“பிரேசிலிய பட்-லிப்ட்” பிளாஸ்டிக் மருத்துவ சிகிச்சை நிபுணர் காலமானார்

பட மூலாதாரம், Reuters
பிரபலமான பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மருத்துவர் இவோ பிடான்குயி தன்னுடைய 90-வது வயதில் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் காலமானார்.
ரியோ ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு ஒலிம்பிக் சுடரை ஏந்தி சென்ற ஒரு நாளுக்கு பின்னர் அவர் இயற்கை எய்தியிருக்கிறார்.

பட மூலாதாரம், Clinica Ivo Pitanguy
உலக அளவில் உள்ள பிரமுகர்கள் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்ய காத்திருக்கும் முனையமாக பிரேசிலை மாற்றிய பெருமை இவருக்குண்டு.
இவருடைய தனி சிறப்புடைய மருத்துவ சிகிச்சை வழிமுறை “பிரேசிலிய பட்-லிப்ட்” என்று சிறப்பு பெயரை இவருக்கு பெற்று தந்தது.
பேரழிவில் விகாரத் தோற்றம் அடைந்தோருக்கு தன்னுடைய திறமையால் இலவசமாகச் சிகிச்சை அளித்து, 1960 ஆம் ஆண்டுகளில் பிரேசில் குடிமக்களின் மதிப்பை முதல்முறையாக இவர் பெற்றார்.








