You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்க தமிழர் அஸீஸ் இஸ்மாயில் அன்சாரிக்கு கோல்டன் குளோப் விருது -5 தகவல்கள்
75வது கோல்டன் குளோப் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட அமெரிக்கருக்கு விருது கிடைத்துள்ளது.
அமெரிக்காவில் சிறந்த திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களுக்காக ஒவ்வொரு வருடமும் கோல்டன் குளோப் எனும் விருது வழங்கப்படுகிறது.
கலிஃபோர்னியாவில் நடைபெற்ற 75வது கோல்டன் குளோப் விருதுகளில் தொலைக்காட்சித் தொடர்களுக்கான இசை அல்லது நகைச்சுவைப்பிரிவில் சிறந்த நடிகர் விருது அஸீஸ் இஸ்மாயில் அன்சாரிக்கு வழங்கப்பட்டுள்ளது.
- மாஸ்டர் ஆஃப் நன் என்னும் தொலைக்கட்சித் தொடரில் சிறப்பாக நடித்ததற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. அன்சாரி கடந்த ஆண்டும் கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தார். ஆனால் கிடைக்கவில்லை.
- அஸீஸ் இஸ்மாயில் அன்சாரியின் பெற்றோர் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்கள். அஸீஸ் பிறந்து வளர்ந்தது அமெரிக்காவில்தான். 34 வயதாகும் அஸீஸ் அன்சாரிக்கு தமிழ் மொழி பரிச்சயம்.
- நெட்பிளிக்ஸில் வெளியாகும் இணைய தொலைக்காட்சித் தொடரான மாஸ்டர் ஆஃப் த நன் (MASTER OF THE NONE) தொடரை அலன் யங் என்பவனுடன் இணைந்து தொடங்கினார்.
- 2015-ல் இருந்து வெளிவரும் இத்தொடரில் அஸீஸ் இஸ்மாயில் அன்சாரி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். அன்சாரி ஏற்கனவே சில ஹாலிவுட் படங்களிலும் சில கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.
- 75வது கோல்டன் குளோப் விருது நிகழ்வில் டைம்ஸ் அப் இயக்கத்திற்கு ஆதரவாக பல நடிகர் நடிகைகள் உடைகளை அணிந்தும் பேட்ஜ் அணிந்தும் வந்திருந்தனர். பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் தொல்லைகளில் பாதிக்கப்படும் பெண்களோடு ஒற்றுமையாக நிற்க தொடங்கப்பட்ட இந்த இயக்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக கோல்டன் குளோப் விருது அரங்கில் கருப்பு நிற உடையும், டைம்ஸ் அப் பேட்ஜும் அணிந்து வந்திருந்தார் அஸீஸ் இஸ்மாயில் அன்சாரி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்