காணொளி: இரான் அரசுக்கு எதிராக லண்டனில் நடந்த போராட்டம்
காணொளி: இரான் அரசுக்கு எதிராக லண்டனில் நடந்த போராட்டம்
இரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தொடரும் நிலையில், லண்டனில் உள்ள இரானியர்கள் இரான் தூதரகம் முன்பாக போராட்டம் நடத்தினர்.
போராட்டக்காரர்களில் ஒருவர், தூதரகத்தின் பால்கனியில் இருந்த இரான் கொடியை அகற்றிவிட்டு, ‘சிங்கம் மற்றும் சூரியன் சின்னம் பொறிக்கப்பட்ட கொடியை அசைத்தார்.
‘சிங்கம் மற்றும் சூரியன்’ சின்னம் பொறிக்கப்பட்ட இந்த கொடி, 1979 இஸ்லாமிய புரட்சிக்கு முன்பு இரானின் அதிகாரப்பூர்வ கொடியாக இருந்தது.
பல போராட்டக்காரர்கள் இரானின் கடைசி ஷாவின் வெளிநாட்டில் வசிக்கும் மகனான ரெசா பஹ்லவி நாடு திரும்ப வேண்டுமென கோரிக்கை வைக்கின்றனர்.
முழு பேட்டியை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.



