எதிர்கால உணவுத் தேவைக்கு நம்பிக்கையளிக்கும் கடற்பாசி
கடற்பாசியால் உலகின் உணவு தேவையை சமாளிக்க முடியுமா?
2050க்குள் உணவு உற்பத்தி 70% அதிகரிக்கப்பட வேண்டும் என்று ஐ.நா. கூறுகிறது. மக்கள் தொகை அதிகரித்துவரும் சூழலில் சுற்றுச்சூழலில் குறைந்த தாக்கத்தை மட்டுமே ஏற்படுத்தி ஆரோக்கியமான உணவுகளுக்கு மாற்றான ஒரு எளிய உணவாக கடற்பாசி இருக்கும் என்று நம்பப்படுகிறது.
இதனால், உலகில் வேகமாக அதிகரித்துவரும் உணவு சார்ந்த தொழிலாக கடற்பாசியை பயிரிடுவது உருவெடுத்து வருகிறது.
ஜப்பான், சீனா, கொரியாவில் உணவில் கடற்பாசி முக்கிய இடம்பெறுகிறது. தற்போது மேற்கத்திய நாடுகளிலும் பிரபலமடைய தொடங்கியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)









