மீத்தொட்டமுல்லையில் பலியானவர்களின் எண்ணிக்கை 30ஆக உயர்வு

இலங்கையின் தலைநகர் கொழும்புக்கு அருகே உள்ள மீத்தொட்டமுல்ல பகுதியில் உள்ள குப்பை மேடு ஒன்று சரிந்ததில் சிக்குண்டு பலியானவர்களின் எண்ணிக்கை முப்பதாக உயர்ந்துள்ளதாக பிபிசியிடம் அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.

மேலும் முப்பது பேர் காணாமல் போயுள்ள நிலையில், அவர்களை தேடும் பணி தொடர்வாக பேரிடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கடந்த 14ம் தேதி புத்தாண்டு தினத்தன்று நடந்த இந்த சம்பவத்தில் பலியானவர்களில் சிறார்கள் ஆறு பேரும், பதினைந்து பெண்களும் அடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் பலியானவர்களில் எட்டு பேரின் இறுதி கிரியைகள் நேற்று திங்கட்கிழமை நடந்தன.

காணாமல் போயுள்ளவர்களை தேடும் பணியை இராணுவத்தினர் பொதுமக்களின் உதவியுடன் மேற்கொண்டு வருகிறார்கள்.

இது தொடர்பான பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்