டிரம்ப்புக்கு எதிராக வழக்கு தொடுக்கிறது அமெரிக்க மாநிலம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு சொந்தமான வணிக நிறுவனங்களுக்கு சில வெளிநாடுகள் பணம் தந்துள்ளதாகவும், இவை அமெரிக்க அரசியல் சட்டத்தின் ஊழலுக்கெதிரான ஷரத்துக்களை மீறுவதாகவும் கூறி, அவருக்கெதிராக, அமெரிக்க மாநிலமான மேரிலாண்ட் மற்றும் கொலம்பியா மாவட்டம் ஆகியவை வழக்கு தொடர்ந்திருக்கின்றன.

டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

அதிபர் டிரம்ப்பின் வணிகத்தால் ஏற்படும் 'முரண்பட்ட அக்கறைகள்' நாட்டின் ஜனநாயகத்தை அச்சுறுத்துவதாக மேரிலாண்ட் மாநிலத்தின் தலைமை அரச வழக்கறிஞர் பிரையன் ஃப்ரோஷ் கூறினார்.

டிரம்ப் தனது அதிபர் பதவியை ஒரு விற்பனைக் கருவியாகப் பயன்படுத்தி தனது ஹோட்டல்களுக்கு வெளிநாட்டு ராஜ தந்திரிகளை அழைக்கிறார் என்றும் உலகத் தலைவர்களை டிரம்புக்கு சொந்தமான வளாகங்களுக்கு அழைத்துச் செல்கிறார் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

இந்த வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று அதிபர் அலுவலகம் இதை நிராகரித்துள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்