காணொளி: 'தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி இருக்காது' - ஐ.பெரியசாமி

காணொளிக் குறிப்பு, தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி இருக்காது - ஐ.பெரியசாமி
காணொளி: 'தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி இருக்காது' - ஐ.பெரியசாமி

தமிழ்நாட்டில் அடுத்த சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்பது மீண்டும் விவாதப் பொருளாகியிருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் பலரும் இந்தக் கருத்தை பேசி வருகின்றனர்.

ஆனால், ஆளும்கட்சியான திமுக இந்த கோரிக்கை பற்றி வெளிப்படையாக எதுவும் பேசவில்லை. இந்த நிலையில் திண்டுக்கலில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் செய்தியாளர்கள் கூட்டணி ஆட்சி கோரிக்கை பற்றி கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்துப் பேசியவர், "கேட்பது அவர்கள் உரிமை. இங்கு எப்போதுமே கூட்டணி ஆட்சி கிடையாது. தனிப்பட்ட கட்சியின் ஆட்சி தான் இங்கு உள்ளது. இதில் எந்த சந்தேகமும் கிடையாது. தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி இருக்காது. முதல்வர் அதில் உறுதியாக இருக்கிறார்." என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு