BBC தமிழ் இணையதளத்தில் கடந்த சில நாட்களில் வெளியான, நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய செய்திகள்

பட மூலாதாரம், RAJ BHAVAN, TAMIL NADU
BBC தமிழ் இணையதளத்தில் கடந்த சில நாட்களில் வெளியான, நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய செய்திகள்.
வணக்கம் நேயர்களே! இந்த வாரம் உங்களுக்கு அருமையானதாக அமைந்திருக்கும் என்று நம்புகிறோம். இந்த வாரம் உலகமெங்கும் பல்வேறு விடயங்கள் நடந்தன, அவற்றை நாங்கள் தனித்தனி செய்திகளாக வெளியிட்டிருந்தோம்.
எனினும், நீங்கள் அவற்றில் சில முக்கியமான செய்திகளை தவற விட்டிருக்கலாம்.கவலை வேண்டாம். உங்களுக்காகவே இந்த வாரத்தில் வெளியான ஐந்து சிறப்பு கட்டுரைகளின் துணுக்குகளை இங்கே ஒரே இடத்தில் தொகுத்தளிக்கிறோம்.
நீங்கள் விரும்பும் கட்டுரையை அதற்கு கீழே உள்ள இணைப்பில் கிளிக் செய்து முழுவதும் படிக்க முடியும். பிபிசி தமிழில் நாங்கள் எப்போதுமே செய்திகளை மாறுபட்ட கோணத்தில் அளிப்பதுடன், ட்ரெண்டில் உள்ள செய்திகளை கலவையாக அளித்து வருவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
அந்த வகையில் இந்த வாரம், ஆன்லைன் ரம்மி தடை மசோதா சர்ச்சையால் ஆளுநர் ரவி மீது பிரதமர் மோதி அதிருப்தியா?, இந்தியாவை கண்காணிக்க இலங்கையில் ரேடார் அமைக்கிறதா சீனா?, பாகிஸ்தான் தமிழர்கள்: பங்குனி உத்திரம் கொண்டாடும் சில நூறு குடும்பங்களின் கதை, எட்டு வயதில் மாதவிடாய் - ஏன் இப்படி நடக்கிறது? மொபைல் போன்கள் காரணமா?, நாவலை வெற்றிப்படமாக்க வெற்றிமாறன் கையாளும் உத்தி எது? நாவல் ஆசிரியர்களை படம் திருப்திப்படுத்துகிறதா? என்பன உள்ளிட்ட ஐந்து கட்டுரைகளை இங்கே தொகுத்தளித்துள்ளோம்.
ஆன்லைன் ரம்மி தடை மசோதா சர்ச்சையால் ஆளுநர் ரவி மீது பிரதமர் மோதி அதிருப்தியா?
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக நிறைவேற்றி அனுப்பப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவுக்கு மாநில ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்து விட்டபோதிலும், அந்த ஒப்புதல் கிடைத்த கால கட்டம் புதிய சந்தேகங்களுக்கு வழிவகுத்துள்ளது.
இதுவரை மசோதாவுக்கு எதிரான சமிக்ஞைகளை காட்டிக் கொண்டிருந்த ஆளுநர், திடீரென நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு ஒப்புதல் கொடுத்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழ்நாடு அரசின் தொடர்ச்சியான நெருக்கடியுடன், ஆளுநர் மீதான பிரதமர் மோதியின் அதிருப்தியும் சேர்ந்து கொண்டதே இதற்குக் காரணம் என்ற கருத்து வெளியாகியுள்ளது. முழுமையாக அறிய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
இந்தியாவை கண்காணிக்க இலங்கையில் ரேடார் அமைக்கிறதா சீனா?

பட மூலாதாரம், Getty Images
இலங்கையின் தேவேந்திரமுனை பகுதியை அண்மித்துள்ள வனப் பகுதியில் ரேடார் கட்டமைப்பு முகாமொன்றை சீனா அமைக்க திட்டமிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் வெளியிட்ட செய்தி, இந்தோ பசுபிக் வலயத்தின் பூகோள அரசியலில் மீண்டும் பேசு பொருளாக மாறியுள்ளது.
முழுமையாக அறிய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
பாகிஸ்தான் தமிழர்கள்: பங்குனி உத்திரம் கொண்டாடும் சில நூறு குடும்பங்களின் கதை
பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சியில் வசிக்கும் ஒரு சிறிய தமிழ்ச் சமூகம் சமீபத்தில் பங்குனி உத்திரத் திருவிழாவை உற்சாகத்துடன் கொண்டாடியது.
கராச்சியின் கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள மதராசி பாராவில் சில நூறு தமிழ் குடும்பங்கள் வசிப்பதாக சமூக மதிப்பீடுகள் காட்டுகின்றன. இங்கு தென்னிந்தியாவில் உள்ள மதராஸிலிருந்து (இப்போது சென்னை) இடம்பெயர்ந்த இந்துக்களின் மக்கள்தொகை அதிகமாக உள்ளது.
முழுமையாக அறிய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
எட்டு வயதில் மாதவிடாய் - ஏன் இப்படி நடக்கிறது? மொபைல் போன்கள் காரணமா?
சிறு வயதிலேயே பெண் குழந்தைகளுக்கு மாதவிடாய் ஏற்படும் நிகழ்வுகள் இன்று மிகவும் பொதுவாக நடக்கிறது. இதனால், பெற்றோர் மத்தியில் பதற்றமும், கவலையும் அதிகரித்து வருகிறது.
இளம் வயதில் மாதவிடாய் ஏற்படுவதால் இந்த குழந்தைகளுக்கு என்ன நடக்கிறது என்று கூட புரிவதில்லை.
சானிட்டரி நாப்கின் எப்படி பயன்படுத்த வேண்டும்? மாதவிடாய் காலத்தின் போது என்ன செய்ய வேண்டும்? மாதவிடாயின் போது ஏற்படும் உடல், மன ரீதியான பிரச்னைகளை எப்படி எதிர்கொள்வது என்று இந்த சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு உரிய விழிப்புணர்வை அவர்களின் அம்மாக்கள் தான் கொடுக்க வேண்டும்.
முழுமையாக அறிய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
நாவலை வெற்றிப்படமாக்க வெற்றிமாறன் கையாளும் உத்தி எது? நாவல் ஆசிரியர்களை படம் திருப்திப்படுத்துகிறதா?

பட மூலாதாரம், VIDUTHALAI MOVIE
நாவல்களைத் தழுவி இயக்குநர் வெற்றிமாறன் உருவாக்கிய படங்கள் அனைத்தும் விமர்சனரீதியாகவும் வர்த்தகரீதியாகவும் வெற்றியடைந்தவை என்பது தமிழ் சினிமா அறிந்ததுதான்.
இருப்பினும் அவருடைய படங்கள் அவை தழுவி எடுக்கும் புனைவுகளுக்கு முழுவதும் நியாயம் செய்தனவா என்ற கேள்வி தொடர்ந்து விவாதமாக்கப்பட்டு வருகிறது.
முழுமையாக அறிய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












