதிராகவே உள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து, நாட்டின் 100 கோடீஸ்வரர்களின் செல்வத்தில் 12,97,822 கோடி அதிகரித்துள்ளது. அதே அளவு நாட்டின் 13 கோடியே 80 லட்சம் ஏழை மக்களுக்கு விநியோகிக்கப்பட்டிருந்தால், அவர்கள் ஒவ்வொருவருக்கும் 94 ஆயிரம் ரூபாய் கிடைத்திருக்கும். இந்த எண்ணிக்கை ஆக்ஸ்ஃபாமின் ஏற்றத்தாழ்வு வைரஸ் அறிக்கையில் வெளிவந்துள்ளது.
ஆனால் GDP அதிகரிப்பு ஏன் கடந்த ஆண்டு சரிந்த அதே வேகத்தில் பொருளாதாரம் மீண்டு வருகிறது என்ற நம்பிக்கையை அளிக்கவில்லை என்பதைப் புரிந்து கொள்ள, இந்தப் புள்ளிவிவரங்களில் மிகச் சரியான உதாரணம் நம் வீடுகளின் செலவு தான்.
இந்தக் காலாண்டில், இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 55.1% ஆக இருந்தது, அதேசமயம் கடந்த ஆண்டு நாடு முழுவதும் பொது முடக்கத்தின் பிடியில் இருந்து, மந்தநிலையை எதிர்கொண்டபோது கூட, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வீட்டுச் செலவின் பங்கு 55.4% ஆகும்.
நிலைமையில் பெருமளவு மாற்றம் எதுவுமில்லை என்பதையே இது காட்டுகிறது. ஆம், கடந்த ஆண்டு இந்தக் காலாண்டில், அரசாங்கத்தின் செலவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 16.4% ஆகும், அதே நேரத்தில் இந்த முறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதன் பங்கு 13% மட்டுமே உள்ளது.
இது அரசாங்கத்தைத் தவிர மற்றவர்களின் பரிவர்த்தனைகள் அதிகரித்திருப்பதைக் காட்டுகிறது, இதன் காரணமாக அரசாங்க செலவினங்களின் பங்கு குறைந்துள்ளது.
கொரோனாவின் இரண்டாவது அலை இல்லாதிருந்தால், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி எண்ணிக்கை மிகச் சிறப்பாக இருந்திருக்கும் என்பதை அங்கீகரிக்க வேண்டும். இப்போது மிகப்பெரிய கவலை என்னவென்றால், மூன்றாவது அலை வந்தால், அதிலிருந்து மீள்வது எப்படி என்பது தான் இப்போது முக்கியக் கவனம் செலுத்தப்பட வேண்டிய விஷயம்.
பிற செய்திகள்:
- பிக்பாஸ் சீசன் 5: கமல் நிகழ்ச்சி புதிய சவால்களுக்கு தாக்குப்பிடிக்குமா?
- திமுக சின்னத்தில் போட்டி - எதிர்கட்சி வரிசையில் இருக்கை - நீதிமன்றம் சென்ற வழக்கு தெரியுமா?
- 20 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த மனைவி மீது ஆசிட் வீசி கொன்ற கணவர்
- ஆப்கானிஸ்தானில் இருந்து முழுவதும் விலகிய அமெரிக்கா - 20 ஆண்டு போர், 25 முக்கிய தகவல்கள்
- அமெரிக்காவின் தாக்குதலில் குழந்தைகள் பலி: கண்ணீர் வடிக்கும் குடும்பம்
- கொரோனா தடுப்பூசி போட்டவருக்கு இதய பாதிப்பு - அறிகுறிகள் என்னென்ன?
- மூக்குதான் மூலதனம்: பல்லுயிர் பெருக்கத்தை காக்க போராடும் மோப்ப நாய்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












