ஐபிஎல் 2020: SRH Vs KKIP - 69 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத் அணி

ராகுல்

பட மூலாதாரம், BCCI / IPL

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 22ஆவது போட்டியில் ஐதராபாத் சன் ரைஸர்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளும் மோதிக் கொண்டன. இதில் ஐதராபாத் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

202 ரன்கள் இலக்கை சேஸ் செய்ய தொடங்கிய பஞ்பாப் அணி 17 ஓவர்களில் வெறும் 132 ரன்களை எடுத்தது.

அந்த அணி 11 ரன்கள் எடுத்திருந்தபோது முதல் விக்கெட் சரிந்தது. அணியின் தொடக்க வீரர் மயங்க் அகர்வால் 9 ரன்னில் அவுட் ஆனார்.

அடுத்து வந்த சிம்ரன் சிங் 11 மட்டுமே எடுத்து அவுட் ஆனார். அவர் எட்டு பந்துகளில் இரு பவுண்டரிகள் அடித்து 11 ரன்களை எடுத்தார்.

அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தாலும், அந்த அணியின் பூரன் நின்று ஆடி பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசினார். அவர் வெறும் 17 ரன்களில் அரை சதம் அடித்தார். இந்த தொடரில் மிக விரைவாக எடுக்கப்பட்ட ஒரு அரை சதமாக இது உள்ளது.

பஞ்சாப் அணி

பட மூலாதாரம், BCCI / IPL

இதன்மூலம் அந்த அணி 100 ரன்களை நோக்கி நகர்ந்தது.

11ஆவது ஓவரில் 100 ரன்களை கடந்தபோது அந்த அணி நான்காவது விக்கெட்டை இழந்தது.

ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்து கொண்டிருந்தாலும் பூரனின் ஆட்டம் அந்த அணிக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்தில் இருந்தது.

ஆனால் பூரன் 77 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரஷித் கான் பந்தில் அவுட் ஆனார்.

வார்னர்

பட மூலாதாரம், BCCI / IPL

முன்னதாக டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஐதராபாத் சன் ரைஸர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் டேவிட் வார்னர் மற்றும் பேர்ஸ்டவ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

டேவிட் வார்னர் முதல் ஓவரிலேயே இரு பவுண்டரிகளை அடித்து அதிரடியாக தொடங்கினார்.

10ஆவது ஓவரில் தனது அரை சதத்தை நிறைவு செய்தார் பேரிஸ்டோவ். வார்னர் பாரிஸ்டோவ் கூட்டணி 100 ரன்களை கடந்தது. இருப்பினும் 97 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பாரிஸ்டோவ் அவுட் ஆனார்.

அதன்பின் வார்னர் தனது அரை சதத்தை நிறைவு செய்தார்.

வார்னர் பாரிஸ்டோவ் கூட்டணியை 16ஆவது ஓவரின் முயற்சித்து உடைத்தது பஞ்சாப் அணி அதன்பின் வந்தவர்கள் தங்களது பங்கிற்கு ரன்களை சேர்த்து அந்த அணி ஆறு விக்கெட்டுகள் இழப்பிறகு 201 ரன்களை எடுத்தது.

இந்த போட்டியின் மூலம் ஐதராபாத் அணி தனது மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

பஞ்சாப் அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறது. புள்ளிகள் பட்டியலில் அந்த அணி கடைசி இடத்தில் உள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: