ஆஸ்கர் 2019: ஏன் எங்களை ஒதுக்குகிறார்கள்? - விடை தேடும் சில முரண்கள்

ஆஸ்கர் அகடெமி அண்மையில் வெளியிட்ட ஒரு அறிவிப்பு படைப்பாளிகளை கவலை கொள்ள செய்துள்ளது.

அந்த அறிவிப்பு இதுதான். "பிப்ரவரி 24 அன்று நடக்க இருக்கும் விருது வழங்கும் விழாவில், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு , ஒப்பனை ஆகியவற்றுக்கு விருது வழங்கும் போது, அந்தக் காணொளி காட்சிகள் நேரலையில் ஒளிபரப்பப்பட மாட்டாது".

இந்த அறிவிப்பை கண்டித்து திரைப்பட இயக்குநர்கள் மற்றும் ஒளிபதிவாளர்கள் நாற்பது பேர் அகடெமிக்கு திறந்த மடல் எழுதி உள்ளனர்.

அகடெமி நிர்வாகம், "இந்த பிரிவுக்கு விருது வழங்கும் போது, அந்தக் காட்சிகள் முதலில் இணையத்தில் நேரலையாக ஒளிபரப்பபடும், அதன் பின்னரே தொலைக்காட்சியில் ஒளிபரப்பபடும்" என்றுள்ளது.

சரி. இந்த தகவல்களை கடந்து ஆஸ்கருக்காக ஒளிப்பதிவு பிரிவில் விண்ணப்பிக்கப்பட்டுள்ள சில திரைப்படங்கள் மற்றும் அதன் ஒளிப்பதிவாளர்கள் குறித்து இங்கு காண்போம்.

'கோல்ட வார்'

இந்த திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் லுகாஸ் ஜல்.

கருப்பு வெள்ளையில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. பனிப் போருக்கு பின் அரசியல் ரீதியாக பிரிந்த ஐரோப்பாவில் இருவருக்கு இடையேயான காதலை விவரிக்கிறது இந்தப் படம்.

`தி ஃபேவரைட்`

ராபி ரையன் - இவர்தான் தி ஃபேவரைட் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர்.

அரச குடும்பத்தில் உள்ள ராணியின் உளவியல் சிக்கல் குறித்து விவரிக்கும் படம் இது.

இயற்கையான ஒளியிலும், விளக்கொளியிலும் இந்த திரைப்படமானது எடுக்கப்பட்டது, காட்சிக்கு மென்மையானதன்மையை வழங்குகிறது.

ரொமா`

இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் அல்ஃபோன்ஸொ கியூரான்.

மெக்சிகோவில் அரசியல் கிளர்ச்சி நிலவியபோது ஒரு மத்தியத்தர வர்க்கத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தில் பணியாளராக இருக்கிறார் ஒருவர். அவரின் வாழ்க்கையை பின் தொடர்கிறது இந்த திரைப்படம்.

ஸ்டார் இஸ் பார்ன்

மேத்யூவால் ஒளிப்பதிவு செய்யப்பட்ட படம் இது.

பாடகரின் வாழ்வு, அவருக்கு ஏற்படும் காதல், அந்த பெண் தரும் உற்சாகம் என விரிகிறது இந்த திரைப்படம்.

சிகப்பு, மெஜந்தா வண்ணங்கள் அதிகளவில் இந்த திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

நெவர் லுக் அவே

ஒளிப்பதிவு: கெலெப் டெஸ்செனல்

இளைய ஓவியரின் வாழ்வு குறித்து பேசுகிறது இந்ததிரைப்படம்.

இந்த படத்தை முதலில் ஃப்லிம்மில் ஒளிப்பதிவு செய்யதான் திட்டமிடிருக்கிறார் கெலெப். ஆனால், அருகில் திரைப்பட ஆய்வு கூடங்கள் எதுவும் இல்லாததால், டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இந்த திரைப்படத்தை எடுக்க திட்டமிட்டிருக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :