ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மீது மோதிய விண்கல் - என்ன பாதிப்பு?

ஜேம்ஸ் வெப் தொலை நோக்கி

பட மூலாதாரம், ESA

படக்குறிப்பு, ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி - வரைகலை
    • எழுதியவர், ஜோனாத்தன் அமோஸ்
    • பதவி, பிபிசி அறிவியல் செய்தியாளர்

விண்வெளியில் மிதக்கும் அதிநவீன தொலைநோக்கியான ஜேம்ஸ்வெப் தொலைநோக்கியின் முக்கிய கண்ணாடி மீது ஒரு சின்னஞ்சிறு விண்கல் மோதியது.

தூசி அளவுக்கான நுண் விண்கல் ஏற்படுத்திய சேதம், தொலைநோக்கி திரட்டும் தரவுகளில் கவனிக்கத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், தொலைநோக்கி திட்டத்தின் ஒட்டுமொத்த செயல்பாட்டை இது மட்டுப்படுத்தாது என்று கருதப்படுகிறது.

விண்வெளியை நோக்கும் விஷயத்தில் புரட்சிகரமான முன்னேற்றத்தைக் கொண்டுவந்த ஹபிள் விண்வெளி தொலைநோக்கியின் ஆயுள் குறைவாகவே உள்ள நிலையில் அதனை பதிலீடு செய்வதற்காக உருவாக்கப்பட்ட இந்த தொலைநோக்கி கடந்த டிசம்பர் மாதம் விண்ணில் ஏவப்பட்டது.

பேரண்டத்தை இந்த தொலைநோக்கி எப்படி நோக்கியது என்பது பற்றிய படங்களை வானியலாளர்கள் ஜூலை 12ம் தேதி வெளியிட உள்ளார்கள்.

தற்போது நடந்த விண்கல் மோதிய நிகழ்வினால், இந்தப் படங்கள் வியப்பூட்டப் போவது எந்தவகையிலும் பாதிக்கப்படாது என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா கூறியுள்ளது.

ஜேம்ஸ் வெப் - ஹபிள் ஒப்பீடு
படக்குறிப்பு, ஜேம்ஸ் வெப் - ஹபிள் ஒப்பீடு

இந்த விண்கல் மோதிய சம்பவம் மே 23-க்கும் 25க்கும் இடைப்பட்ட காலத்தில் நடந்துள்ளது.

தொலைநோக்கியின் 6.5 மீட்டர் அகல முதன்மை பிரதிபலிப்பானில் உள்ள 18 பெரிலியம் - தங்க தகடுகளில் சி-3 என்று அழைக்கப்படும் ஒரு தகட்டினை இந்த விண்கல் தாக்கியுள்ளதாக ஆய்வுகள் காட்டுகின்றன.

விண்வெளியில் சிறிய பொருளாக இருந்தால்கூட அதிவேகமாக செல்லும்போது வேறொன்றோடு மோதினால், கடும் தாக்கத்தை அது ஏற்படுத்தும். இப்போது இந்த விண் கல் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியில் 5 முறை மோதியுள்ளது. அதில் கடைசி மோதல் மிக அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜேம்ஸ்வெப் தொலைநோக்கி திறந்தவெளி வடிவமைப்பைக் கொண்டுள்ளது. ஹப்பிள் போன்ற பிற தொலைநோக்கிகளில் காணப்படுவதைப் போன்ற டியூபுலார் பாதுகாப்பு அமைப்புகள் இதில் இல்லை. அதற்குப் பதிலாக ஒரு பெரிய சூரிய ஒளி பாதுகாப்புத் தகட்டுக்குப் பின்னால் இந்த அமைப்பு உள்ளது. இதனால், நிலையாகவும், அகச்சிவப்பு கதிர்களைக் கண்டுபிடிக்கத் தேவையான குளிர்ச்சியோடும் இருக்க இந்த தகடுகளுக்கு வாய்ப்பு ஏற்படுகிறது.

நுண் விண்கற்கள் மோதும் ஆபத்து எதிர்பார்க்கப்பட்டதே. இதையெல்லாம் கருத்தில்கொண்டே இதைச் செய்வதற்கான உலோகங்கள், பாகங்கள் கட்டமைப்பு, இயக்க முறைகள் தேர்வு செய்யப்பட்டன.

"கடும் புற ஊதாக் கதிர்கள், சூரியனில் இருந்து வரும் ஊட்டம் பெற்ற துகள்கள், பால்வெளி மண்டலத்தின் பிற பகுதிகளில் இருந்து வரும் காஸ்மிக் அலைக்கற்றைகள், , எப்போதாவது சூரியக் குடும்பத்துக்குள் இருந்தே வந்து மோதும் நுண் விண்கல்கள் போன்ற விண்வெளி நிகழ்வுகளுக்கு இத்தொலைநோக்கி தன்னைப் பொருத்திக்கொள்ள நேரிடும் என்பதை அறிந்தே இருக்கிறோம்," என்கிறார் பால் கெய்த்னர். இவர் மேரிலாந்தில் உள்ள நாசாவின் கோட்டார்ட் ஸ்பேஸ் ஃப்ளைட் சென்டரின் துணை தொழில்நுட்ப திட்ட மேலாளராக இருக்கிறார்.

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் முதன்மை பிரதிபலிப்பான்.

பட மூலாதாரம், NASA

படக்குறிப்பு, ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் முதன்மை பிரதிபலிப்பான்.

பிரதிபலிப்பானில் தற்போது பாதிக்கப்பட்டுள்ள தகட்டின் நிலையை பொறியாளர்கள் மாற்றியமைப்பார்கள். அந்த தகட்டினால் ஏற்பட்டுள்ள காட்சி சிதைவினை இது அகற்றும். ஆனால், அந்த தகட்டினை அவர்கள் நீக்க முடியாது.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: