சொந்த அணிக்கே சேதம் விளைவிக்கும் இம்பாக்ட் வீரர்கள்

'இம்பாக்ட்' வீரர்கள் சாதித்தது என்ன?

பட மூலாதாரம், BCCI/IPL

படக்குறிப்பு, துஷார் தேஷ்பாண்டே

நடப்பு ஐ.பி.எல். தொடரில் அறிமுகப்படுத்தப்பட்ட இம்பாக்ட் பிளேயர் விதியை கிட்டத்தட்ட எல்லா அணிகளுமே பயன்படுத்தியுள்ளன. அவ்வாறு. போட்டியின் நடுவே களமிறங்கும் வாய்ப்பு பெற்ற வீரர்கள் சாதித்தது என்ன? எதிர்பார்த்தபடி ஆட்டத்தின் போக்கை மாற்றினார்களா? புள்ளிவிவரம் என்ன சொல்கிறது?

கிரிக்கெட் தோன்றிய வரலாற்றை திரும்பிப் பார்த்தால் டெஸ்ட் போட்டிகளே முதலில் விளையாடப்பட்டுள்ளன. அதனை விறுவிறுப்பானதாக்கும் முயற்சியே ஒருநாள் போட்டிகளாகவும், பின்னர் இருபது ஓவர் போட்டிகளாகவும் பரிணாமம் பெற்றது. வெறும் மூன்றரை மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடக் கூடிய இருபது ஓவர் போட்டிகள் ரசிகர்களை அதிகம் கவர்ந்துவிட்டதில் ஆச்சர்யம் இல்லை.

இம்பாக்ட் பிளேயர் விதி சொல்வது என்ன?

தற்போது, இருபது ஓவர் போட்டிகளிலும் சுவாரஸ்யம் கூட்டும் பொருட்டு இம்பாக்ட் பிளேயர் என்ற விதி, நடப்பு ஐ.பி.எல். தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, ஆட்டத்திற்கு நடுவே இரு அணிகளுமே தேவை என்று என்று எண்ணும் நேரத்தில் இம்பாக்ட் பிளேயரை களமிறக்கலாம். ஆடும் லெவனில் இடம் பெறும் 11 வீரர்களைப் போல இம்பாக்ட் பிளேயரால் முழுமையாக பேட்டிங்கும், பவுலிங்கும் செய்ய முடியும்.

டாஸ் வெல்லும் அணிக்கு இருக்கும் சாதகமான விஷயங்களை சமன்படுத்தி எதிரணிக்கும் போட்டியை வெல்வதற்கான சம வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதே இதன் நோக்கம். இதன் மூலம் இருபது ஓவர் போட்டிகள் மேலும் விறுவிறுப்பானதாகவும், சுவாரஸ்யமானதாகவும் மாறும் என்று ஐ.சி.சி.யும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் நினைக்கின்றன. நடப்பு ஐ.பி.எல். தொடரில் அந்த எண்ணம் ஈடேறியதா? என்பதை நடந்து முடிந்த போட்டிகளின் புள்ளிவிவரம் வாயிலாகப் பார்க்கலாம்.

'இம்பாக்ட்' வீரர்கள் சாதித்தது என்ன?

பட மூலாதாரம், Getty Images

சென்னை சூப்பர் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ்

துஷார் தேஷ்பாண்டே

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த வேகப்பந்துவீச்சாளரான துஷார் தேஷ்பாண்டேதான் ஐ.பி.எல். வரலாற்றில் முதல் இம்பாக்ட் பிளேயர் ஆவார். அகமதாபாத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிய முதல் ஆட்டத்தில் சென்னை அணி பேட்டிங் முடித்ததும், அம்பத்தி ராயுடுவுக்குப் பதிலாக அவர் களம் கண்டார்.

சென்னை அணியின் வேகப்பந்துவீச்சு பலவீனத்தை சரி செய்யும் பொருட்டு களமிறக்கப்பட்ட அவர், அணியின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. 3.2 ஓவர்கள் மட்டுமே பந்துவீசிய தேஷ்பாண்டே 51 ரன்களை வாரிக்கொடுத்தார். 6 பந்துகளில் 8 ரன் தேவை என்ற நிலையில் தேஷ்பான்டே வீசிய கடைசி ஓவரின் முதலிரு பந்துகளையும் பவுண்டரி, சிக்சருக்கு அனுப்பி குஜராத் டைட்டன்ஸ் அணி எளிதில் வெற்றியை ருசித்தது.

'இம்பாக்ட்' வீரர்கள் சாதித்தது என்ன?

பட மூலாதாரம், BCCI/IPL

படக்குறிப்பு, துஷார் தேஷ்பாண்டே

சாய் சுதர்சன்

அந்த ஆட்டத்தில் பீல்டிங்கின் போது காயமடைந்த கேன் வில்லியம்சனுக்குப் பதிலாக தமிழ்நாட்டைச் சேர்ந்த சாய் சுதர்சனை குஜராத் டைட்டன்ஸ் அணி இம்பாக்ட் பிளேயராக களத்தில் இறக்கியது. சவாலான இலக்கைத் துரத்திய குஜராத் அணிக்கு அவர் ஒன்டவுன் பேட்ஸ்மேனாக களம் கண்டார்.

விருத்திமான் சாஹா - சுப்மன் கில் தொடக்க ஜோடி தந்த அதிரடி தொடக்கத்தை அப்படியே தொடர்ந்து, ரன் ரேட் குறையாமல் பார்த்துக் கொண்டார். இதன் மூலம் அந்த அணியின் உத்வேகமும் குறையவில்லை, நெருக்கடியும் எழவில்லை. சேஸிங்கில் 17 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் அவர் எடுத்த 22 ரன்களும், அந்த தருணமும் குஜராத் அணிக்கு மிகவும் முக்கியமாக அமைந்தது.

பஞ்சாப் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

வெங்கடேஷ்

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் வெங்கடேஷ் ஐயரை இம்பாக்ட் பிளேயராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பயன்படுத்திக் கொண்டது. வருண் சக்ரவர்த்திக்கு பதிலாக உள்ளே நுழைந்த அவர் 28 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 34 ரன்கள் சேர்த்து அணியின் எதிர்பார்ப்பை ஓரளவு பூர்த்தி செய்தார். ஆனால், அது அணியின் வெற்றிக்கு போதுமானதாக இருக்கவில்லை.

ரிஷி தவான்

கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான போட்டியில் ராஜபக்சவுக்கு பதிலாக அனுபவமிக்க ஆல்-ரவுண்டரான ரிஷி தவானை பஞ்சாப் கிங்ஸ் அணி இம்பாக்ட் பிளேயராக களமிறக்கியது. அவர் வீசிய ஒரே ஓவரில் எதிரணி இம்பாக்ட் வீரரான வெங்கடேஷூம், இளம் வீரர் நிதிஷ் ராணாவும் சேர்ந்து 15 ரன்களைக் குவித்தனர். இதனால், ரிஷி தவானுக்கு மேற்கொண்டு எந்த ஓவரும் வீச வாய்ப்பு தரப்படவில்லை.

டெல்லி கேப்பிடல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

அமன் ஹக்கீம் கான்

இம்பாக்ட் பிளேயர் விதியை தேவை எழுந்தவுடனே வெகு துரிதமாக இரு அணிகளும் பயன்படுத்திக் கொண்டதற்கான உதாரணம் இந்த போட்டிதான். பீல்டிங்கில் மிக மோசமாக செயல்பட்ட வேகப்பந்துவீச்சாளர் கலீல் அகமது, தனது கடைசி ஓவரை ஆட்டத்தின் 19-வது ஓவராக வீசி முடித்ததுமே அவரை வெளியேற்றிவிட்டு இம்பாக்ட் பிளேயராக அமன் ஹக்கீம் கான் டெல்லி கேப்பிடல்ஸ் அணி உள்ளே கொண்டு வந்தது. கலீலின் மோசமான பீல்டிங்கை அடுத்த 6 பந்துகள் கூட பொறுத்துக் கொள்ள முடியாது என்ற வகையில் இருந்தது அந்த அணியின் அதிரடி முடிவு. ஆனால், அமன் பேட்டிங்கில் 4 ரன்கள் மட்டுமே சேகரித்து, எதிர்பார்த்த பலனைத் தராமல் போய்விட்டார்.

கிருஷ்ணப்பா கௌதம்

இம்பாக்ட் பிளேயர் விதியை சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட அணிகளில் ஒன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி. டெல்லி கேப்பிடல்சுக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி ஓவரின் 5-வது பந்தில் அவுட்டான ஆயுஷ் படோனிக்குப் பதிலாக ஒரு பந்தை மட்டுமே எதிர்கொள்ள கிருஷ்ணப்பா கௌதமை அந்த அணி களமிறக்கியது. அவரும், சந்தித்த ஒரே பந்தை சிக்சருக்கு அனுப்பி அணி எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தார். அதேநேரத்தில், 4 ஓவர்கள் பந்துவீசிய அவர் 23 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். இலக்கைத் துரத்திய எதிரணிக்கு அவரது கட்டுக்கோப்பான பந்துவீச்சு பெரும் நெருக்கடியாக அமைந்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

இம்பாக்ட் பிளேயர்கள் சாதித்தது என்ன?

பட மூலாதாரம், TWITTER/IPL

அப்துல் சமத்

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஃபசல்ஹாக் ஃபரூக்கிக்கு பதிலாக அப்துல் சமதை இம்பேக்ட் ப்ளேயராக உள்ளே கொண்டுவந்தது. அவரும் இரண்டு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 32 ரன்களை எடுத்தாலும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி போட்டியை வெல்ல போதுமானதாக இல்லை.

நவ்தீப் சைனி

ஹைதராபாத்துக்கு எதிரான அதே ஆட்டத்தில், ராஜ்ஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இளம் பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வாலினுக்கு பதிலாக வேகப்பந்துவீச்சாளர் நவ்தீப் சைனி இம்பாக்ட் பிளேயராக வந்தார். 2 ஓவர்களில் 34 ரன்களை அவர் வாரி வழங்கினாலும் கூட, அந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 72 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த வெற்றியில் சைனிக்கு பெரிய அளவில் பங்கு இல்லை.

சென்னை சூப்பர் கிங்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

துஷார் தேஷ்பாண்டே

காயத்தால் கைல் ஜாமிசன் வெளியேற்றம், பென் ஸ்டோக்ஸ் காயம், தீக்ஷானா, மதீஷா பதிரானா வருகை தாமதம் போன்ற காரணங்களால் சென்னை அணியில் வேகப்பந்துவீச்சாளருக்கு பற்றாக்குறை நிலவுகிறது. ஆகவே, இம்முறையும் அந்த இடத்தை நிரப்ப துஷார் தேஷ்பாண்டேவை சென்னை அணி இம்பாக்ட் பிளேயராக களமிறக்கியது. ஆனால், முதல் ஓவரிலேயே நோபால், வைட் என மொத்தம் 18 ரன்களை வாரி வழங்கிய அவரை, அந்த ஓவருடன் தோனி ஓரங்கட்டிவிட்டார். மிடில் ஓவர்களில் சுழற்பந்துவீச்சு எடுபட்டாலும், கடைசிக் கட்டத்தில் பந்துவீச வந்த ரவீந்திர ஜடேஜாவை லக்னோ அணி புரட்டி எடுத்ததால் வேறு வழியின்றி டெத் ஓவரை வீசும் வாய்ப்பு பெற்றார் துஷார் தேஷ்பான்டே.

ஆனால், ரசிகர்களின் கணிப்பைத் தவறாக்கிய அவர், 16, 18, 20 ஆகிய 3 ஓவர்களையும் சிறப்பாக வீசி அணிக்கு வெற்றி தேடித்தந்தார். குறிப்பாக, 16, 18 ஆகிய இரு ஓவர்களிலும் 13 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்ததன் மூலம் அணியின் வெற்றியை உறுதி செய்தார். இது சென்னை அணிக்கு ஆறுதலாக அமைந்திருக்கும்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 1

ஆயுஷ் படோனி

சென்னைக்கு எதிராக மிகப்பெரிய இலக்கைத் துரத்திய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ஆவேஷ்கானுக்குப் பதிலாக இளம் வீரர் ஆயுஷ் படோனியை இம்பாக்ட் பிளேயராக பயன்படுத்தியது. நிகோலஸ் பூரன், கிருஷ்ணப்பா கவுதம் ஆகியோருக்கு உறுதுணையாக களத்தில் நின்ற அவரும், சென்னை அணிக்கு சிறிது நேரம் அச்சுறுத்தலாக விளங்கினார். 18 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்த அவர் மற்ற வீரர்களுக்கு நல்ல பார்ட்னராக களத்தில் இருநதார். ஆனால், லக்னோ அணிக்கு வெற்றி தேடித் தர அவரால் முடியவில்லை.

மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

ஜோசன் பெஹ்ரெண்டார்ஃப்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான லீக் போட்டியில் இரண்டாவதாக பீல்டிங் செய்த மும்பை அணி சூர்யகுமாருக்குப் பதிலாக இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஜோசன் பெஹ்ரெண்டார்ஃபை இம்பேக்ட் வீரராகப் பயன்படுத்தியது. கேப்டன் பாப் டுப்ளெஸ்ஸியும் நட்சத்திர வீரர் விராட் கோலியும் இணைந்தே பெங்களூரு அணியின் வெற்றியை உறுதி செய்துவிட்ட அந்த ஆட்டத்தில், பெஹரெண்டார்ஃபால் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. 3 ஓவர்களில் 37 ரன்களை வாரிக்கொடுத்த அவரால் மும்பை அணி எதிர்பார்த்த திருப்பத்தைத் தர முடியவில்லை.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 2

இம்பாக்ட் பிளேயரை பயன்படுத்தாத பெங்களூரு

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்துவீச்சு, பீல்டிங், பேட்டிங் என்று அனைத்து துறைகளிலும் முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் எந்தவொரு கட்டத்திலும் எதிரணிக்கு வெற்றி வாய்ப்பே தராத பெங்களூரு அணி இம்பாக்ட் பிளேயர் என்று யாரையும் உள்ளே கொண்டு வரவில்லை. அதற்கான தேவையும் அந்த அணிக்கு எழவில்லை.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: