You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
Oscars 2018: 4 ஆஸ்கார் விருதுகளை அள்ளிய ’தி ஷேப் ஆஃப் வாட்டர்’
90வது அகாடமி விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவில் கோலாகலமாக நடந்து முடிந்துள்ள நிலையில், ஆஸ்கார் விருதின் முழு பட்டியலை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்திலுள்ள லாஸ் ஏஞ்சலஸ் உள்ள டால்பி அரங்கத்தில் ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த ஆண்டு விழா நிகழ்வை அமெரிக்காவின் பிரபல தொகுப்பாளரும், நகைச்சுவை நடிகருமான ஜிம்மி கெம்மல் தொகுத்து வழங்கினார்.
ஆஸ்கார் 2018 - சுவாரஸ்ய தகவல்கள்:
- சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது பிளேட் ரன்னர் 2049 திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் ரோஜர் ஏ. டீகின்ஸுக்கு வழங்கப்பட்டது. அவர் பெறும் முதல் ஆஸ்கார் விருது இது. இதற்கு முன்பு, சுமார் 14 முறைகள் பரிந்துரை பட்டியலில் ரோஜர் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
- சிறந்த ஆடை வடிவமைப்புக்கான விருதை பெற்ற பேந்தம் திரட் திரைப்படத்தின் ஆடை வடிவமைப்பாளர் மார்க் பிரிட்ஜஸ், தனது உரையை வெறும் 36 நொடிகளுக்குள் முடித்து கொண்டார். இந்நிகழ்வில், மிகக்குறைவான நேரத்தில் பேசிய விருதாளர் அவர்.
- சிறந்த லைவ் ஆக்ஷன் குறும் படமாக தேர்தேடுக்கப்பட்ட ’தி சைலண்ட் சைல்டு’ படத்திற்காக ரேச்சல் ஷென்டன் மற்றும் அவரது வருங்கால கணவர் கிரிஸ் ஓவர்டன் ஆஸ்கார் விருதை வென்றுள்ளனர். விருதை ஏற்றுக்கொண்டு பேசிய ரேச்சல், சைகை மொழியிலும் பேசி அரங்கத்தில் இருந்தவர்களை அசத்தினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்