You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை வரலாற்றில் இல்லாத விலைவாசி உயர்வு: போராட்டம்,பொருளாதாரம், ராணுவம் பற்றிய கேள்விகளுக்கு பதில்கள்
இலங்கையின் பொருளாதார நெருக்கடி தற்போது தீவிரமடைந்துள்ள இந்த தருணத்தில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வன்முறைகள் நடந்து வருகின்றன.
பெரும்பாலான பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், போலீஸார், ராணுவத்தினர், விசேட அதிரடி படையினர், கடற்படையினர், விமானப்படையினர் என அனைத்து தரப்பினரும் பாதுகாப்பு கடமைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ராஜபக்ஷக்களுக்கு எதிரான வாசகங்களை உள்ளாடைகளில் எழுதி எதிர்ப்பு தெரிவிக்கும் அளவுக்குச் சென்றனர் அரசுக்கு எதிரான போராட்டக்காரர்கள். அரசு தரப்பின் ஆதரவாளர்கள் அவர்களைத் தாக்கியதும் போராட்டம் வன்முறையாக மாறியது.
இலங்கையில் தற்போது நடப்பவை குறித்த சில முக்கியக் கேள்விகளுக்கு பதிலளிக்கிறது பிபிசி தமிழ்.
இலங்கையில் விலைவாசி உயர்வு: மக்கள் வீதிக்கு வந்து போராடுவது ஏன்?
இலங்கை பொருளாதார நெருக்கடியின் உச்சத்திற்கு சென்றுள்ளது. நாட்டிலுள்ள அடிமட்ட மக்கள் முதல் செல்வந்தர்கள் வரை அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விலைவாசி உயர்வு மக்கள் போராட்டங்களுக்கு வித்திட்டுள்ளதுடன், அரசியல் நெருக்கடியையும் உண்டாக்கியுள்ளது.
விரிவாகப் படிக்க: இலங்கையில் விலைவாசி உயர்வு: மக்கள் வீதிக்கு வந்து போராடுவது ஏன்?
இலங்கை உணவுப் பிரச்னைக்கு இயற்கை உரத்தை கட்டாயமாக்கியது காரணமா?
விரிவாகப் படிக்க: இலங்கை உணவுப் பிரச்னைக்கு இயற்கை உரத்தை கட்டாயமாக்கியது காரணமா?
இலங்கையில் ராணுவ ஆட்சி வருமா?
பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிப்போரை கண்டால், துப்பாக்கி சூடு நடத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்த உத்தரவானது, ராணுவ ஆட்சியை நோக்கி நகரும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளதா என்ற கேள்விக்கு வழிவகுக்கிறது.
விரிவாகப் படிக்க: இலங்கையில் ராணுவ ஆட்சி வருமா?
திருகோணமலையில் மஹிந்த ராஜபக்ஷ இப்போது எங்கு இருக்கிறார்?
இலங்கை பொருளாதார நெருக்கடி எப்படி முடிவுக்கு வரும்?
இலங்கையின் நாணயம் மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது. அதனால் முற்றிலுமாக அதன் மதிப்பை இழந்து வேறொரு நாணயத்தை ஏற்றுக் கொள்ளும் சூழல் ஏற்படுமா என்ற கேள்வி இயற்கையாகவே எழுகிறது.
விரிவாகப் படிக்க: இலங்கை பொருளாதார நெருக்கடி எப்படி முடிவுக்கு வரும்?
இலங்கை சுற்றுலாத் துறையின் நிலை என்ன?
அந்நியச் செலாவணியை நாட்டுக்குள் கொண்டுவருவதில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது இலங்கையின் சுற்றுலாத்துறை, வெளிநாடு வாழ் தொழிலாளர்கள், ஜவுளி ஆகிய துறைகளுக்கு அடுத்த இடத்தைப் பெற்றிருக்கும் இந்தத் துறை, நாட்டின் மொத்த அந்நியச் செலாவணி வரவில் 13 முதல் 15 சதவிகிதம் வரையிலான பங்களிப்பை வழங்கியிருக்கிறது.
விரிவாகப் படிக்க: இலங்கை சுற்றுலாத் துறையின் நிலை என்ன?
இலங்கை சினிமா துறைக்கு உள்ள சிக்கல்கள் என்னென்ன?
நீண்ட காலப் போர், பண்பாட்டுப் பிரிவினைகள், பொருளாதார நெருக்கடி ஆகியவற்றுக்கு இடையே சிக்கி தவித்துக் கொண்டிருக்கும் இலங்கை சினிமா துறை மீண்டு எழுவதற்கு பல வழிகளிலும் முயற்சி செய்து கொண்டிருக்கிறது.
விரிவாகப் படிக்க: இலங்கை சினிமா துறைக்கு உள்ள சிக்கல்கள் என்னென்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்