சஹ்ரான் ஹாசிம் குடும்பத்தினரின் சடலங்கள் தோண்டியெடுப்பு

சாய்ந்தமருது

இலங்கையின் சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள பொலிவேரியன் சுனாமி வீட்டுத்திட்டத்தில் தற்கொலை குண்டை வெடிக்கச் செய்து பலியான, சஹ்ரான் ஹாசிம் குழுவைச் சேர்ந்த பயங்கரவாதிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தாரின் சில சடலங்கள் இன்று வெள்ளிக்கிழமை தோண்டி எடுக்கப்பட்டன.

அம்பாறை நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு அமைவாக இந்த நடவடிக்கை இடம்பெற்றது.

இலங்கையில் நடந்த ஈஸ்டர் தின தாக்குதல்களின் மூளையாக இருந்து செயல்பட்ட சஹ்ரான் தற்கொலை தாக்குதல் நடத்தியபோது உயிரிழந்தார் என்று இலங்கை அரசு கூறுகிறது.

மேற்படி நபர்களின் உடல் பாகங்களை மரபணு பகுப்பாய்வுக்கு (டி.என்.ஏ) அனுப்பி வைப்பதற்காகவே சடலங்கள் இவ்வாறு தோண்டியெடுக்கப்பட்டன.

அம்பாறை பிரதான நீதவான் அசங்க ஹெட்டிவத்த மற்றும் அம்பாறை வைத்தியசாலையின் முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி ருச்சிர நதீர ஆகியோர் முன்னிலையில் குறித்த சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டன.

ஏப்ரல் 26ம் தேதி சாய்ந்தமருது பொலிவேரியன் பகுதியிலுள்ள வீடொன்றில், சஹ்ரான் குழுவினரும் அவர்களின் குடும்பத்தினரும் தங்கியிருந்த நிலையில், அவர்களை படையினர் சுற்றி வளைத்தனர்.

சஹ்ரான் குழுவினரின் சடலங்கள் தோண்டியெடுப்பு

இதனையடுத்து நடந்த துப்பாக்கிச் சண்டையிலும், தற்கொலைக் குண்டுகளை பயங்கரவாதிகள் வெடிக்கச் செய்தமையின் காரணமாகவும் அந்த வீட்டில் தங்கியிருந்த 15 பேர் உயிழரிந்தனர். இவ்வாறு உயிரிழந்தவர்களில் சஹ்ரானின் இரண்டு சகோரரர்களும் தந்தையும் அடங்குவர்.

எவ்வாறாயினும், தற்கொலைக் குண்டுகள் வெடித்த வீட்டிலிருந்து, சஹ்ரானின் மனைவி மற்றும் மகள் ஆகியோர் காயப்பட்ட நிலையில் தப்பித்தமை நினைவுகொள்ளத்ததக்கது.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

இதன் பின்னர், உயிரிழந்த பயங்கரவாதிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தவர்களின் சடலங்களை பொறுப்பேற்பதற்கு முஸ்லிம்கள் முன்வராமை காரணமாக, இஸ்லாமிய மதச் சடங்குகளின்றி, அந்த சடலங்கள் அம்பாறையில் புதைக்கப்பட்டன.

இருந்தபோதும், அந்தக் குண்டு வெடிப்பின்போது பலியான சஹ்ரான் தரப்பினரின் குழந்தைகளின் உடல்கள் மட்டும், இஸ்லாமிய மதச் சடங்களுடன் அடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த அனர்த்தத்தில் 06 குழந்தைகள் பலியாகியிருந்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :