You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கிரீன்லாந்து கிராமத்தை அச்சுறுத்தும் பெரிய பனிப்பாறை
பெரியதொரு பனிப்பாறை கிரீன்லாந்தின் மேற்கு பகுதியில் உள்ள கிராமம் ஒன்றுக்கு மிகவும் நெருங்கி வந்துள்ளதால், அப்பகுதி மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்தப் பனிப்பாறை உடைந்து விட்டால் எழுகின்ற அலைகளால் வீடுகளில் வெள்ளம் புகுந்துவிடலாம் என்று மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இன்னார்சூட் கிராமத்தில் கடலை தொட்டு அமைந்திருக்கும் மேடான நிலப்பகுதியில் இருக்கும் வீடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இந்தப் பனிப்பாறை விளங்குகிறது.
ஆனால், தரையை தட்டி நிற்கும் இந்தப் பனிப்பாறை இரவில் நகரவில்லை என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதுபோன்ற பெரிய பனிப்பாறையை இதற்கு முன்னால் பார்த்ததில்லை என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த கோடை காலத்தில் கிரீன்லாந்தின் வட மேற்கில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு பின்னர் ஏற்பட்ட அலைகளால் வீடுகளில் வெள்ளம் புகுந்து 4 பேர் பலியாகினர்.
இந்தப் பனிப்பாறைக்கு அருகிலுள்ள இடத்தில் வாழுகின்ற 169 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக டென்மார்க் செய்தி நிறுவனமான 'ரிட்ஸாவ்' தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தப் பனிப்பாறையில் வெடிப்புகளும், துளைகளும் ஏற்பட்டுள்ளதால், எந்நேரத்திலும் உடையலாம் என அஞ்சுகின்றோம் என்று கிராம கவுன்சில் உறுப்பினர் சுசான்னே எலியாஸ்சன் உள்ளூர் செய்தித்தாளிடம் கூறியுள்ளார்.
இந்த கிராமத்தின் மின்சார நிலையமும், எரிபொருள் கிடங்குகளும் கடற்கரைக்கு அருகில் உள்ளன என்று அவர் தெரிவித்துள்ளார்.
பருவநிலை மாற்றத்தின் காரணமாக, இவ்வாறான மிக பெரிய பனிப்பாறைகளால் ஏற்படும் ஆபத்துக்கள் அடிக்கடி நிகழலாம் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
மிக பெரியதொரு பனிப்பாறை கிரீன்லாந்தின் கிழக்கிலுள்ள பனி மலையிலிருந்து உடைந்து பிரியும் காணொளியை நியூ யார்க் விஞ்ஞானிகள் கடந்த ஜூன் மாதத்தில் வெளியிட்டனர்.
உறைந்த பனி கட்டியிலிருந்து நாயை மீட்கும் தீயணைப்பு வீரர்
பிற செய்திகள்:
- திட்டமிட்டப்படி டிரம்ப்- புதின் பேச்சுவார்த்தை நடைபெறும்: அமெரிக்கா
- தாய்லாந்து குகை மீட்பில் தண்ணீரை வெளியேற்ற உதவிய இந்திய குழு
- புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படும் புதிய வகை ’ஜீப்ரா’ மீன்கள்
- 'டைம் மிஷின்': காலத்தில் பின்னோக்கி பயணிக்க முடியுமா?
- புற்று நோய் பாதிப்பு: ஜான்சன் & ஜான்சன் 4.7 பில்லியன் டாலர் இழப்பீடு வழங்க உத்தரவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்