You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
INDvsNZ : டி20 போட்டியில் 80 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையே வெலிங்டனில் நடந்த முதல் டி20 கிரிக்கெட் போட்டியில், 80 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்தது.
முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி மொத்தமுள்ள 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்து, 220 ரன்களை இந்தியாவுக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
தொடர்ந்து பேட்டிங் செய்த இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 139 ரன்கள் மட்டுமே குவித்தது. இதனால் 80 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் இன்று (புதன்கிழமை) வெலிங்டன் மைதானத்தில் நடந்தது.
ஒருநாள் போட்டி தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றிய நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று நடந்தது. இந்திய நேரப்படி இன்று (புதன்கிழமை) மதியம் 12.30 மணிக்கு இந்த போட்டி துவங்கியது.
இந்திய அணியை பொருத்தவரையில் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டதால் ரோகித் சர்மா இந்திய அணியை நடத்தினார். டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் தோனிக்கும் மீண்டும் இடம் கிடைத்தது.
நியூசிலாந்து அணியில் மார்ட்டின் கப்டில் சேர்க்கப்படவில்லை. அவருக்கு பதிலாக டிம் சீஃபர்ட் களமிறங்கினார். கேன் வில்லியம்சன் நியூசிலாந்து அணியை வழிநடத்தினார்.
இந்திய அணியில் இன்றைய போட்டியில் ரிஷப் பந்த், தோனி, தினேஷ் கார்த்திக் என மூன்று விக்கெட் கீப்பர்களுமே விளையாடினர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :