டெல்லி போட்டியில் அதிர்ச்சி தோல்வி: ஆஸ்திரேலியாவிடம் தொடரை இழந்த இந்தியா

பட மூலாதாரம், Robert Cianflone
டெல்லியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்ற இந்தியா தொடரை 2-3 என்று இழந்தது.
273 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா, தொடக்கம் முதலே தடுமாறியது.
12 ரன்களை எடுத்த இந்திய தொடக்க வீரர் ஷிகர் தவான் 5-வது ஓவரில் ஆட்டமிழந்தார். இந்திய அணித்தலைவர் விராட் கோலி 20 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பட மூலாதாரம், Robert Cianflone
ரோகித் சர்மா அரைச்சதம் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ஓரளவு தாக்குப்பிடித்த கேதர் ஜாதவ் 44 ரன்களையும், புவனேஸ்வர் குமார் 46 ரன்களையும் எடுத்தனர்.
மிக சிறப்பாக பந்துவீசிய ஆஸ்திரேலிய சுழல் பந்துவீச்சாளர் ஆடம் ஜாம்பா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பட மூலாதாரம், Robert Cianflone
இறுதியில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்தியா 237 ரன்கள் மட்டும் எடுத்து 35 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று, ஒருநாள் தொடரையும் இழந்தது.
முன்னதாக, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான ஐந்தாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 272 ரன்கள் குவித்து, 273 ரன்களை இந்தியாவுக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் போட்டித்தொடரில் முதல் 2 இருநாள் போட்டிகளில் இந்தியா வெல்ல, மூன்றாவது போட்டியையும் வென்று தொடரை எளிதாக கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அடுத்த இரண்டு போட்டிகளையும் வென்ற ஆஸ்திரேலியா இந்தியாவுக்கு அதிர்ச்சியளித்தது. இதனால் 2-2 என தொடர் சமன் ஆனதால், ஐந்தாவது போட்டி மிகவும் கவனத்தை பெற்றுள்ளது.
இந்நிலையில் டெல்லியில் இன்று (புதன்கிழமை) நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்ய தீர்மானித்தது.

பட மூலாதாரம், Robert Cianflone
கடந்த போட்டியை போலவே இந்த போட்டியிலும் ஆஸ்திரேலிய தொடக்க வீரர்களான கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் மற்றும் உஸ்மான் கவாஜா ஆகிய இருவரும் நன்கு அடித்தாடினர்.
27 ரன்கள் எடுத்த நிலையில் ஆரோன் ஃபிஞ்ச் ஆட்டமிழக்க, அதன் பின்னர் களமிறங்கிய ஹேண்ட்ஸ்காம்ப், உஸ்மான் கவாஜா ஜோடி சேர்ந்தது சிறப்பாக விளையாடினார்.

பட மூலாதாரம், Robert Cianflone
ராஞ்சியில் நடைபெற்ற முந்தைய போட்டியில் தனது முதல் ஒருநாள் சதத்தை எடுத்த உஸ்மான் கவாஜா, இன்றைய போட்டியில் தனது இரண்டாவது சதத்தை எடுத்தார்.
நன்கு அடித்தாடிய உஸ்மான் கவாஜா, 2 சிக்ஸர்கள் மற்றும் 10 பவுண்டரிகளை விளாசி 106 பந்துகளில் 100 ரன்கள் எடுத்தார்.
இரண்டாவது விக்கெட்டுக்கு ஹேண்ட்ஸ்காம்ப், உஸ்மான் கவாஜா ஜோடி 99 ரன்கள் சேர்த்த நிலையில், புவனேஸ்வர் குமார் பந்துவீச்சில் உஸ்மான் கவாஜா ஆட்டமிழந்தார். இதன்பின்னர் விக்கெட்டுகள் மளமளவென்று சரிந்தன.

பட மூலாதாரம், Robert Cianflone
சிறப்பாக விளையாடிவந்த ஹேண்ட்ஸ்காம்ப் அரைச்சதம் எடுத்த நிலையில், முகமது ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதிரடி பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல் 1 ரன் ,மட்டுமே எடுத்த நிலையில் ஜடேஜாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு ஆஸ்திரேலிய அணி 272 ரன்கள் குவித்தது. இந்திய தரப்பில் புவேனஸ்வர் குமார் சிறப்பாக பந்துவீசி 48 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பிற செய்திகள்:
- கந்தஹாருக்கு மசூத் அசாருடன் சென்றாரா தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்?
- பொள்ளாச்சி விவகாரம்: ஆபாச காணொளிகளை நீக்குவது எப்படி? - பத்மாவதி விளக்கம்
- பிரதமர் தெரீசா மே முன்வைத்த பிரெக்ஸிட் திட்டம் மீண்டும் நாடாளுமன்றத்தில் தோல்வி
- அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம்: உறுதிமொழியை நிறைவேற்றினாரா நரேந்திர மோதி?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












