DC Vs KKR: கடைசி ஓவரில் கைமாறிய வெற்றி: கோப்பையை தவறவிட்ட டெல்லி அணி; சென்னையுடன் மோதும் கொல்கத்தா அணி

பட மூலாதாரம், BCCI/IPL
ஐபிஎல் போட்டிகள் வரலாற்றில் மீண்டும் ஒரு பரபரப்பான ஆட்டம். கடைசி ஓவர் வரை வெற்றி பெறப் போவது டெல்லி அணியா அல்லது கொல்கத்தா அணியா என்று நீண்டு கொண்டே போனது நேற்றைய KKR Vs DC போட்டியில்.
கடைசியில் கொல்கத்தா அணி வெற்றிப் பெற்று சென்னையுடன் இறுதிப் போட்டியில் களமிறங்கவுள்ளது.
ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 135 ரன்களை எடுத்து 136 ரன்களை கொல்கத்தா அணிக்கு இலக்காக நிர்ணயித்தது.
டெல்லி அணியில் தொடக்கத்தில் களமிறங்கிய பிரித்வி ஷா 18 ரன்களும் ஷிகர் தவான் 36 ரன்களும், ஸ்டோய்னிஸ் 18 ரன்களும் ஷ்ரேயாஸ் ஐயர் 30 ரன்களும் எடுத்திருந்தனர்.
கொல்கத்தா அணியின் தடுமாற்றம்
136 ரன்கள் இலக்கு என களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக விளையாடினர்.
ஆட்டத்தின் 16ஆவது ஓவர் வரை கொல்கத்தா அணியின் கையில் இருக்க அந்த அணியின் மிடில் ஆர்டர் சரிந்ததில் ஒரு கட்டத்தில் போட்டி டெல்லி அணியின் கைக்கு சென்று விட்டது.
கொல்கத்தா அணியில் தினேஷ் கார்த்திக் உட்பட அடுத்தடுத்த வீரர்கள் ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினர்.
ஒரு கட்டத்தில் 25 பந்துகளுக்கு 13 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் இருந்த கொல்கத்தா அணி ஏழு ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்து 130 ரன்களை எடுத்திருந்தது.
ஆனால் கடைசி ஓவரில் திரிபாதியின் சிக்ஸர் கொல்கத்தா அணியை ஏழு வருடங்கள் கழித்து இறுதிப் போட்டிக்கு அழைத்து சென்றுள்ளது.
இதுவரை கொல்கத்தா அணி 2012 மற்றும் 2014ஆம் ஆண்டில் கோப்பையை வென்றுள்ளது.
2012ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் சென்னை அணியும் கொல்கத்தா அணியும் மோதின என்பதும் குறிப்பிடத்தக்கது.
விறுவிறுப்பான அந்த கடைசி ஓவர்
நேற்றைய ஆட்டத்திற்கு சுவாரஸ்யம் சேர்த்தது அஷ்வின் பந்து வீசிய கடைசி ஓவர்.
கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக விளையாடி அணியை வெற்றியை நோக்கி பயணிக்க வைத்தனர் ஆனால் அடுத்தடுத்த ஓவர்களில் சட்டென நிலைமை மாறியது.

பட மூலாதாரம், BCCI/IPL
ஏற்கனவே தினேஷ் கார்த்திக், மோர்கன் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் திரும்பிய நிலையில், கடைசி ஓவர்களில் ஏழு ரன்கள் தேவைப்பட்டிருந்தது. அப்போது பந்து அஷ்வினின் கைக்கு வந்தது.
அடுத்தடுத்த பந்துகளில் ஷகிப், நரீன் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார் அஷ்வின். ஹாட்ரிக் விக்கெட் எடுப்பார் டெல்லி அணிதான் இறுதி போட்டிக்கு சென்று சென்னையை எதிர்கொள்ளப்போகிறது என்று அனைவரும் ஒரு முடிவுக்கு வந்த நிலையில் திரிபாதி ஒரு சிக்ஸர் அடிக்க அது கொல்கத்தா அணிக்கு வெற்றியை தேடி தந்தது.
புள்ளி பட்டியலில் முதலாம் இடத்தில் இருந்தும் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இருமுறை தவறவிட்டுவிட்டது டெல்லி அணி.
கொல்கத்தா அணியின் வெற்றிக்கு காரணம்

பட மூலாதாரம், BCCI/IPL
கொல்கத்தா அணி நல்ல ஃபார்மில் இருப்பதற்கு முக்கிய காரணம் அந்த அணியின் டாப் ஆர்டர் பேடிங்கும், சிக்கனமான பந்து வீச்சும்தான்.
கொல்கத்தா அணியின் வெங்கடேஷ் ஐயர் மீண்டும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மே மாதம் கொரோனா தொற்று பரவல் காரணமாக இடைப்பட்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மீண்டும் தொடங்கியபோது ஐபிஎல்லில் அறிமுகமானவர் வெங்கடேஷ் ஐயர்.
ஆனால் தற்போது கொல்கத்தா அணி இறுதி போட்டிக்கு செல்ல முக்கிய காரணமாக அமைந்துள்ளார். இதுவரை அவர் மொத்தம் 320 ரன்களை விளாசியுள்ளார். அவரின் சராசரி 40 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 125.0.
நேற்றைய போட்டியில் 41 பந்துகளில் 55 ரன்களை விளாசியிருந்தார். தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மன் கில்லும் அவருக்கு கைகொடுக்க 46 பந்தில் 46 ரன்களை எடுத்திருந்தார். இருவரின் ரன் குவிப்பும் கொல்கத்தா அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது.
ஆனால் அடுத்தடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் பெரிதாக பிரகாசிக்கவில்லை.
நேற்றைய போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் பலரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3
தொடரும் டெல்லி அணியின் கோப்பை கனவு
மே மாதம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டபோது ஏழு போட்டிகளில் வெறும் இரு வெற்றிகளை பெற்று ஏழாவது இடத்தில் இருந்தது கொல்கத்தா அணி. ஆனால் தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் போட்டிகள் மீண்டும் தொடங்கியபின் 9 போட்டிகளில் 7 போட்டிகளில் அந்த அணி வெற்றிப் பெற்றுள்ளது.
மறுபக்கம் டெல்லி அணி ஒரு சிறப்பான பார்மில் இருந்து வந்தது. 20 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது ஆனால் இந்த முறையும் அதன் கோப்பை கனவு நிறைவேறாமல் முடிந்துவிட்டது.
கடந்த சீசனின் ரன்னர்-அப் டெல்லி அணி. 2012ஆம் ஆண்டு சென்னை அணி மற்றும் கொல்கத்தா அணிகள் இறுதி போட்டிக்கு சென்றபோதும் டெல்லி அணி முதல் நான்கு இடங்களில் வந்திருந்தது. ஞாயிறன்று சென்னை அணியிடம் தோல்வி கண்ட டெல்லி அணி நேற்றைய போட்டியில் சிறப்பாக விளையாடினாலும் வெற்றியை தனதாக்க முடியவில்லை.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












