மகளிர் கால்பந்து உலகக்கோப்பை தொடர் பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும்? வினாடி வினா

மகளிர் உலகக்கோப்பை 2023

ஒன்பதாவது முறையாக நடைபெறும் 2023ஆம் ஆண்டுக்கான மகளிர் கால்பந்து உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது.

மகளிருக்கான கால்பந்து உலகக்கோப்பையின் முதல் தொடர் 1991ஆம் ஆண்டு நடந்தது. அது சீனாவில் நடைபெற்றது, 12 அணிகள் அதில் பங்கெடுத்தன.

இந்த முறை, 2023ஆம் ஆண்டுக்கான போட்டிகளை ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் இணைந்து நடத்துகிறது. ஜூலை 20ஆம் தேதி தொடங்கிய இந்த ஆண்டுக்கான மகளிர் கால்பந்து உலகக்கோப்பை ஆகஸ்ட் 20ஆம் தேதி நிறைவடைகிறது. இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவில் 32 நாடுகள் இந்தத் தொடரில் பங்கேற்கின்றன.

இந்த ஆண்டுக்கான மகளிர் உலகக்கோப்பை உலகம் முழுவதும் முக்கியமாகக் கவனிக்கப்படும் நிலையில், பெண்கள் உலகக் கோப்பை பற்றி நீங்கள் எந்த அளவுக்குத் தெரிந்து வைத்துள்ளீர்கள்?

உங்களுக்கு நீங்களே இந்த வினாடி வினா மூலம் ஒரு சின்ன பரிசோதனையைச் செய்துகொள்கிறீர்களா?