You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
2.5 லட்சம் மெயில்களை படிக்காமல் வைரலாகும் பிரியங்கா சோப்ரா
உங்களின் மின்னஞ்சல் இன்பாக்ஸில் இன்னமும் எவ்வளவு இமெயில்கள் படிக்கப்படாமல் இருக்கும்? ஒரு 50 அல்லது 100 இருக்குமா? இல்லை ஆயிரத்துக்கு அதிகமாக இருக்குமா?
ஆனால், இந்த விஷயத்தில் பாலிவுட் நட்சத்திரமான பிரியங்கா சோப்ராவுடன் நீங்கள் யாரும் போட்டி போட இயலாது. அவரின் இன்பாக்ஸில் இன்னமும் படிக்கப்படாத மின்னஞ்சல்களின் எண்ணிக்கை 2,50,000க்கும் அதிகமாக உள்ளது.
பாலிவுட்டில் அதிக சம்பளம் பெரும் நடிகைகளில் ஒருவரும் இந்தியாவில் மிகப் பிரபலமானவருமான பிரியங்கா சோப்ரா, 2000-ஆம் ஆண்டு உலக அழகிப் பட்டம் வென்றதிலிருந்து 50-க்கும் மேற்பட்ட இந்திய திரைப்படங்களில் நடித்துள்ளார். அவர் யுனிசெஃப் அமைப்பின் தூதரும் கூட.
சோப்ராவின் கைபேசியில் படிக்கப்படாத 2,57,623 மின்னஞ்சல்களைக் காட்டும் புகைப்படம் ஒன்று அமெரிக்க நடிகர் ஹாலன் போவல்லால் பகிரப்பட்டது.
அவர் அமெரிக்காவின் ஆக்ஷன் த்ரில்லர் தொடரான குவான்டிக்கோவின் மூன்றாவது பாகத்தில் சோப்ராவுடன் இணைந்து நடிக்கவுள்ளார்.
படிக்கப்படாத மின்னஞ்சல்கள் யாரிடம் அதிகமாக உள்ளதோ அவர்கள் தனது இணை நட்சத்திரமான பிரியங்காவை தோற்கடிக்கலாம் என்று ஹாலன் போவல் சவால் விட்டார்.
இதை கேள்விப்பட்டவுடன் மக்கள், நிரம்பி வழியும் தங்கள் இன்பாக்ஸ்களின் புகைப்படங்களைப் பகிரத் தொடங்கினர். அதில் சிலரையுடையது 10,000 த்தை எட்டியிருந்தது.
ஆனால் பியூஷ் ராக்கா என்பவருக்குத்தான் முதல் பரிசு வழங்கிட வேண்டும். ஏனெனில் 3,81,753 படிக்கப்படாத மின்னஞ்சல்கள் மூலம் சோப்ராவின் சாதனையையே அவர் முறியடித்துவிட்டார். ஆனால் இதன் உண்மைத்தன்மை குறித்து பலர் ட்விட்டரில் கேள்வியெழுப்பிவருகின்றனர்.
பிரியங்கா சோப்ராவின் மின்னஞ்சல்களின் எண்ணிக்கையை பார்த்து வியந்து போன பலர், "நீங்கள் படித்திராத மின்னஞ்சல்களை நீக்கிவிடலாமே" என்று பரிந்துரைத்துள்ளனர்.
எனினும், ஐ-ஃபோன் பயன்படுத்துபவர்கள், அதிலுள்ள பேட்ஜ் ஆப் ஐகானை பயன்படுத்தி, எளிமையாக தாங்கள் படித்திராத மின்னஞ்சல்களை அணைத்து வைக்க முடியும்.
ஆனால் சோப்ராவின் இந்த கைப்பேசி புகைப்படத்தை பார்த்த சிலர், இது உண்மைதானா என்ற சந்தேகத்தையும் முன்வைத்துள்ளனர்.
ஹாலன் போவல் பதிவேற்றியுள்ள இந்த புகைப்படத்திற்கு பதிலளித்துள்ள ஆன்டனி டிலக்ரூஸ், 2,57,623 என்பது ஒரு எண்ணிக்கையே கிடையாது எனத் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
- 'நீங்கள் வரவேண்டாம் பென்ஸ்!': அமெரிக்கா-பாலத்தீனம் இடையேயான பேச்சுவார்த்தை ரத்து?
- ஜெருசலேம் சர்ச்சை: அமெரிக்க முடிவுக்குப் பல நாடுகள் எதிர்ப்பு
- பாபர் மசூதி இடிப்பின் 25-ம் ஆண்டு: இந்து தேசியவாதம் வளர்ந்தது எப்படி?
- தேர்தல் அலுவலரை மிரட்டினாரா விஷால்?
- ராஜஸ்தானில் `லவ் ஜிஹாத்' - முஸ்லிமை கொன்று எரித்த இந்து இளைஞர் கைது
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்