விம்பிள்டனில் பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்தார் செரீனா

லண்டனில் நடைபெற்ற விம்பிள்டன் 2018ன் மகளிர் ஒற்றையர் டென்னிஸ் இறுதிப் போட்டியில், செரீனாவை வீழ்த்தி ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் வெற்றி பெற்றுள்ளார்.

அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸை எதிர்கொண்ட அவர் தன்னுடைய அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 6:3, 6:3 என்ற நேர் செட்டில் வென்றார்.

மகப்பேறுக்கு பின்னர் செரீனா வில்லியம்ஸ் கலந்து கொண்டுள்ள முதல் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி இதுவாகும்.

இந்த போட்டியின் தரவரிசையில் 25வது இடத்துடன் களமிறங்கிய இவர், கடுமையாக விளையாடி இறுதிப்போட்டி வரை முன்னேறி வந்ததால், கோப்பையை வெல்வார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.

முன்னதாக நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் டென்னிஸ் அரையிறுதி போட்டியில் ஜோகோவிச் மற்றும் ர ஃபேல் நடால் ஆகியோர் மோதினர்.

இருவரும் சம பலத்தில் மோதி 2:2 என்ற நிலையில் விறுவிறுப்பாக ஆடினர். வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் கடைசி ஆட்டத்தில் 10:8 என்று புள்ளிக்கணக்கில் நாடால் போராடி தோற்றார்.

ஜூன் மாதம் நடைபெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில், ஆடவர் ஒற்றையர் சம்பியன் பட்டத்தை நடால் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது,

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :