You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆபாச வீடியோ காட்டிய பௌத்த துறவிக்கு சிறை
இளைஞர்களுக்கு ஆபாச வீடியோ காட்சிகளை காண்பித்து ஆபாசமான முறையில் நடந்துக்கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்த பௌத்த பிக்கு ஹினட்டிகம சமிதவுக்கு மூன்று ஆண்டுகால கடூழிய சிறை தண்டனை வழங்கி கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும், ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, அபராத தொகையை செலுத்த தவறும் பட்சத்தில் மேலதிகமாக இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டியிருக்குமென அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
2007 ஆம் ஆண்டு கொழும்பு மாளிகாவத்தை தொடர் மாடி விடுதியில் வீடொன்றை வாடகைக்கு எடுத்து, அங்கு இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை அழைத்து வந்து ஆபாச வீடியோக்களை காட்டி ஆபாசமான முறையில் நடத்துக்கொண்டதாக இந்த பௌத்த பிக்குவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
நீண்ட விசாரணைகளுக்கு பின்னர் தீர்ப்பை அறிவித்த நீதிபதி, சமூகத்தை நல்ல பாதையில் வழிநடத்த வேண்டிய மதத்தலைவர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபடுவதை அனுமதிக்க முடியாதென்று சுட்டிக்காட்டினார்.
எனவே, சட்டப்படி வழங்கக்கூடிய அதிகப்பட்ச தண்டனையை குற்றவாளிக்கு வழங்குவதாக நீதிபதி அறிவித்தார்.
அதேவேளை இந்த பிக்குவுடன் ஆபாச வீடியோக்களை பார்த்ததாக குற்றஞ்சாட்ட இரு இளைஞர்களுக்கு பத்து ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஓராண்டு கடூழிய சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
குற்றவாளிகளின் இளம் வயதை கவனத்தில் எடுத்துக்கொண்டு ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனை வழங்குவதாக நீதிபதி அறிவித்திருக்கிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
- டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்