You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிக்பாஸ் கவினை அறைந்த நடிகர்: “நீ கேவலமா ஆடுன கேமுக்கு... உன்ன நம்புனவங்கள கைவிட்டதுக்கு...”
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர் கவினை சந்திக்க வரும் அவரது நண்பரும், திரைப்பட நடிகருமான பிரதீப் ஆண்டனி கவினை அடிக்கும் முன்னோட்ட காட்சி வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் 3 நிகழ்ச்சி விஜய் டிவியில் 80 நாட்களை கடந்து ஒளிப்பரப்பாகி வருகிறது. பிக்பாஸ் வீட்டில் தற்போது 7 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர். இச்சூழலில், இந்த வாரம் முழுக்க, பிக்பாஸ் போட்டியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் பிக்பாஸ் வீட்டுக்கு வருகை தந்து வருகின்றனர்.
வார தொடக்கத்தில், மலேசியாவை சேர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் முகேனின் தாய் மற்றும் தங்கை பிக்பாஸ் வீட்டுக்குள் வந்திருந்தனர். தொடர்ந்து, லொஸ்லியா, சேரன், வனிதா, தர்ஷன் மற்றும் ஷெரின் ஆகியோரின் முக்கிய குடும்ப உறுப்பினர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து போட்டியாளர்களை நலம் விசாரித்தனர்.
இச்சூழலில், போட்டியாளர் கவினை பார்க்க அவரது குடும்பத்தார் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கவினை பார்க்க அவரது நண்பர் பிரதீப் ஆண்டனி மட்டுமே பிக்பாஸ் வீட்டுக்குள் வந்திருப்பது முன்னோட்ட காட்சியிலிருந்து தெரிகிறது.
அவர் கவின் மற்றும் சக போட்டியாளர்களிடம் பேசிவிட்டு பிக்பாஸ் வீட்டிலிருந்து பிரதீப் ஆண்டனி செல்லும் நேரத்தில், "நான் கிளம்ப வேண்டிய நேரம் வந்துடுச்சு. ஆனால், எனக்கு கடமை ஒன்னு பாக்கி இருக்கிறது," என்று கூறிக்கெண்டே கவின் முன்னால் சென்று நிற்கிறார்.
பின்பு கவினை பார்த்து, "நீ கேவலமா ஆடுன கேமுக்கு... நீ மட்டமா ஒண்ணு பண்ணதுக்கு... உன்ன நம்புனவங்களை கைவிட்டதுக்கு... இங்க இருக்குறவங்களை காயப்படுத்தியதுக்கு... நான் ஒண்ணு செய்யலாம்னு இருக்கேன்... பிக்பாஸ் டைட்டில் ஜெயிச்சிட்டு, நீ பெரிய ஆளா வந்துட்டனா மேடைக்கு என்னை கூப்பிட்டு என்னை திருப்பி அடிச்சிக்கோ. அப்படி இல்லனா இந்த அடி தகுதியானதுதான்," என்று சொல்லியபடியே கவினின் கன்னத்தில் ஓங்கி அறைகிறார்.
பிரதீப் ஆண்டனியின் இந்த செய்கையால் சக போட்டியாளர்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தினர். தன்னை அறைந்துவிட்டு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் பிரதீப்பை கட்டி அணைக்கிறார் கவின். பிற போட்டியாளர்களை காண அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் வந்த நிலையில், கவினை பார்க்க அவரது நண்பர் மட்டும் வந்தது இணையத்தில் பல யூகங்களுக்கு வித்திட்டு வருகிறது.
- பிக்பாஸ்: ஓவியா முதல் லொஸ்லியா வரை சந்தித்த மனஅழுத்தமும், விமர்சனங்களும் - காரணம் என்ன?
- "காசுக்காக மகளை விஜய் டிவிக்கு அனுப்பிவிட்டாயா என்கிறார்கள்” - லொஸ்லியாவிடம் தழுதழுத்த தந்தை
- பிக்பாஸ் 3: "அப்படியா உன்னை வளர்த்தேன்" - மனம் குமுறிய லொஸ்லியா தந்தை மரியநேசன் - யார் இவர்?
- அதிமுக பேனர் சரிந்து விபத்து: சுபஸ்ரீயின் மரணத்துக்கு யார் காரணம்?
Biggboss 3 | Losliya - Kavin காதலை ஏன் எதிர்க்கிறீர்கள்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்