டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன் போட்டிகளின் நாள், இடம் - முழு அட்டவணை

தேதி, இடம் என பல கட்ட மாற்றங்களுக்குப் பிறகு, ஆண்களுக்கான டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டித் தொடர் நேற்றுடன் தொடங்கிவிட்டது.

2020ஆம் ஆண்டே ஆஸ்திரேலியாவில் நடந்திருக்க வேண்டிய டி20 உலகக்கோப்பைப் போட்டிகள் கொரோனா பெருந்தொற்று காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவில் திட்டமிடப்பட்டிருந்த போட்டிகள் 2022ஆம் ஆண்டு அங்கேயே நடக்கும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு இந்தியாவில் நடந்திருக்க வேண்டிய போட்டிகள் இந்தியாவில் கொரோனா பெரும் எண்ணிக்கையில் பரவியதால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமனில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

2020 ஆஸ்திரேலியாவில் நடக்க இருந்த டி20 ஆண்கள் உலகக்கோப்பை போட்டியில் பங்குபெறத் தகுதி பெற்றிருந்த நாடுகள் 2021 உலகக்கோப்பை போட்டிகளில் அனுமதிக்கப்படுகின்றன.

ஏழாவது டி20 உலகக் கோப்பையின் முழு அட்டவணை இதோ.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :