'யார்க்கர் கிங்' நடராஜன் லக்னோ அணிக்கு எதிராக சாதித்தது என்ன? ஹைதராபாத் வியூகம் தவிடுபொடியானது எப்படி?

பெரிதாக சோபிக்காத நடராஜன்

பட மூலாதாரம், BCCI/IPL

    • எழுதியவர், சிவகுமார் இராஜகுலம்
    • பதவி, பிபிசி தமிழ்

நடப்பு ஐ.பி.எல். தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மீண்டும் ஒரு மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் எந்தவொரு நெருக்கடியும் கொடுக்காமலேயே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பணிந்துள்ளது. இதனால், அந்த அணி புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது.

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் சொந்த மைதானமான, லக்னோ அடல் பிகாரி வாஜ்பாய் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இரண்டாவது ஆட்டம் இதுவாகும். முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, அம்மோல்ப்ரீத் சிங் அதிரடியால் சிறப்பான தொடக்கம் கண்டாலும் அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்களில் அடங்கிவிட்டது.

பின்னர் சுலப இலக்கைத் துரத்திய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி அவசரமோ, பதற்றமோ இல்லாமல் நிதானமாக ஆடி 4 ஓவர்கள் எஞ்சியிருந்த நிலையிலேயே எளிதாக இலக்கை எட்டியது.

இந்த வெற்றியின் மூலம் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியோ இரண்டாவது மோசமான தோல்வியை சந்தித்து கடைசி இடத்தில் இருக்கிறது.

மாறிப் போன லக்னோ ஆடுகளத்தின் தன்மை

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 1

புதிய மைதானமான லக்னோ மைதானத்தில் நடைபெறும் இரண்டாவது ஆட்டம் இதுவாகும். இத்தொடரின் முதல் ஆட்டத்தில் இதே மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 193 ரன்களைக் குவித்து டெல்லி கேப்பிடல்சை 50 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. ஆனால், நேற்றைய ஆட்டத்தின் போது ஆடுகளம் மிகவும் மெதுவாக இருந்தது. சுழற்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைத்தது.

ஆடுகளத்தின் தன்மை மாறிவிட்டதை முந்தைய தினமே கணித்துவிட்டதை பரிசளிப்பு நிகழ்ச்சியின் போது லக்னோ கேப்டன் லோகேஷ் ராகுல் உறுதிப்படுத்தினார். மறுபுறம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியோ நடப்பு ஐ.பி.எல். தொடரில் முதல் அணியாக டாஸ் வென்றதும் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த முடிவு தவறானது என்பதை வெகு சீக்கிரத்திலேயே அந்த அணி உணர்ந்து கொண்டது.

களத்தில் கச்சிதமாக திட்டங்களை செயல்படுத்திய லக்னோ

ஆடுகளத்தின் தன்மை மாறியிருப்பதை முன்பே கணித்துவிட்ட லக்னோ அணி அதற்கேற்ப கச்சிதமாக திட்டங்களை முன்பே வகுத்துவிட்டது. ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் என்பதை உணர்ந்து கொண்ட அந்த அணி 40 வயதாகிவிட்ட சுழற்பந்துவீச்சாளர் அமித் மிஸ்ராவை ஆடும் லெவனில் சேர்த்துக் கொண்டது. அவரும், ரன் ரேட்டை கட்டுப்படுத்தியதோடு முக்கியமான கட்டத்தில் 2 விக்கெட்டுகளையும் எடுத்து, தனது தேர்வை நியாயப்படுத்தினார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் வலது கை பேட்ஸ்மேன்கள் அதிகம் இருப்பதால், இடதுகை லெக் ஸ்பின்னரான குருணால் பாண்டியாவை தொடக்கத்திலேயே லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் பவுலிங் முனைக்கு கொண்டு வந்துவிட்டது. அதற்கு தக்க பலனும் கிடைத்தது. அம்மோல்ப்ரீத் சிங், மயங்க் அகர்வால், கேப்டன் எய்டன் மார்க்ரம் ஆகியோரை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் பேட்டிங் முதுகெலும்பை அவர் உடைத்தெறிந்தார்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 2

சுழலில் கலக்கிய குருணால் - பிஷ்னோய் - அமித் மூவர் கூட்டணி

சன்ரைசர்ஸ் சறுக்கியது எங்கே?

