இலங்கையில் உளவுத்துறை உதவியுடன் போதைப் பொருள் விற்பனையை ஒழிக்க முயற்சி

இலங்கையில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபடும் நபர்களை கைது செய்வதற்காக உளவுத்துறை அதிகாரிகளின் உதவி நாடப்பட்டுள்ளதாக மக்கள் சட்டம் தொடர்பான அமைச்சர் சாகல ரத்னாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இன்று நாடாளுமன்றம் கூடிய போது ஆளும் கட்சியின் உறுப்பினர் புத்திக்க பத்திரன எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதில் வழங்கிய போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடும் நபர்களை கைது செய்வதற்காக போலீஸார் விசேட திட்டங்களை அமல்படுத்தியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இதன்படி, போதைப்பொருள் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக 2014 ம் ஆண்டு 236 பாடசாலை மாணவர்களும் 2015-ம் ஆண்டு 102 மாணவர்களும் கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட மாணவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்த அமைச்சர் சாகல ரத்னாயக்க, பாடசாலைகளுக்குள் போதைப் பொருள் விற்பனை செய்தது தொடர்பாக எந்தவொரு புகாரும் இதுவரை கிடைக்கவில்லை என்று அறிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்