தெய்வநிந்தனை கருத்துக்கள்: ஃபேஸ்புக் நிறுவனம் மீது பாகிஸ்தானில் நடவடிக்கையா?
தனது வலைதளத்தில் இருந்து தெய்வநிந்தனை கருத்துக்களை நீக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள ஃபேஸ்புக் வலைதள நிர்வாகம், ஏற்கனவே 85 சதவிகிதத்தை நீக்கிவிட்டதாக பாகிஸ்தான் அரசு கூறுகிறது.

பட மூலாதாரம், EPA
ஃபேஸ்புக்கிற்கு தடை விதிப்பதற்கு எதிராக தான் அறிவுறுத்தப்பட்டதாக, பாகிஸ்தான் உள்துறை அமைச்சக உயரதிகாரி ஆரிஃப் கான், இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் கூறினார்.
ஃபேஸ்புக் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக அண்மையில் பாகிஸ்தான் அரசு கடிதம் எழுதியிருந்தது.
இந்த விவகாரம் குறித்து பேஸ்புக் வெளிப்படையாக எதுவும் தெரிவிக்கவில்லை என்றபோதிலும், பாகிஸ்தானுக்கு தனது பிரதிநிதி ஒருவரை விரைவில் அனுப்ப திட்டமிடுவதாக சில அறிக்கைகள் கூறுகின்றன.
தெய்வநிந்தனை கருத்துக்களை ஃபேஸ்புக்கில் வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டு, கடந்த வாரம் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
பாகிஸ்தானின் கடுமையான தெய்வநிந்தனை சட்டங்கள் சர்ச்சைக்குரியதாக இருந்தாலும், இந்த விவகாரம் உணர்வுப்பூர்வமாகவும், உணர்ச்சிகளை தூண்டிவிடுவதாகவும் இருக்கிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