பட மூலாதாரம், ANI

லக்னோவில் மாறிவிட்ட ஆடுகளத்தின் தன்மையை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் குருணால் பாண்டியா - ரவி பிஷ்னோய் - அமித் கூட்டணி நன்றாக பயன்படுத்திக் கொண்டது. மூன்றாவது ஓவரிலேயே தாக்குதலைத் தொடங்கிவிட்ட இந்த மூவர் சுழற்பந்து கூட்டணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை கடைசி வரை மீண்டெழ அனுமதிக்கவே இல்லை.

6 ஓவர் பவர் பிளே முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 43 ரன் என்று நல்ல நிலையில் இருந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை, தனது ஓரே ஓவரில் அம்மோல்ப்ரீத் சிங், மார்க்ரம் ஆகியாரது விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் நிலைகுலையச் செய்தார் குருணால் பாண்டியா. பந்தை சற்று வேகமாக உள்ளே திரும்பச் செய்து அம்மோல்ப்ரீத்சிங்கை எல்.பி.டபிள்யூ செய்த குருணால், தனது அபார சுழலில் மார்க்ரம்மை காலி செய்தார்.

அடுத்த ஓவரிலேயே ஹாரி ப்ரூக்கை ரவி பிஷ்னோய் வெளியேற்ற, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் நம்பிக்கை மொத்தமாக தகர்ந்து போனது. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு குருணால் - பிஷ்னோய் - அமித் மிஸ்ரா மூவர் சுழற்பந்து வீச்சு கூட்டணி 12 ஓவர்களை வீசி 57 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியது அந்த அணியின் வெற்றிக்கு வழிவகுத்தது.

X பதிவை கடந்து செல்ல, 3
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 3

எடுபடாத பேட்டிங், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை துரத்தும் துயரம்

நடப்பு ஐ.பி.எல். தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு தொடர்ந்து இரண்டாவது போட்டியாக பேட்டிங் சரியாக கிளிக் ஆகவில்லை. முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்ணயித்த 204 ரன் இலக்கை துரத்திய போது 131 ரன்களில் அடங்கிய அந்த அணியால், நேற்றைய போட்டியிலும் பெரிய அளவில் ரன்களை குவிக்க முடியவில்லை. அந்த அணியில், கோலி, ருதுராஜ் போன்ற நட்சத்திர பேட்ஸ்மேனோ, ரன் குவிக்கும் இயந்திரமாக செயல்படும் வீரரோ அல்லது ஆந்த்ரே ரஸ்ஸல் போன்று தடாலடியாக ரன் குவிக்கும் பேட்ஸ்மேனோ இல்லை என்பது பெரிய பலவீனம்.

மிடில் ஆர்டரில் அந்த அணி எய்டன் மார்க்ரம், ஹாரி புரூக் ஆகியோரையே மலை போல் நம்பியுள்ளது. நடப்புத் தொடரில் முதல் போட்டியில் களம் கண்ட கேப்டன் மார்க்ரம் தான் சந்தித்த முதல் பந்தையே சரிவர கணிக்க முடியாமல் குருணாலின் சுழலுக்கு வீழ்ந்து போனார். இளம் வீரர் ஹாரி புரூக்கும் 2-வது போட்டியாக சாதிக்கத் தவறிவிட்டார். இதனால், அந்த அணி பெரிய அளவில் ரன் குவிக்க முடியாமல் திணறி வருவது கண்கூடாக தெரிகிறது.

X பதிவை கடந்து செல்ல, 4
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 4

எடுபடாமல் போன சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வியூகம்

தென் ஆப்ரிக்காவில் இந்த ஆண்டு அறிமுகமான உள்நாட்டு டி20 தொடரில் சன் குழுமத்திற்குச் சொந்தமான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கு கோப்பை வென்று கொடுத்த கேப்டன் எய்டன் மார்க்ரம்மின் வியூகங்கள் ஐபி.எல். தொடரில் எடுபடவில்லை. குறிப்பாக, மிகக் குறைந்த இலக்கை துரத்திய லக்னோ அணிக்கு தொடக்கத்திலேயே நெருக்கடி தர அவர் தவறிவிட்டார்.

சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில், தனது பிரதான சுழற்பந்துவீச்சாளரான அடில் ரஷித்தை தொடக்கத்திலேயே பயன்படுத்தாமல் வாஷிங்டன் சுந்தரை பயன்படுத்தி அவர் தவறிழைத்துவிட்டார். இரண்டாவது ஓவரை வீசிய வாஷிங்டன் சுந்தரை லோகேஷ் ராகுல் - கைல் மேயர்ஸ் இணை பஞ்சராக்கி அனுப்பிவிட்டது. எதிர்பார்க்கப்பட்டதைக் காட்டிலும் தாமதமாக பந்துவீச வந்த அடில் ரஷித், தனது ஓவரில் ராகுல், ஷெப்பர்ட் ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்திய போதும் லக்னோ அணிக்கு நெருக்கடி தர முடியவில்லை. ஏனெனில், அப்போது அந்த அணி வெற்றி பெற 4 ரன்களே தேவையாக இருந்தது.

X பதிவை கடந்து செல்ல, 5
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 5

பெரிதாக சோபிக்காத நடராஜன்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் முக்கிய பங்கு வகிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் நடராஜன் நேற்றைய ஆட்டத்தில் பெரிதாக சோபிக்கவில்லை. லக்னோ அணி எளிய இலக்கை நோக்கி இலகுவாக முன்னேறிக் கொண்டிருந்த போது, தமிழ்நாட்டு ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த 'யார்க்கர் கிங்' நடராஜன் பத்தாவது ஓவரை வீச வந்தார். ஆனால், களத்தில் செட்டிலாகிவிட்ட லோகேஷ் ராகுல் - குருணால் பாண்டியா ஜோடியை அவரால் அச்சுறுத்தல் முடியவில்லை. அந்த ஓவரில் லக்னோ அணி 10 ரன்களை திரட்டி விட்டது. அடுத்த ஓவரில் 5 ரன்களைக் கொடுத்த நடராஜன் வீசிய மூன்றாவது ஓவரில் லக்னோ அணிக்கு நிகோலஸ் பூரன் சிக்சர் அடித்து வெற்றித் தேடிக் கொடுத்தார்.

நேற்றைய ஆட்டத்தில் நடராஜன் 3 ஓவர்கள் பந்துவீசி 23 ரன்களை விட்டுக் கொடுத்து விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை. காயங்களால் அவதிப்படும் நடராஜன் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிக்க இந்த ஐ.பி.எல். தொடரில் அசத்துவார் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

பெரிதாக சோபிக்காத நடராஜன்

பட மூலாதாரம், BCCI/IPL

ஜாகிர் கானுக்குப் பிறகு சிறந்த இடது கை வேகப்பந்துவீச்சாளரைத் தேடிக் கொண்டிருக்கும் இந்திய அணியில் இடம் பிடிக்க நடப்பு ஐ.பி.எல். தொடரில் நடராஜன் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம். ஏனெனில், 2020-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் நடராஜனின் அசத்தல் செயல்பாடே அடுத்து வந்த சில மாதங்களிலேயே இந்திய அணிக்காக சர்வதேச அளவில் இருபது ஓவர், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அவர் களமிறங்க பாதை வகுத்துக் கொடுத்தது என்பது நினைவுகூரத்தக்கது.

ஆல் ரவுண்டராக அசத்திய குருணால் பாண்டியா

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு கிடைத்த எளிதான வெற்றியில் ஆல் ரவுண்டராக அசத்திய குருணால் பாண்டியா முக்கிய பங்கு வகித்தார். முந்தைய இரு போட்டிகளிலும் தலா 2 ஓவர்களை மட்டுமே வீசிய குருணால் பாண்டியாவை இம்முறை அந்த அணி முழுமையாக பயன்படுத்திக் கொண்டது. அவரும் 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு 4 ஓவர்களில் வெறும் 18 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார்.

பவுலிங் மட்டுமின்றி பேட்டிங்கிலும் குருணால் பாண்டியா அசத்தினார். நான்காவது வரிசையில் களம் கண்ட அவர், அதிரடியாக விளையாடி சன்ரைசர்ஸ் அணிக்கு சிறிதும் நம்பிக்கை வராதபடி பார்த்துக் கொண்டார். 23 பந்துகளை எதிர்கொண்ட அவர் ஒரு சிக்சர், 4 பவுண்டரிகளுடன் 34 ரன்களை சேர்த்தார். அவரது ஸ்டிரைக் ரேட் 147.83-ஆக இருந்தது.

சன்ரைசர்ஸ் சறுக்கியது எங்கே?

பட மூலாதாரம், BCCI/IPL

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் சூப்பர் பேட்டிங்

ஒரு புறம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங் கிளிக் ஆகாமல் தடுமாற, மறுபுறம் லக்னோ அணிக்கு தொட்டதெல்லாம் வெற்றியாக மாறியது. எளிதான இலக்கைத் துரத்தியதால் அந்த அணி கேப்டன் லோகேஷ் ராகுல் எந்தவொரு நெருக்கடியும் இன்றி விளையாடி மீண்டும் பார்முக்கு வந்துள்ளார். 35 ரன்கள் சேர்த்த அவர், அந்த அணியின் வெற்றியை உறுதி செய்த பின்னரே கடைசிக் கட்டத்தில் வெளியேறினார்.

குருணால் பாண்டியாவை நான்காவது வரிசையில் அந்த அணி களமிறக்கியதற்கு நல்ல பலனும் கிடைத்தது. கடந்த 2 போட்டிகளிலும் அசத்திய நிக்கோலஸ் பூரன் இருக்கையில், ரொமாரியோ ஷெப்பர்டை களமிறக்கி அந்த அணி பரீட்சித்தும் பார்த்தது. ஆனால், அதற்கு பலன் கிடைக்கவில்லை. ரொமாரியோ டக்அவுட் ஆகிப்போனார். ஆனாலும் அது அந்த அணியின் வெற்றியை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. டி20 வரலாற்றில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தென் ஆப்ரிக்கா பெற்ற வரலாற்று வெற்றியில் சதம் அடித்து முக்கிய பங்கு வகித்த குயின்டான் டி காக்கை இம்பாக்ட் வீரராக களமிறக்கத் தேவையில்லை எனும் அளவுக்கு அந்த அணியின் பேட்டிங் வரிசை சிறப்பாக இருந்தது.

சன்ரைசர்ஸ் சறுக்கியது எங்கே?

பட மூலாதாரம், BCCI/IPL

இம்பாக்ட் வீரரைக் காட்டிலும் ஆடும் லெவனில் கூடுதல் கவனம் அவசியம்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நேற்றைய ஆட்டத்தில் இம்பாக்ட் வீரரை எவ்வாறு பயன்படுத்துவது என்பதில் அதீத கவனம் செலுத்தியது போல் தெரிந்தது. 4 வெளிநாட்டு வீரர்கள் ஒதுக்கீட்டில், மார்க்ரம், ஹாரி புரூக், அடில் ரஷீத் ஆகிய 3 பேரை மட்டுமே களமிறக்கிய அந்த அணி, ஆட்டத்தின் போக்கிற்கு ஏற்ப ஹெயின்ரிச் கிளாசன், மார்க்கோ ஜான்சென் அல்லது ஃபரூக்கி ஆகியோரை இம்பாக்ட் வீரராக களமிறக்க திட்டமிருந்தது.

9 ஓவர்களில் 55 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில், ஹெயின்ரிச் கிளாசனை அடுத்து களமிறக்க அந்த அணி தயாராக இருந்தது. அவரும் பேடு, கிளவுஸ் போட்டு தயாராக இருந்தார். ஆனால், 18-வது ஓவர் வரை அடுத்து விக்கெட் விழாததால் அந்த அணி முடிவை மாற்றிக் கொண்டது. ஆனால், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியோ எந்தவொரு தடுமாற்றமும் இல்லாமல் அமித் மிஷ்ரா பந்துவீசி முடித்ததும் ஆயுஷ் படோனியை இம்பாக்ட் வீரராக களமிறக்கிவிட்டது.

இனைக் குறிப்பிட்டே, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இம்பாக்ட் பிளேயரை பயன்படுத்துவதைக் காட்டிலும் ஆடும் லெவனை தேர்வு செய்வதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரும், கேப்டன் மற்றும் நட்சத்திய வீரராக திகழ்ந்தவருமான அனில் கும்ப்ளே அறிவுறுத்தினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: