பனிப்பாறை உடைவதால் உயிரினங்களைத் தொடரும் ஆபத்து - எங்கு, எப்படி நடக்கிறது?

அன்டார்டிகா

பட மூலாதாரம், COPERNICUS DATA 2020 / A.LUCKMAN

படக்குறிப்பு, விரல் வடிவில் தோற்றமளிக்கும் பனிப்பாறை பிளவு
    • எழுதியவர், ஜோனாத்தன் அமோஸ்
    • பதவி, பிபிசி அறிவியல் செய்தியாளர்

தெற்கு அட்லான்டிக் பெருங்கடலில் மிதந்து பயணித்துக் கொண்டிருக்கும் A68a என்கிற பிரம்மாண்ட பனிப்பாறையில், சில பெரிய விரிசல்கள் ஏற்பட்டு உடைந்திருப்பதாகத் தோன்றுகிறது.

நேற்று (டிசம்பர் 22, செவ்வாய்க்கிழமை) வெளியான செயற்கைக் கோள் படத்தில், A68a என்கிற பிரம்மாண்ட பனிப்பாறையின் மீது பெரிய பிளவுகள் ஏற்பட்டிருப்பதைக் காண முடிகிறது. A68a பனிப்பாறையில் இருந்து உடைபட்ட சிறு பனிப்பாறைகள் ஒன்றுக்கொன்று விலகிச் செல்வதையும் பார்க்க முடிகிறது.

கடந்த 2017-ம் ஆண்டு அன்டார்டிகாவில் இருந்து பிரிந்து வந்தது தான் இந்த A68a பனிப்பாறை. இது தெற்கு ஜோர்ஜா தீவின் கடற்கரை ஓரத்தில் மிதந்து கொண்டிருக்கிறது.

இந்த பெரிய பனிப்பாறை, ஆழம் குறைவாக உள்ள பகுதிகளில் தங்கிவிடுமோ என நிபுணர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

இந்த பனிப்பாறை, பிரிட்டிஷ் ஓவர்சீஸ் டெரிட்டரி கடற்கரை பகுதி வரை சறுக்கிக் கொண்டு வருவதற்கான, சாத்தியக் கூறுகள் இருக்கின்றன. எனவே அங்கிருக்கும் பென்குயின்கள் மற்றும் கடல் சிங்கங்களின் உணவு தேடலில் பிரச்சனைகள் எழும்.

மேலே இருக்கும் படம், நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை ஜி.எம்.டி நேரப்படி 7.17 மணிக்கு, ஐரோப்பிய ஒன்றியத்தின் சென்டினல் - 1 ரேடார் விண்கலம் எடுத்தது.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

கடந்த திங்கட்கிழமை அன்றே, இந்த A68a பனிப்பாறையில் விரிசல்கள் தெளிவாகத் தெரிந்தன, ஆனால் வெடிப்புகள் காணப்படவில்லை.

லார்சன் சி என்கிற பணி அடுக்கில் இருந்து பிரிந்து வந்த A68a பனிப்பாறை தான், இதுவரை காணப்பட்ட பனிப்பாறைகளிலேயே நான்காவது மிகப் பெரியது. அப்படிப்பட்ட பனிப்பாறை, சுமாராக மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு சிதையத் தொடங்கி இருக்கிறது என்கிறார் பிரிட்டனைச் சேர்ந்த ஸ்வான்சீ பல்கலைக்கழகத்தின் அட்ரியன் லக்மென்.

அன்டார்டிகா

பட மூலாதாரம், COPERNICUS DATA 2020 - P.MARKUSE

படக்குறிப்பு, ஆழமான விரிசலுடன் தோற்றமளிக்கும் பனிப்பாறை. படப்பதிவு நாள்: 21.12.2020

வரலாற்றிலேயே மிகப் பெரிய பனிப்பாறைகளில் ஒன்றான A68a, அதிக அளவில் கண்காணிக்கப்பட்ட பனிப்பாறைகளில் ஒன்று எனவும் குறிப்பிடுகிறார் லக்மென்.

