டோக்யோ ஒலிம்பிக் ஹாக்கி: இந்திய அணியைத் தோற்கடித்த அந்த இரு நிமிடங்கள்

பட மூலாதாரம், Getty Images
டோக்யோ ஒலிம்பிக் ஹாக்கி அரையிறுதிப் போட்டியில் வலிமையான பெல்ஜியம் அணியிடம் இந்திய ஆண்கள் அணி போராடி தோல்வியடைந்தது. முதலில் இந்தியாவின் கை ஓங்கியிருந்த நிலையில் ஆட்ட நேர இறுதியில் 5-2 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அணி வெற்றி பெற்றது.
முதல் மூன்று கால்பகுதி நேர ஆட்டங்களில் பெல்ஜியத்தின் தாக்குதலை மிகச் சிறப்பாக தடுத்து ஆடிய இந்திய அணிக்கு 48-ஆவது நிமிடத்தில் இருந்து பின்னடைவு ஏற்பட்டது. பெல்ஜியம் அணி முன்னிலை பெற்ற மூன்று கோல்களும் அதன் பிறகே அடிக்கப்பட்டன.
இந்திய அணிக்கு வெண்கலப் பதக்கம் வெல்லும் வாய்ப்பு இன்னும் இருக்கிறது. இதற்கான போட்டியில் வரும் வியாழக்கிழமை ஆஸ்திரேலியா அல்லது ஜெர்மனி அணியுடன் இந்திய அணி ஆட வேண்டியிருக்கும்.
தவறிப்போன சாதனை
41- ஆண்டுகளுக்கு முன் மாஸ்கோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பிறகு இந்திய அணி அரையிறுதிப் போட்டிக்குக்கூடத் தகுதி பெறவில்லை.
அதனால் டோக்யோ ஒலிம்பிக் போட்டியில் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் வேட்கையுடன் இந்திய வீரர்கள் களமிறங்கினர்.
ரியோ ஒலிம்பிக் காலிறுதி ஆட்டத்தில் பெல்ஜியத்துடன் மோதி 1-3 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெளியேறியது. இன்றைய போட்டி அதற்குப் பழிதீர்க்கும் வகையில் அமையுமா என்ற எதிர்பார்ப்பு இந்தியாவில் எழுந்திருந்தது.
சர்வதேச தர வரிசையில் பெல்ஜியம் அணி இரண்டாவது இடத்திலும் இந்திய அணி மூன்றாவது இடத்திலும் இருக்கின்றன. ஆனாலும் இரு அணிகளும் மோதிய கடைசி 5 ஆட்டங்களில் 3-இல் இந்தியாவுக்கே வெற்றி கிடைத்திருந்தது.

பட மூலாதாரம், Getty Images
டோக்யோ ஒலிம்பிக் தொடங்கியதில் இருந்தே தாக்குதல் ஆட்டத்தில் சிறப்பாகச் செயல்பட்டு வந்தது பெல்ஜியம் அணி . ஒரு போட்டியில்கூட இதுவரை தோற்கவில்லை. பி பிரிவு லீக் ஆட்டங்களில் 4 போட்டிகளில் வென்று ஒரு போட்டியில் ட்ரா செய்திருந்தது. இவற்றில்இரண்டு ஆட்டங்களில் தலா 9 கோல்களை அடித்திருந்தது. இதே வியூகத்தைத்தான் இன்றைய போட்டியிலும் பயன்படுத்தி இந்தியாவின் சாதனைக் கனவை பெல்ஜியம் தகர்த்திருக்கிறது.
தாக்குதலைத் தொடங்கிய பெல்ஜியம் பதிலடி கொடுத்த இந்தியா
இந்தியாவுடனான அரையிறுதி ஆட்டம் தொடங்கிய இரண்டாவது நிமிடத்திலேயே பெல்ஜியம் அணி தனது முதல் கோலை அடித்தது. அந்த அணியின் லூயிக் முதல் கோலை அடித்தார்.
அடுத்த சில நிமிடங்களிலேயே அடுத்தடுத்து பெனால்ட்டி கார்னர் வாய்ப்பு இந்திய அணிக்குக் கிடைத்தது. முதல் வாய்ப்பை இந்திய வீரர்கள் தவறவிட்டனர்.
7-ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்ட்டி கார்னர் வாய்ப்பைப் பயன்படுத்தி இந்தியாவின் ஹர்மன்ப்ரீத் சிங் கோல் அடித்தார். இது டோக்யோ ஒலிம்பிக்கில் அவர் அடித்த ஐந்தாவது கோல்.

பட மூலாதாரம், Getty Images
அடுத்த நிமிடத்திலேயே ரோஹிதாஸ் அற்புதமாகக் கடத்திக் கொடுத்த பந்தை துல்லியமாகத் தடுத்து கோலுக்குள் திருப்பினார் இந்திய அணியின் மந்தீப் சிங். இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
முதல் கால்பகுதி நேரத்தில் கிடைத்த மற்றொரு பெனால்ட்டி கார்னர் வாய்ப்பை இந்திய அணி தவறவிட்டது. ரூபிந்தர் பால் சிங்கின் கோலை நோக்கிய விரட்டிய பந்தை பெல்ஜியம் அணியின் கோல் கீப்பர் வின்சென்ட் வனாஸ்க் சிறப்பாகத் தடுத்தார்.
இரண்டாவது கால் பகுதியில் அடுத்தடுத்து மூன்று பெனால்ட்டி கார்னர் பெல்ஜியத்துக்கு கிடைத்தன. ஆனால் அனைத்தையும் இந்திய வீரர்கள் தடுத்தனர். ஆனால் 19-ஆவது நிமிடத்தில் பெனால்ட்டி கார்னர் மூலம் பெல்ஜியம் அணி தனது இரண்டாவது கோலை அடித்தது. அப்போது 2-2 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் இருந்தன.
மூன்றாவது கால்பகுதி ஆட்டத்தில் இரு அணிகளுமே எவ்வளவோ முயன்றும் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. இரு அணிகளின் அரண்களும் கோலை ஒட்டிய வட்டப் பகுதிகளுக்குள் அதிகமாகப் பந்தை அனுமதிக்கவில்லை. அப்படியே பந்து வந்தாலும் கோலுக்குள் செல்லவில்லை.
ஆட்டத்தின் போக்கை மாற்றிய அந்த 2 நிமிடங்கள்
நான்காவது கால்பகுதி ஆட்டம் தொடங்கியதுமே இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தைத் தொடங்கின. 48-ஆவது நிமிடத்தில் இந்திய அணியின் கேப்டன் மன்ப்ரீத் சிங்குக்கு கிரீன் கார்டு கொடுக்கப்பட்டது. இதனால் அவர் இரண்டு நிமிடங்களுக்கு களத்தை விட்டு வெளியே செல்ல நேர்ந்தது. இந்திய அணி 10 வீரர்களுடன் ஆட வேண்டிய நிலை ஏற்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
அதற்கு அடுத்த நிமிடத்திலேயே அடுத்தடுத்து மூன்று பெனால்ட்டி கார்னர் வாய்ப்புகள் பெல்ஜியத்துக்குக் கிடைத்தன. அதில் மூன்றாவது வாய்ப்பை துல்லியமாகப் பயன்படுத்தி கோலாக்கினார் பெல்ஜியம் வீரர் ஹென்ட்ரிக்ஸ்.
சில நிமிடங்களில் அடுத்தடுத்த கிடைத்த பெனால்ட்டி கார்னர்களில் மீண்டும் ஒரு கோலை அடித்தார் ஹென்ட்ரிக்ஸ். இதனால் 4-2 என்ற வலுவான நிலையை பெல்ஜியம் எட்டியது.
இறுதி நிமிடத்தில் கடைசி சில நொடிகளே இருந்தபோது மேலும் ஒரு கோலை அடித்து 5-2 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அணி வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் பெல்ஜியம் அணியின் ஹென்ட்ரிக்ஸ் ஹாட்ரிக் கோல்களை அடித்தார்.
போட்டி முழுவதும் இந்தியாவுக்கு 5 பெனால்ட்டி கார்னர் வாய்ப்புகளே கிடைத்தன. அவற்றில் ஒன்றில் கோல் அடிக்க முடிந்தது. ஆனால் பெல்ஜியத்துக்கு மொத்தம் 14 பெனால்ட்டி கார்னர்கள் கிடைத்தன. அவற்றின் மூலமே அந்த அணி 3 கோல்களை அடித்தது. பெனால்ட்டி ஸ்ட்ரோக் மூலம் மற்றொரு கோல் கிடைத்தது.
இந்திய அணிக்கு வெண்கலப் பதக்கம் வெல்லும் வாய்ப்பு இன்னும் இருக்கிறது. வரும் வியாழக்கிழமை இதற்கான போட்டி நடக்கிறது

பட மூலாதாரம், Getty Images
போட்டியை நேரலையில் பார்த்தநரேந்திர மோதி
இந்தியா பெல்ஜியம் அணிகள் மோதிய ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி போட்டியை இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி நேரலையில் பார்த்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
இதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட அவர், ஹாக்கி அணி குறித்து பெருமைப்படுவதாகவும், வெற்றி பெறுவதற்கு வாழ்த்துகள் எனவும் முதல் கூறியிருந்தார்.
போட்டி முடிந்த பிறகும் ட்விட்டரில் அணிக்கு நம்பிக்கையூட்டும் வகையில் பதிவிட்டிருந்த மோதி, "வெற்றியும் தோல்வியும் வாழ்க்கையின் அங்கங்கள்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
இந்திய அணி முழுத் திறமையுடன் ஆடியதாகக் கூறியிருக்கும் அவர், அடுத்து வரும் போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார்.
இந்தியர்கள் பங்கேற்கும் ஒலிம்பிக் போட்டிகள்
ஆகஸ்ட் 3 - செவ்வாய்கிழமை
- மாலை 3.45 மணிக்கு - ஆண்கள் குண்டு எறிதல் - தகுதிச் சுற்று - தேஜிந்தர் பால் சிங் தூர்
- பெண்கள் ஃப்ரீ ஸ்டைல் மல்யுத்தம் 62 கிலோ எடைப்பிரிவு - சோனம் - மங்கோலியாவின் குரெல்கு உடன் 1/8 இறுதிச் சுற்று.
நாடுகளின் பதக்க பட்டியல்:
தர வரிசை
பிற செய்திகள்:
- ஒலிம்பிக் ஹாக்கி காலிறுதி: ஆஸ்திரேலிய அரணை சிதறடித்த இந்திய வீராங்கனைகள்
- இமயமலை நாட்டின் இமாலய சாதனை: பூட்டானில் 99% பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி
- ஒரே ஒலிம்பிக்கில் 7 பதக்கங்கள் - உலக சாதனை படைத்த எம்மா மெக்கியோன்
- காஷ்மீர் ப்ரீமியர் லீக்: 'வெளிநாட்டு வீரர்களை பிசிசிஐ மிரட்டுகிறது ' - பாகிஸ்தான்
- "பெட்ரோல் பாண்டுகளால்தான் பெட்ரோல் விலை உயர்வதாகச் சொல்வது பொய்" - ஆனந்த் ஸ்ரீநிவாசன்
- நரபலி கொடுக்கும் ஆஸ்டெக் பேரரசு: மத்திய அமெரிக்காவை ஆட்டிப்படைத்த பழங்குடிகளை பற்றி தெரியுமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












