காணொளி: இரான் தேசிய கொடிக்கு பதில் வேறு கொடி ஏற்றும் மக்கள்
இரானில் போராட்டம் தொடரும் நிலையில், தற்போதுள்ள இஸ்லாமியக் குடியரசு கொடியைக் கிழித்து, சில இடங்களில் சிங்கம் மற்றும் சூரியன் பொறித்த கொடியை போராட்டக்காரர்கள் ஏற்றுகின்றனர்.
ஆனால் ஏன்?
16 ஆம் நூற்றாண்டிலிருந்து பல்வேறு வடிவங்களில் பயன்படுத்தப்பட்டு வந்த சிங்கம் மற்றும் சூரியன் கொடி, 1906-ஆம் ஆண்டின் அரசியலமைப்பின் கீழ் இரானின் அதிகாரப்பூர்வத் தேசியக் கொடியானது.
இந்தச் சின்னம் பஹ்லவி வம்சத்தைச் சார்ந்தது என்றாலும் இரானின் பழங்கால வரலாறு மற்றும் பாரம்பரியத்துடன் தொடர்புடையது.
சிங்கம் மற்றும் சூரிய சின்னம் வரலாறு ரீதியாக ஆட்சியாளரின் அதிகாரத்தையும் முதல் ஷிடே இமாம் ஆன அலியின் ஆட்சியையும் குறிக்கின்றது.
1979-ஆம் ஆண்டில் நிகழ்ந்த இரானிய புரட்சியால் மன்னராட்சி முடிவுக்கு வந்தது, துலிப் மலர் போன்று அமைந்த "அல்லா" வார்த்தை உள்ள கொடியை மாற்றப்பட்டது. அரசுக்கு எதிரான போராட்டத்தில், சிங்கம் மற்றும் சூரியன் பொறித்த கொடி எதிர்ப்பின் சின்னமாகப் பயன்படுத்தப்படுகிறது.
இரானிய நாணயத்தின் மதிப்பு கடும் வீழ்ச்சியைச் சந்தித்ததால் ஏற்பட்ட மக்கள் கோபத்தால் உருவான இந்தப் போராட்டம், தற்பொழுது இரானின் அதி உயர் தலைவரான அயதுல்லா அலி காமனெயின் மதகுருமார்களின் ஆட்சிக்கு எதிரானதாக மாறியுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



