You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விஜய், அஜித் ரசிகர்கள் இணைந்து டிரண்டாக்கும் 'நண்பர் அஜித்' ஹேஷ்டாக்
மாஸ்டர் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் அஜித்தை போல உடையணிந்து வந்ததாக நடிகர் விஜய் பேசியது 'நண்பர் அஜித்' என்ற ஹேஷ்டாக்கில் டிரெண்டாகி வருகிறது.
விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் பலரும் இந்த ஹேஷ்டாக்கில் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
டிவிட்டரில் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் என இரு தரப்புக்கும் இடையே பல சமயங்களில் கருத்து மோதல்கள் நடந்தநிலையில், தற்போது இருதரப்பு ரசிகர்களும் இந்த ஹேஷ்டாக்கில், அஜித் போல் உடையணிந்து வந்ததாக விஜய் கூறியது பற்றி தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இதற்கு முன்னர், கடந்த செப்டம்பர் மாதத்தில் சந்திரயான் -2ல் ஏற்பட்ட பின்னடைவு குறித்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் ட்விட்டர்வாசிகள் இடையே நடந்த மோதல்கள், #WorthlessPakistan மற்றும் #indiafailed என்ற ஹாஷ்டேகுகளை உலகளவில் டிரண்டானது.
#worthlesspakistan என்ற ஹாஷ்டேக் உலகளவில் டிரண்டிங் பட்டியலில் இடம்பெற்றது.
பாகிஸ்தானுக்கு எதிராக விஜய், அஜித் ரசிகர்கள் ஒன்று சேர வேண்டும் என்றும் பல பதிவுகள் இந்த ஹாஷ்டேகில் காணப்பட்டன.
அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் சேர்ந்து பாகிஸ்தானை கிண்டல் செய்வது போன்ற பல மீம்களையும் இவர்கள் பகிர்ந்தனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படம் 'மாஸ்டர்'. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை காலையில் இருந்தே சமூக ஊடகங்கள் விஜய் ரசிகர்களின் ஆதிக்கத்தில் இருந்தன. மாஸ்டர் திரைப்படம், விஜய் என ஹேஷ்டேகுகள் டிரெண்டாகி வந்தன.
விஜய் திரைப்படங்களின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எப்போதும் இருக்கும்.
அதே போன்ற எதிர்பார்ப்புக்கு இடையே இசை வெளியீட்டு விழாவில் விஜய் அரசியல் கலந்து தமது உரையை நிகழ்த்தினார்.
இப்போ இருக்கிற தளபதி இருபது வருஷத்துக்கு முன்னாடி இருந்த இளையதளபதியிடம் என்ன கேள்வி கேட்பார் என்று நடிகர் விஜயிடம் கேட்ட கேள்விக்கு, 'இருபது வருஷத்துக்கு முன்னாடி இருந்த இளைய தளபதியிடம், அப்போ வாழ்ந்த வாழ்க்கையை கேட்பேன்.. நிம்மதியா இருந்துச்சு.. ரெய்டுலாம் இல்லாம..!' என்றார்.
நிறைய பேர் பூ தூவி வரவேற்பாங்க, நம்மள பிடிக்காத நிறைய பேர் கல் எறிவாங்க. "KILL THEM WITH YOUR SMILE. BURY THEM WITH YOUR SMILE" என்று கூறினார் விஜய்.
"ரசிகர்கள் வர முடியாம வருத்தப்படுற அதே வருத்தம் எனக்கும் இருக்கு. அதுக்கு முக்கிய காரணம் போன இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியின் போது ஆடிட்டோரியம் வெளியே நடந்த விஷயங்கள்தான். கொரோனாவும் ஒரு காரணம்!" என்று பேசிய விஜய், ஒரு சில நேரத்துல உண்மையா இருக்கணும்னா ஊமையா இருக்கணும். வாழ்க்கை நதி மாதிரி.. நம்மள வணங்குவாங்க, வரவேற்பாங்க , கல் எறிவாங்க. ஆனா கடமையை செஞ்சுட்டு போயிட்டே இருக்கணும் என்றார்.
விஜய் சேதுபதி பெயரில் மட்டும் எனக்கு இடம் கொடுக்கலை. அவருடைய மனசுலயும் எனக்கு இடம் கொடுத்துருக்காரு!" என்று அவருடனான நட்பு குறித்து விஜய் கருத்து தெரிவித்திருந்தார்.
`நம்ம நண்பர் அஜித் மாதிரி டிரெஸ் பண்ணிட்டு போலாம்னு கோட் சூட் போட்டு வந்துருக்கேன்!" என்றும் விஜய் கூறினார்.
நடிகர் விஜய் சேதுபதி பேசியது என்ன?
- முதல் போஸ்டர் வெளியான பிறகு இணை தயாரிப்பாளர் ஜெகதீஷிடம் விஜய் சார் போஸ்டரில் அவருடைய பெயருடன் சேர்த்து என்னுடைய பெயரையும் போடச் சொல்லி சொல்லியிருக்கார்.
- ஏன் பேசவே மாட்டேன்றீங்க என கேட்ட போது, நான் ரொம்ப கவனிப்பேன்னு பதில் சொன்னார். அதை அவரிடமிருந்து கத்துக்கிட்டேன்.
- விஜய் சார் மீது எனக்கு இருக்கிற காதல் அவருக்கு நான் கொடுத்த முத்தத்திலேயே அவருக்கு தெரியும்.
- கொரோனா பார்த்து பயப்படத் தேவையில்லை. மனுஷனைக் காப்பாற்ற மனுஷன்தான் வருவான். தொட்டு எல்லோருக்கும் மருத்துவம் பார்க்கிற மருத்துவர்களுக்கு நன்றி!
- சாமிக்காக எல்லோரும் சண்டை போடுறாங்க. சாமி காப்பாத்தும்னு கும்பிடுறவங்களை நம்பாதீங்க. மனிதத்தை எடுத்துச் சொல்லுங்க. கடவுள் மேல இருக்காரு. மனுஷன்தான் பூமியில் இருக்கான். மதத்தை சொல்லி மனுஷங்களை பிரிக்கிறாங்க.
- விஜய குருநாத சேதுபதி காளிமுத்து இது தான் எங்க அப்பா வைச்ச பெயர்.
- வாழ்க்கைல எப்பவுமே என் அப்பா தான் மாஸ்டர். சினிமாவுல நான் சந்திக்கிற அத்தனை மனுஷங்களுமே மாஸ்டர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: