இலங்கை பொருளாதார நெருக்கடி: ஆயிரக்கணக்கில் கூடிய மக்கள் – நள்ளிரவில் வெடித்த வன்முறையை காட்டும் படங்கள்

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான விலைவாசி உயர்வை கண்டித்து ஜனாதிபதி வீட்டின் முன் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தடுப்புகளை தகர்த்த போராட்டக்காரர்கள் பேருந்து ஒன்றிற்கு தீ வைத்தனர்.

இலங்கையில் 13 மணி நேரம் மின்வெட்டை சந்தித்த மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர்.

ஜனாதிபதியின் வீட்டுக்கு வெளியே தொடங்கிய இந்த போராட்டம் அமைதியாகவே தொடங்கியது ஆனால் காவல்துறை கண்ணீர் புகை குண்டை பயன்படுத்தியதால் அது வன்முறையாக மாறியது என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

போராட்டக்காரர்களை ஒடுக்கிய காவல்துறை மீது கற்களை எறிந்தனர்.

இந்த போராட்டம் தொடர்பாக ஒரு பெண் உட்பட இதுவரை 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்ற கோஷங்களை முழங்கினர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: