சீன பெருஞ்சுவர், தாஜ்மஹால், அங்கோர்வாட்: 13 உலகப் பாரம்பரிய சின்னங்களின் கண்கவர் படங்கள்

யுனெஸ்கோவால் உலகப் பாரம்பரிய சின்னங்களாக அங்கீகரிக்கப்பட்ட இடங்களின் கண்கவர் படங்கள் இதோ. இந்தக் காட்சிகள் உங்கள் காலைப் பொழுதை அழகாக்கட்டும்.

மேலே உள்ள புகைப்படத்தில் காணப்படும் ஊரை நீங்கள் வரைய வேண்டும் என்றால் பல நிறங்கள் தேவை. இத்தாலியில் உள்ள சிங்க்வே டெரே ஐந்து அழகிய மீனவ கிராமங்களை கொண்டது. இந்த புகைப்படத்தில் உள்ள கிராமத்தின் பெயர் மனாரோலா.

இந்த கிராமத்தை போன்றே வண்ணயமானதுதான் பல்கேரியாவில் உள்ள ரிலா மடாலயம். இது 10ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. 19ஆவது நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் இதில் பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் 1834-1862 ஆண்டுகளில் அது மீண்டும் கட்டப்பட்டது

சீனாவில் நிறைய பாரம்பரிய இடங்கள் உள்ளன அதில் மிகவும் புகழ்பெற்றது ’சீனப் பெருஞ்சுவர்’. இது கி.மு. 220ல் கட்டப்பட்டது. ஆனால் அதன் கட்டுமானப் பணி 17 ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்தது.

இச்சுவற்றின் நீளம் 20,000 கிமீ.

கம்போடியாவின் அங்கோர்வாட், தென் கிழக்கு ஆசியாவிலே முக்கியமான ஒரு பாரம்பரிய சின்னம் என யுனெஸ்கோ தெரிவிக்கிறது.

400 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்த இடம் முழுவதும் கோயில்களும், அணைகளும் பிற கட்டுமானங்களும் உள்ளன. 9ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இந்தப் புகைப்படத்தில் பெரிய மரத்தின் வேர் ஒரு கட்டுமானத்தின் மீது படர்ந்து கீழிறங்குவதை நீங்கள் பார்க்கலாம்.

ஜோட்ரல் பேங்க் வானியல் ஆய்வு மையத்தில் உள்ள 76 மீட்டர் டெலஸ்கோப் 1957ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.

அரிசோனா கிராண்ட் கேன்யான் பள்ளதாக்குகளும் இந்த பட்டியலில் ஒன்று.

க்ரோசியா தேசிய பூங்காக்கள் உள்ள ஏரி. இயற்கையாக பல அணைகட்டுகள் இங்கே உள்ளன.

யுனெஸ்கோவின் அனைத்து பாரம்பரிய சின்னங்களும் தரையில் இருக்க வேண்டும் என அவசியம் இல்லை. ஆஸ்திரேலியாவில் கடலுக்கடியில் உள்ள பவழப்பாறைகள் இவை. இங்கு 400 வகையான பவழப் பாறைகளும், 1500 வகையான மீன்களும், 4000 வகையான நத்தைகளும் உள்ளன.

சீனாவை போன்றே இந்தியா முழுவதிலும் பல பாரம்பரிய சின்னங்கள் உள்ளன. அவற்றில் மிகவும் புகழ்பெற்ற ஒன்றுதான் தாஜ்மஹால்.

பிரான்சில் உள்ள புனித மைக்கேல் தேவாலயமும் இந்த யுனெஸ்கோ பட்டியலில் ஒன்று.

கிறிஸ்தவர்களின் புனித தலமான இத்தாலி வாடிகன் நகரம்.

பல்கேரிய பிரின் மலையில் உள்ள இந்த அழகிய இடம்.

பெல்ஜியம் ப்ரசெல்ஸ் லா கிராண் பேலஸ்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :