பிக்பாஸ் சீசன்5: கமல் நிகழ்ச்சி புதிய சவால்களுக்கு தாக்குப்பிடிக்குமா?

பட மூலாதாரம், Star Vijay
- எழுதியவர், ச. ஆனந்தப்பிரியா
- பதவி, பிபிசி தமிழுக்காக
'பிக்பாஸ்' தமிழ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது. நிகழ்சியின் அடுத்த சீசன் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று மாலை விஜய் தொலைக்காட்சியின் சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி இருக்கிறது.
கமல்ஹாசன் நடிக்கும் 'விக்ரம்' படத்திற்கான அறிமுக டீசர் பாணியில், இந்த ஐந்தாவது சீசனுக்கான டீசரிலும் 'ஆரம்பிக்கலாமா?' என்ற வசனம் இடம்பெற்றிருக்கிறது. மேலும், இந்த சீசனுக்கான பிக்பாஸ் 'ஐ லோகோ'வும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.
கடந்த நான்காவது சீசனே, கொரோனா காரணமாக ஏராளமான விதிமுறைகள், மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டன. அப்படி இருக்கும்போது, இந்த சீசனில் என்னென்ன மாற்றங்கள் தொலைக்காட்சி தரப்பு கொண்டு வந்திருக்கிறது? முன் நிற்கும் கொரோனா தீவிரத்தை எப்படி எதிர்கொள்ள போகிறது 'பிக்பாஸ்'?
புகழ்பெற்ற டச்சு- பிரிட்டிஷ் ரியாலிட்டி நிகழ்ச்சியான 'பிக் பிரதர்' என்பதன் இந்திய வடிவமே 'பிக்பாஸ்'. இந்தி, தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் பல சீசன்களை கடந்திருக்கிறது. சல்மான்கான், நாகர்ஜூனா, மோகன்லால் என இந்தி, தெலுங்கு, மலையாளத்தில் முன்னணி நடிகர்கள் பலர் தொகுத்து வழங்கி வருகின்றனர்.
இதில் இந்தியில் இந்த முறை ஓடிடி தளத்திற்கென பிரத்யேகமாக 'பிக்பாஸ்- ஓடிடி'-யை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். பிக்பாஸ் ஓடிடி-யை நடிகர் கரண் ஜோகர் தொகுத்து வழங்க, தொலைக்காட்சிக்கான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 15வது சீசனை சல்மான்கான் தொகுத்து வழங்குகிறார். இது அடுத்த மாதம் ஒளிபரப்பாக இருக்கிறது.
ரசிகர்களை கவர்ந்த தமிழ் 'பிக்பாஸ்'

பட மூலாதாரம், Star Vijay
தமிழில் ஐந்தாவது சீசனை அடுத்த செப்டம்பர் இறுதி வாரம் அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் துவங்க திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. ஆனால், இது பற்றி இன்னும் அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகவில்லை.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பிக்பாஸ்' தமிழ் நிகழ்ச்சி நான்கு சீசன்களை முடித்திருக்கிறது. நான்கு சீசன்களையுமே நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி இருக்கிறார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக நடிகர் கமல்ஹாசனுக்கு இதுவே முதல் நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. ஐந்து சீசன்களுக்குமே கமல்ஹாசனே தொகுப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என சொல்லப்பட்ட நிலையில், கமலின் அரசியல் பிரவேசம் மற்றும் அடுத்தடுத்த படங்கள் காரணமாக 'பிக்பாஸ்' நிகழ்சியின் ஐந்தாவது சீசனை அவர் தொகுத்து வழங்குவாரா என்பதும் அதற்கு பதிலாக நடிகர் சிலம்பரசன் உள்ளிட்ட சிலரிடம் பேச்சுவார்த்தை நடப்பதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது.
ஆனால், இது குறித்து தொலைக்காட்சி தரப்பு எந்த கருத்தையும் வெளியிடாமல் இருந்தது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
சர்சைகளுக்கு பஞ்சமில்லாத 'பிக்பாஸ்'
சண்டை, அன்பு, பஞ்சாயத்து, காதல், காமெடி என வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் எல்லா பஞ்சாயத்துகளும் ஒவ்வொரு சீசனிலும் ரசிகர்களிடையே பேசு பொருளாயின.
இந்த நிலையில்தான், கடந்த சில வாரங்களுக்கு முன்பே நிகழ்ச்சியின் புரோமோ ஷூட் நடந்து கொண்டிருக்கிறது என பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கமலின் சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. தற்போது, நிகழ்ச்சிக்கான அதிகாரபூர்வ அறிவிப்பை விஜய் தொலைக்காட்சி அறிவித்திருக்கிறது.
கடந்த முறை சந்தித்த சவால்கள் என்னென்ன?
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
பிக்பாஸ் அரங்கில் பார்வையாளர்களுக்கு நேரடியாக அனுமதி இல்லை. நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்களும் இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்பே அரங்கிற்குள் அனுமதி, நிகழ்ச்சியின் இறுதி வாரங்களில் குடும்ப உறுப்பினர்கள் அனுமதி இருக்குமா என்ற சந்தேகம் என கடந்த சீசனில் கொரோனா தொற்று காரணமாக நிகழ்ச்சியில் பல மாற்றங்களை கொண்டு வந்தார்கள்.
கடந்த சீசன் போலவே, இந்த முறையும் கொரோனா தொற்று காரணமாகவே செப்டம்பர் இறுதி வாரம் அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் நிகழ்ச்சி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வருடமும் கொரோனா தொற்றின் தீவிரம் நீடித்து இருக்க என்னென்ன மாதிரியான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் நிகழ்ச்சியில் மாற்றங்கள் கொண்டு வந்திருக்கிறார்கள் என்பது குறித்து பிபிசி தமிழுக்காக பிக்பாஸ் நிகழ்ச்சி தயாரிப்பு குழுவை சேர்ந்தவர்களிடம் விசாரித்தோம்.
"கொரோனா தொற்றின் தீவிரம் காரணமாகவே, கடந்த வருடம் நிகழ்ச்சி தாமதமாக தொடங்கியது. இந்த வருடம் அப்படி நடக்காது என நினைத்தோம். ஆனால், தொற்றின் தீவிரம் இன்னும் இருப்பதால் இந்த வருடம் நிகழ்ச்சி தொடங்க தாமதமாகியுள்ளது. கடந்த வருடம் போட்டியாளர்கள் இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்புதான் நிகழ்ச்சிக்குள் அனுமதிக்கப்பட்டார்கள். அதுபோல, இந்த முறை கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ் கட்டாயம் என்பதை வலியுறுத்தியுள்ளோம்.
இது போட்டியாளர்களுக்கு மட்டுமல்ல, இந்த நிகழ்ச்சியில் திரையில் தோன்றுபவர்கள் முதல் திரைக்கு பின்னால் வேலை பார்ப்பவர்கள் வரை ஒவ்வொருவருமே தடுப்பூசி இரண்டு டோஸ் என்பதை கட்டாயமாக்கியுள்ளோம். இது இல்லாமல் கொரோனா பரிசோதனைகளும் நிச்சயம் உண்டு. போட்டியாளர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, இந்த முறை பிக்பாஸ் அரங்கில் என்னென்ன மாற்றங்கள் என்பது குறித்தெல்லாம் சீக்கிரம் பார்வையாளர்களுக்கு தெரியப்படுத்துவோம்" என்கின்றனர்.
'மாஸ்டர் செஃப்', 'சர்வைவர்' நிகழ்ச்சிகளை சமாளிக்குமா?
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3
'பிக்பாஸ்' நிகழ்ச்சிக்கு போட்டியாக விஜய்சேதுபதி தொகுத்து வழங்கும், சன் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் 'மாஸ்டர் செஃப்', நடிகர் அர்ஜூன் தொகுத்து வழங்கி அடுத்த மாதம் 12ம் தேதி ஒளிபரப்பாகும் 'சர்வைவர்' நிகழ்ச்சி என இந்த முறை 'பிக்பாஸ்- சீசன்5'க்கு கடுமையான போட்டிகள் இருக்கின்றன.
இந்த நிகழ்ச்சிகளை சமாளிக்க பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தேர்வு எப்படி இருக்க போகிறது? நிகழ்ச்சியில் என்ன மாதிரியான சவால்களை போட்டியாளர்களுக்கு தர இருக்கிறார்கள் என்பதை எல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
பிற செய்திகள்:
- திமுக சின்னத்தில் போட்டி - எதிர்கட்சி வரிசையில் இருக்கை - நீதிமன்றம் சென்ற வழக்கு தெரியுமா?
- 20 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த மனைவி மீது ஆசிட் வீசி கொன்ற கணவர்
- ஆப்கானிஸ்தானில் இருந்து முழுவதும் விலகிய அமெரிக்கா - 20 ஆண்டு போர், 25 முக்கிய தகவல்கள்
- அமெரிக்காவின் தாக்குதலில் குழந்தைகள் பலி: கண்ணீர் வடிக்கும் குடும்பம்
- கொரோனா தடுப்பூசி போட்டவருக்கு இதய பாதிப்பு - அறிகுறிகள் என்னென்ன?
- மூக்குதான் மூலதனம்: பல்லுயிர் பெருக்கத்தை காக்க போராடும் மோப்ப நாய்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













