கேரள வெள்ளம்: பாதிப்பின் கொடூரத்தைக் காட்டும் புகைப்படங்கள்

எச்சரிக்கை: இப்பக்கத்தில் உள்ள சில படங்கள் உங்களுக்கு வருத்தத்தை உண்டாக்கலாம்.

கேரளாவில் பெய்து வரும் கனமழையால் உண்டான வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் அந்த மாநிலத்தில் பரவலாக உயிர் மற்றும் பொருட் சேதங்கள் நிகழ்ந்துள்ளன.

பல வீடுகளும், சில இடங்களில் வீடுகளுக்குள் இருந்த மனிதர்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.

நிலச்சரிவால் கட்டடங்கள் இடிந்து அதில் புதைந்து மரணமடைந்த சில கோரமான நிகழ்வுகளும் கேரளாவில் நடந்துள்ளது.

கேரள மாநில அரசு ஊழியர்களுடன், தேசிய பேரிடர் மீட்புப் படை, இந்திய ராணுவம், இந்திய கடற்படை, இந்திய விமானப் படை உள்ளிட்ட மத்திய அரசு முகமைகளின் ஊழியர்களும் தேடுதல் மற்றும் மீட்புதவிப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

கேரளாவில் உண்டாகியுள்ள வெள்ள பாதிப்பைக் காட்டும் சில படங்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :