இலங்கையில் பெட்ரோல் விலை ரூ.10, டீசல் விலை ரூ.7 குறைப்பு

இலங்கையில் ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்று சில நாட்கள் ஆகியுள்ள நிலையில், அங்கு பெட்ரோல் விலை 10 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல டீசல் விலையும் 7 ரூபாய் குறைந்துள்ளது.

நிதியமைச்சகப் பொறுப்பேற்றுள்ள புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்சே, இன்றைய தினம் மற்ற சில பொருட்களுக்கும் விலைகளைக் குறைத்துள்ளதோடு, வரிக்குறைப்பினைச் செய்வதாகவும் அறிவித்துள்ளார்.

தொலைத்தொடர்பு வரி 25 சதவீதத்திலிருந்து 15 வீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தொலைபேசிக் கட்டணங்கள் குறையும்.

அதேவேளை சீனி, கடலை மற்றும் பருப்பு ஆகியவற்றுக்கான வரிகளும், விலைகளும் குறைக்கப்பட்டுள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :