நந்தினிக்கு எதிராக 'குஜராத் பாலை' கொண்டு வருகிறாரா அமித் ஷா? கர்நாடகாவில் கொதிக்கும் பால் சர்ச்சை

பட மூலாதாரம், BANGALORE NEWS PHOTOS
- எழுதியவர், இம்ரான் குரேஷி
- பதவி, பிபிசி இந்திக்காக
இந்தியாவின் மிகப்பெரிய பால் பிராண்டான அமுல் பெங்களூருவில் பால் விற்பனை செய்யும் யோசனையை முன்வைத்ததால் ஏற்பட்ட சலசலப்பு, கர்நாடக தேர்தலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமுலின் இந்த முயற்சி, கர்நாடகா பால் கூட்டமைப்பின் (KMF) பிராண்டான நந்தினியின் எல்லைக்குள் நிகழும் ஊடுருவலாக பார்க்கப்படுகிறது.
அமுலின் அதிகாரப்பூர்வ ட்வீட்டிற்குப் பிறகு இந்த விவாதம் தொடங்கியது. இதில் அமுல் தனது திட்டம் குறித்து கூறியிருந்தது. மேற்கு மாநிலமான குஜராத்தைச் சேர்ந்த பிராண்ட் தனது கால்தடத்தை தென் மாநிலமான கர்நாடகாவில் விரிவுபடுத்தும் முயற்சியாக இது தற்போது ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் முன்வைக்கப்படுகிறது, மேலும் இது குறித்து சூடான விவாதம் நடைபெற்று வருகிறது. அரசியல் கண்ணோட்டத்தில், இது பிராந்திய அடையாளத்தின் பிரச்சனையாக மாறியுள்ளது.
ஒரு கூட்டுறவு சங்கம் மற்றொரு கூட்டுறவு சங்கத்தின் துறையில் தலையிடாது, மற்ற மாநிலங்களில் கால் பதிக்காது என பால் உற்பத்தி சங்கங்களுக்கு இடையே எழுதப்படாத பரஸ்பர புரிதல் இருப்பதாலும் அமுலின் இந்த நடவடிக்கை குறித்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
ஆனால் பால் கூட்டுறவு வணிகத்தில் பணிபுரியும் மற்ற பிராண்டுகளுடன் ஒப்பிடும்போது, அமுல் வேறுபட்ட அணுகுமுறையைக் கொண்டுள்ளது.
அமுலும் நந்தினியும் போட்டியாளர்களா?
பிபிசியிடம் பேசிய அமுல் நிர்வாக இயக்குனர் ஜே.என்.மேத்தா, நந்தினியை வலுவிழக்கச் செய்ய அமுல் தமது பாலின் விலையை குறைக்கவில்லை என்றார். “எங்கள் பார்வையில் நந்தினி மிகவும் வலுவான பிராண்ட். எங்கள் பால் மும்பை, டெல்லி மற்றும் சண்டிகர் உட்பட நாடு முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களில் ஒரு லிட்டர் 54 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பெங்களூருவிலும் அதே விலையில் விற்கப்படும். நந்தினி தனது பாலை லிட்டருக்கு 39 ரூபாய்க்கு விற்கிறது,” என்று கூறினார் மேத்தா.
அமுல் தயாரிப்புகளான டெட்ராபேக் பால், லஸ்ஸி மற்றும் சாக்லேட்கள், பெங்களூரு மற்றும் கர்நாடகா முழுவதும் உள்ள கடைகளில் விற்கப்படுகின்றன.
"பெங்களூரு, ஹாசன் மற்றும் பெல்லாரியில் உள்ள மூன்று KMF ஆலைகளில் அமுல் ஐஸ்கிரீம் தயாரிக்கப்படுகிறது. பெங்களூரு மற்றும் தென்னிந்திய சந்தையில் எங்கள் வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்ய நந்தினியிடம் இருந்து தினமும் முப்பதிலிருந்து முப்பத்தைந்தாயிரம் லிட்டர்கள் வரையிலான ஐஸ்க்ரீமை நாங்கள் வாங்குகிறோம். நந்தினியுடன் எங்களுக்கு நல்ல உறவு இருக்கிறது. ஏனென்றால் எங்கள் பணியும் இலக்கும் ஒன்றுதான்,” என்று மேத்தா கூறினார்.
பிபிசி இந்தியிடம் பேசிய KMF இன் நிர்வாக இயக்குனர் BC சதீஷ், அவர்களிடம் உபரி பால் இருக்கும் போது, KMF மற்ற கூட்டுறவு உற்பத்தியாளர்களுடன் அவர்களின் உற்பத்தியில் ஒத்துழைப்பதாகக் கூறினார். “இது கோ-பேக்கிங் என்று அழைக்கப்படுகிறது, நாங்கள் அமுல் மற்றும் பிற வணிக குழுக்களுடன் இதைச் செய்கிறோம். எங்களிடம் உபரி பால் இருக்கும்போது அமுல் எங்களிடமிருந்து பனீர், சீஸ் போன்ற பொருட்களை வாங்குகிறது," என்று சதீஷ் கூறினார்.
பெங்களூருவில் இ-காமர்ஸ் தளம் மூலம் புதிதாகக் தயாரிக்கப்பட்ட பாலை விற்பனை செய்யும் திட்டத்தை செயல்படுத்த அமுல் தயாராகி வருகிறது. "நாங்கள் பால் விற்காத நகரங்களில் கூட, இ-காமர்ஸ் தரவை பகுப்பாய்வு செய்தபோது, வாடிக்கையாளர்கள் எங்களுக்கு ஆதரவாக பதிலளித்தனர். எங்கள் தயாரிப்புகளுக்காக நந்தினியின் பாலை நாங்கள் அதிகம் பயன்படுத்துவோம்,” என்று மேத்தா கூறுகிறார்.

பட மூலாதாரம், Nandhini
ஒரு சந்தையில் பொருட்களுக்கு பற்றாக்குறை இல்லாத வரை, மற்றொரு கூட்டுறவு நிறுவனத்தின் பால் அங்கு விற்கப்படாது என்று கூட்டுறவு நிறுவனங்களுக்கு இடையே எப்போதும் எழுதப்படாத ஒப்பந்தம் உள்ளது என்று பெயர் வெளியிட விரும்பாத KMFஇன் ஒரு முன்னாள் அதிகாரி பிபிசியிடம் தெரிவித்தார்.
கூட்டுறவு சங்கங்களுக்கு இடையே எழுதப்படாத புரிதல் இருப்பதாக மேத்தாவும் ஒப்புக்கொள்கிறார். ஆனால் அமுலின் சமீபத்திய நடவடிக்கையை நியாயப்படுத்திய அவர், அமுல் தனது பாலின் விலையை குறைக்கவில்லை என்று கூறுகிறார். எங்கள் பொருட்களை தயாரிக்கவும் நாங்கள் நந்தினியின் பாலை வாங்கிகிறோம் என்றார் அவர்.
பெங்களூருவில் தினசரி பால் சந்தை 30 முதல் 35 லட்சம் லிட்டர்கள் ஆகும். கர்நாடகா, அமுலிடம் இருந்து பால் வாங்குவது இது முதல் முறையல்ல. அமுல், ஹூப்ளி-தார்வாட்டில் தினமும் 10,000 லிட்டர் வரை பால் விற்பனை செய்கிறது. மறுபுறம் நந்தினி வட கர்நாடகாவில் தினமும் 1.3 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்கிறது.
அமுல் பதின்மூன்று மாநிலங்களில் திரவப் பாலை பிளாஸ்டிக் பைகளில் விற்பனை செய்கிறது. குஜராத், டெல்லி, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, பிகார், மேற்கு வங்காளம், தெலங்கானா ஆகியவை இதில் அடங்கும். அதேசமயம் கார்நாடகா பால் கூட்டமைப்பு KMF, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, கோவா மற்றும் மகாராஷ்டிராவில் பால் விற்பனை செய்கிறது.

பட மூலாதாரம், DKSHIVAKUMAR
பெங்களூருவில் கேஎம்எஃப் தினசரி 26 லட்சம் லிட்டர் பாலை விற்பனை செய்கிறது. பெங்களூருவின் மொத்த நுகர்வு 33 லட்சம் லிட்டர். தேவை மிக அதிகமாக இருக்கும் தினங்களில் 94.30 லட்சம் லிட்டர் வரை பால் கொள்முதல் செய்யப்படுகிறது என்கிறார் சதீஷ்.
"உதாரணமாக ஓணம் சமயத்தில் கே.எம்.எப், தினமும் நான்கு லட்சம் லிட்டர் பாலை கேரளாவுக்கு, அங்குள்ள கூட்டுறவு சங்கத்தின் கோரிக்கையின் பேரில் வழங்குகிறது. பால் விஷயத்தில் இதுபோன்ற ஒத்துழைப்பு அண்டை மாநிலங்களுக்கு இடையே எப்போதும் இருந்து வருகிறது,” என்று குறிப்பிட்டார்.
"அவர்கள் சந்தையில் நுழைய விரும்பினால், இதுபோன்ற எதிர்ப்புகள் இருக்கக்கூடாது. டாக்டர் வர்கீஸ் குரியனின் கூட்டுறவு கொள்கையை நாங்கள் அனைவரும் பின்பற்றுகிறோம். நந்தினியிடம் தேவையை விட அதிக பால் இருக்கும்போது சந்தையில் அதன் பங்கை கைப்பற்ற அமுல் ஏன் முயல்கிறது என்பதே கேள்வி. விநியோகம் குறைவாக இருக்கும் போது தான் KMF மும்பை மற்றும் கோவாவிற்கு சென்றது. அழைத்தால் மட்டுமே KMF பிற இடங்களுக்கு செல்கிறது. ஆனால் இந்த பிரச்சனையில் அரசியல் ஏதும் இல்லை," என்று KMF இன் முன்னாள் நிர்வாக இயக்குனர் எஸ். ஏ. பிரேமானந்த் பிபிசியிடம் கூறினார்.
"வாடிக்கையாளர்களை பொருத்த வரை இந்த மாநிலத்தில் பால் நுகர்வு குறைவாக உள்ளது. நடுத்தர மற்றும் உயர் நடுத்தர வர்க்கத்தினர் மட்டுமே இங்கு பாலை பயன்படுத்துகின்றனர். கிராமப்புறங்களில் பால் நுகர்வு மிகவும் குறைவாக உள்ளது. அமுல் பாலின் விலையை லிட்டருக்கு 54 ரூபாய் என நிர்ணயம் செய்தால் அது பெரிய பிரச்சனையாக இருக்காது,” என்று சமூக மற்றும் பொருளாதார மாற்ற கழகத்தின் இயக்குனர் டி.ராஜசேகர் கூறினார்.
"இது இப்போது ஒரு அரசியல் பிரச்சனையாகத் தெரிகிறது. பொருளாதார ரீதியாகப் பார்த்தால், வாடிக்கையாளர்களுக்கு இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. விலையில் உள்ள வேறுபாடு KMF-ஐ பாதிக்கும் முக்கிய காரணியாக இருக்காது."
"ஆனால் கர்நாடகாவில் உள்ள விவசாயிகளிடம் இருந்து அமுல் நேரடியாக பாலை வாங்கினால், அது விவசாயிகளுக்குப் பலன் தரும்" என்கிறார் பால் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் மகளிர் பால் உற்பத்தியாளர்களின் அதிகாரங்கள் குறித்து ஆய்வு செய்யும் ராஜசேகர்.

பட மூலாதாரம், KMFNANDINI.COOP
அரசியலில் கொந்தளிப்பு
காங்கிரஸும், சமய சார்பற்ற ஜனதா தளமும் KMF கூட்டுறவு சங்கத்தில் அங்கம் வகிக்கும் 26 லட்சம் விவசாயிகளின் வாக்குகளைப் பெற விரும்புவதே இந்த விவகாரத்தில் அரசியல் அதிகரித்து வருவதற்கு அடிப்படைக் காரணம்.
மத்திய கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷாவை காங்கிரஸ் நேரடியாக தாக்கியுள்ளது. அமுலும் நந்தினியும் ஒத்துழைக்க வேண்டும்' என பால் உற்பத்தியாளர்களின் கூட்டத்தில் அமித்ஷா கூறியிருந்தார்.
கர்நாடகாவின் பெருமையாக கருதப்படும் நந்தினிக்கு தீங்கு விளைவிக்க அமித் ஷா சதி செய்வதாக காங்கிரஸ் கட்சி சமீபத்தில் ட்விட்டரில் குற்றம் சாட்டியது.
"குஜராத்துக்கு வெளியே அதிகபட்சமான கூட்டுறவு சங்கங்களைக் கைப்பற்ற அமித் ஷா சதி செய்கிறார். பின்னர் அவை தேர்தலில் அரசியல் ரீதியாகப் பயன்படுத்தப்படுகின்றன."
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
“தேர்தல் நேரத்தில் கர்நாடகாவில் நந்தினிக்கு எதிராக அமுலை நிறுத்தியிருப்பதன் வாயிலாக பாஜக மிகப்பெரிய அரசியல் தவறை செய்துள்ளது. நந்தினி என்ற பிராண்ட் கர்நாடக மக்களுக்கு உணர்ச்சிபூர்வமான ஒன்று. அவர்களின் பெருமை அது. நந்தினியின் தயாரிப்புகளின் தரம் பற்றி மக்களுக்கு நன்றாகத் தெரியும். கர்நாடகாவில் ஒவ்வொரு வீட்டிலும் அதன் தயாரிப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. 26 லட்சம் விவசாயிகள் கர்நாடக பால் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்கள் இருபதாயிரம் கோடி ரூபாய் விற்றுமுதல் செய்கின்றனர். கூட்டுறவு சங்கம் மாநிலத்தில் 16 மாவட்டங்களில் வலுவாக உள்ளது. முந்தைய காங்கிரஸ் அரசு ஷீரா பாக்யா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு லிட்டருக்கு 5 ருபாய் உதவி வழங்கியது. இதன் காரணமாக 2014-ல் 43 லட்சம் லிட்டராக இருந்த பால் உற்பத்தி 2018-ல் நாளொன்றுக்கு 75 லட்சம் லிட்டராக அதிகரித்தது. பின்னர் பாஜக ஆட்சியில் எந்த ஊக்கத் தொகையும் வழங்கப்படவில்லை, இப்போது கர்நாடகாவில் பால் உற்பத்தி குறைந்து சந்தையில் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது,” என்று காங்கிரஸின் சமூக ஊடகப் பொறுப்பாளர் ஒய்.பி.ஸ்ரீவத்ஸ் மற்றொரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
"குஜராத்தின் பரோடா வங்கி நமது விஜயா வங்கியை விழுங்கி விட்டது. துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அதானிக்கு வழங்கப்பட்டன. இப்போது குஜராத்தின் அமுல் எங்கள் KMF (நந்தினி) யை விழுங்கப்பார்க்கிறது. நரேந்திர மோதி அவர்களே, நாங்கள் என்ன குஜராத்தின் எதிரியா?" என்று காங்கிரஸ் தலைவர் சித்தராமையா,பிரதமரை நோக்கி எழுதியுள்ள ஒரு ட்வீட்டில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3
அதே நேரத்தில், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் டி.கே.சிவக்குமார், ஹாசனில் உள்ள நந்தினி விற்பனை நிலையத்துக்குச் சென்று, அங்குள்ள மக்களுக்கு நந்தினியின் பால் பொருட்களை விநியோகம் செய்தார். குஜராத் விவசாயிகளுடன் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் நந்தினியின் சந்தையில் அத்துமீறி நுழைவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அப்போது அவர் தெரிவித்தார்.
"இரட்டை முகம் கொண்ட காங்கிரஸ். கர்நாடக சந்தையில் ஹெரிடேஜ்-ஆந்திரா, தோத்லா-தெலங்கானா, மில்க்மிஸ்ட்-தமிழ்நாடு, ஆரோக்கியா- தமிழ்நாடு, ஹட்சன்-தமிழ்நாடு என பல பிராண்டுகள் உள்ளன. பிறகு அமுல் பற்றி மட்டும் ஏன் கேள்வி?” என்று மற்றொரு ட்விட்டர் பயனரான வினோத் டி ரத்தி எழுதியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 4
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












