சினிமா செய்திகள்: 'தீரன்' இயக்குநருடன் அஜித்; மீண்டும் பேய் படத்தில் நயன்தாரா

'தீரன்' இயக்குநர் படத்தில் அஜித்?

cinema

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களை இயக்கியவர் வினோத். இந்த இரண்டு படங்களும் வசூல் ரீதியாக வெற்றியடைந்தன. மேலும் வினோத்துடைய வசனம் அனைவரிடமும் பாராட்டைப் பெற்றது. இந்த நிலையில் வினோத், நடிகர் அஜித்தை இயக்கப் போகிறார் என்று செய்தி வெளியாகியுள்ளது. கடந்த மாதம் இந்த படம் பற்றிய தகவல்கள் வெளியாகியிருந்தாலும் அது உறுதியாகமல் இருந்தது.

ஆனால், தற்போது அஜித் மற்றும் சதுரங்க வேட்டை வினோத் ஆகியோர் இணைவது உறுதியாகியுள்ளதாகவும், விசுவாசம் படத்தின் சூட்டிங் முடியும் சமயத்தில் இந்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்றும் அஜித்துக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். மேலும், ஆக்‌ஷன் ஃபார்முலாவில் அனைவரும் ரசிக்கும் படியான படமாக இருக்கும் என்று கூறுகின்றனர்.

Presentational grey line

மூன்று படங்களிலும் புதுமுகங்கள்

ஐந்து புதிய ஹீரோக்களையும் ஐந்து தயாரிப்பாளர்களையும் 2018ல் அறிமுகப்படுத்தவுள்ளதாக இயக்குனர் சுசீந்திரன் அறிவித்துள்ளார். 'நெஞ்சில் துணிவிருந்தால்' படத்தை தொடர்ந்து ஏஞ்சலினா, ஜூனியர் ஆகிய இரண்டு படங்களை அவர் இயக்கியுள்ளார்.

cinema

பட மூலாதாரம், Facebook / Suseenthiran Nallusamy

இந்த இரண்டு படங்களின் அனைத்து வேலைகளும் முடிந்து ரிலீஸுக்கு தயாராகவுள்ளது. இந்த நிலையில் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து சாம்பியன் (Foot Ball) படத்தை இயக்கவுள்ளார். தயாரிப்பாளர் சங்கத்தின் வேலை நிறுத்தம் முடிந்ததும் அந்த படத்தின் சூட்டிங் தொடங்கவுள்ளது. இந்த மூன்று படங்களிலும் புதுமுகங்களே நடிக்கின்றனர்.

இது தவிர விரைவில் மற்ற இரண்டு படங்களின் அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும், அந்த படங்களிலும் புதுமுக நாயகர்களே நடிக்கவுள்ளனர் என்றும் சுசீந்திரன் கூறியுள்ளார். மேலும் நடிகர் சசிகுமாரின் உறவினர் அசோக் குமார் தற்கொலை சமயத்தில் பைனான்சியர் மதுரை அன்புக்கு எதிராக தன்னுடைய கருத்தை தெரிவித்தார் சுசீந்திரன்.

இதனால் அவரிடம் வட்டிக்கு பணம் வாங்கும் தயாரிப்பாளர்களும், நடிகர்களும் தன்னுடைய வேலை செய்ய தயங்குகின்றனர் என்றும், ஆனால் அதனால் தனக்கு கவலையில்லை என்று சுசீந்திரன் தெரிவித்துள்ளார். சுசீந்திரன் அடுத்ததாக இயக்கும் படத்தில் அவருடைய மகன், ஹீரோவின் சிறுவயது கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதேபோல் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான 'ஆதலால் காதல் செய்வீர்' படத்தில் பணியாற்றிய பல தொழில்நுட்ப கலைஞர்கள் சாம்பியன் படத்திலும் வேலை செய்ய உள்ளனர்.

Presentational grey line

கார்த்திக் சுப்புராஜின் 'பேசாத' படம்

cinema

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், பிரபுதேவா நடித்துள்ள படம் மெர்குரி. வசனமே இல்லாமல் சைலண்ட் மூவியாக மெர்குரி உருவாகியுள்ளது. த்ரில்லர் வகையில் உருவாகியுள்ள இந்த படத்தை வரும் 13ம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வேலை நிறுத்தம் தொடர்வதால் மெர்குரி வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ளது.

இந்த நிலையில் அமெரிக்காவில், லாஸ் ஏஞ்சல் நகரில் வரும் 12ம் தேதி தொடங்கவுள்ள இந்திய சர்வதேச திரைப்படவிழாவில் மெர்குரி திரைப்படம் திரையிடப்படவுள்ளது. தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஸ்ட்ரைக் நீடித்தாலும் ஸாஸ் ஏஞ்சல் நகரில் நிச்சயம் மெர்குரி திரைப்படம் திரையிடப்படும், அதில் எந்த மாற்றமும் இல்லை.

Presentational grey line

தயாரிப்பாளர் யுவன் சங்கர் ராஜா

cinema

பட மூலாதாரம், facebook /Yuvan Shankar Raja

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பாளராக அவதாரம் எடுத்து நயன்தாரா நடிக்கும் கொலையுதிர்காலம், ஹரிஷ் கல்யாண் நடிக்கும் பியார் பிரேம் காதல் ஆகிய படங்களை தயாரிக்கிறார். இந்த படங்களை தொடர்ந்து தன்னுடைய உறவினர் ஹரி பாஸ்கர் ஹீரோவாக நடிக்கும் "பேய்பசி" படத்தை தயாரிக்கிறார்.

ஸ்ரீனிவாஸ் கவிநாயகம் என்ற புது இயக்குநர் இயக்கும் பேய்பசி படத்தில் நமிதா, அம்ரிதா ஐயர் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இந்த படத்தை தயாரிப்பதோடு இசையமைக்கும் பணியையும் கவனிக்கிறார். இவரோடு இன்னொரு இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணனும் இணைந்து இசையமைப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி பேய் பசி படத்தில் ஒரு பாடலை பாடவுள்ளார்.

Presentational grey line

சிவகார்த்திகேயனின் அடுத்த படம்

cinema

பட மூலாதாரம், Facebook / SivaKarthikeyan

சீமாராஜா படத்தை முடித்து கொடுத்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக 'இன்று நேற்று நாளை' படத்தின் இயக்குனர் ரவிகுமார் இயக்கும் சயின்ஸ் பிக்‌ஷன் படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கான வேலைகள் வேகமாக நடைப்பெற்று வருகின்றன. இதைத் தொடர்ந்து சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் ஆகிய படங்களை இயக்கிய எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சிவகார்த்திகேயன்.

இந்த படத்தில் சிவாவுக்கு ஜோடியாக நடிக்க சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடியும் என்றும், சாய் பல்லவி சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிப்பார் என்றும் படக்குழு தரப்பில் சொல்லப்படுகிறது.

Presentational grey line

'துப்பாக்கி' வில்லனுடன் நடிக்கும் ஸ்ருதி

தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்துக்கொண்டிருப்பவர் ஸ்ருதிஹாசன். ஆனால் சமீபத்தில் எந்த படங்களிலும் நடிக்க ஒப்புக்கொள்ளாமல் இருந்தார். இறுதியாக சங்கமித்ரா படத்தில் ஒப்பந்தமாகி ஒரு சில காரணங்களால் அந்த படத்தில் இருந்து விலகினார்.

இந்த நிலையில் பில்லா 2, துப்பாக்கி ஆகிய படங்களில் வில்லனாக நடித்த வித்யூத் ஜமாலுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அந்த படத்தை மகேஷ் மஞ்ரேக்கர் இயக்குகிறார். ரொமேண்டிக் ஆக்‌ஷன் வகையில் உருவாகும் அந்த படத்தின் சூட்டிங் மும்பையில் அடுத்த மாதம் தொடங்கவுள்ளது.

Presentational grey line

மீண்டும் ஒரு பேய் படத்தில் நயன்தாரா?

நயன்தாரா cinema

அனுஷ்கா சர்மா நடிப்பில் ஹிந்தியில் வெளியாகி வெற்றியடைந்த படம் 'பாரி'. ஹாரர் வகையில் எடுக்கப்பட்ட இந்த படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. அந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. மேலும் பாரி படத்தின் ரீமேக் உரிமையை ஒரு பிரபல தயாரிப்பாளர் பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளதாகவும், அதில் நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சிகள் நடைபெற்று கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நயன்தாரா ஏற்கனவே மாயா, டோரா ஆகிய ஹாரர் படங்களில் நடித்துள்ளார்.

Presentational grey line

'செம போத ஆகாதே'

அதர்வா cinema

செம போத ஆகாதே படத்தை தயாரித்து நடித்துள்ள அதர்வா தற்போது ஆர். கண்ணன் இயக்கும் பூமரங் படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இந்த படத்தின் 50 சதவீத சூட்டிங் முடிந்துள்ளது. பூமரங் படத்தில் அதர்வா மூன்று வித்தியாசமான தோற்றங்களில் நடிக்கிறார்.

அந்த தோற்றங்கள் ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத வகையில் வடிவமைக்க ப்ரோஸ்தடிக் மேக்கப் செய்துகொள்கிறார் அதர்வா. இதற்காக அந்த துறையின் வல்லுநர்களான ப்ரீத்திஷீல் சிங், மார்க் ட்ராய் டிஸோசா ஆகியோரை கமிட் செய்துள்ளனர்.

Presentational grey line

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: