மும்பை: 101 மணிகள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட சைக்கிள்
மும்பையைச் சேர்ந்த விஜய் மல்ஹோத்ரா தனித்துவமான ஒரு சைக்கிளை வைத்துள்ளார், இது 101 மணிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மும்பையின் நெரிசலான தெருக்களில் அடிக்கடி இதைக் காணலாம்.
"ஒரு நாள் எனக்கு ஒரு யோசனை தோன்றியது. மணிகள் போன்றவற்றை வைத்து என் சைக்கிளை அலங்கரிக்க வேண்டும் என்று நினைத்தேன். எனது சைக்கிளில் 101 மணிகளை பொருத்தியுள்ளேன். 101 என்ற எண்ணிக்கை கூட தற்செயலாக தோன்றியது தான்." என்கிறார் விஜய் மல்ஹோத்ரா.
விஜய் இந்த அலங்கரிக்கப்பட்ட சைக்கிள் மூலம் சாலை பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
2023ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகளின் மதிப்புமிக்க உலக சைக்கிள் தின விருதை விஜய் பெற்றார்.
ஒரு உன்னத நோக்கத்திற்காக சைக்கிள் ஓட்டுவதை ஊக்குவிப்பதில் அவரது முயற்சிகளுக்கு உலகளவில் பாராட்டுகள் கிடைக்கின்றன. ஐநா விருதே இதற்கு சாட்சி.
செய்தியாளர் மற்றும் படத்தொகுப்பு: ராகுல் ரன்சுபே


பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