ஏகப்பட்ட செயற்கைக் கோள் தரவுகள் மற்றும் அவை விரைவாகக் கிடைப்பது போன்ற வசதிகள் முறையாக பயன்படுத்தப்பட்டு, இந்த A68a பனிப்பாறை தனியாக பிரிந்து வந்தது முதல், சிதைவது வரை எல்லாமே கண்காணிக்கப்பட்டு வருகிறது என்கிறார் அவர்.

அமெரிக்காவின் நேஷ்னல் ஐஸ் சென்டர் தான் பனிப்பாறைகளுக்கு பெயரிடுகிறது.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

ஆராய்ச்சியாளர்கள் அன்டார்டிகாவை நான்கு பகுதிகளாகப் பிரித்திருக்கிறார்கள். அவை முறையே A,B,C,D. ஒவ்வொரு பனிப்பாறையும், அன்டார்டிகாவின் எந்த பகுதியில் இருந்து பிரிந்து வந்தது என்பதைப் பொறுத்து, முதல் எழுத்து வைக்கப்படுகிறது. அதன் பிறகு அந்தப் பகுதியில் இருந்து எத்தனையாவது முறையாக அந்தப் பனிப்பாறை உடைந்து வந்திருக்கிறது என்பதைக் குறிப்பிட ஒரு எண்ணும், அதன் பிறகு அதிலிருந்து உடைந்து வரும் சிறு பனிப் பிளவுகளுக்கு ஒரு எழுத்தும் என பனிப்பாறைகளுக்கு பெயர்கள் வழங்கப்படுகின்றன.

கடந்த வாரம் தான், A68a பனிப்பாறையில் இருந்து ஒரு மிகப்பெரிய பகுதி தனியாக உடைந்தது. அது A68d என்றழைக்கப்பட்டது.

A68d பனிப்பாறை, A68a பனிப்பாறைக்கு பின்னாலேயே வந்து கொண்டிருக்கிறது. அதை சென்டினல் - 1 செயற்கைக் கோள் அனுப்பிய புகைப்படத்தில் பார்க்க முடிகிறது.

பனிப்பாறை

பட மூலாதாரம், BAS/LAURA GERRISH

படக்குறிப்பு, தெற்கு ஜார்ஜியாவில் பனிப்பாறைகளை கண்காணிக்கிறார் லாரா கெர்ரிஷ்

செவ்வாய்க்கிழமை, சென்டினல் - 1 செயற்கைக் கோள் அனுப்பிய படத்தில், A68a பனிப்பாறையில் இருந்து, மேலும் இரண்டு பிளவுகள் உருவாகி இருக்கின்றன என்பது தெரிய வந்திருக்கிறது. அதற்கு A68e & A68f எனப் பெயரிடப்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு வரை சுமாராக 4,200 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டதாக இருந்த A68a பனிப்பாறை, தற்போது 2,600 சதுரகிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டதாகவும், A68d - 144 சதுர கிலோமீட்டர், A68e - 655 சதுர கிலோமீட்டர், A68f - 225 சதுர கிலோமீட்டர் பரப்பளவையும் கொண்டிருக்கலாம் என கணக்கிட்டிருக்கிறார் பிரிட்டிஷ் அன்டார்டிக் சர்வே அமைப்பைச் சேர்ந்த மேப்பிங் நிபுணர் லாரா கெர்ரிஷ்.

இதில் A68b மற்றும் A68c பிளவுகள் நீண்ட நாட்களுக்கு முன்பே A68a-ல் இருந்து பிரிந்து சென்றுவிட்டன.

A68a பனிப்பாறையின் அளவு கணிசமாகச் சுருங்கிவிட்டாலும், இப்போதும் தெற்கு ஜோர்ஜாவில் வாழும் விலக்குகளின் உணவுத் தேடலுக்கு பெரிய தடையை ஏற்படுத்தலாம்.

தற்போது இந்த பனிப்பாறையின் பிளவுகள் எல்லாமே Southern Antarctic Circumpolar Current Front என்கிற நீரோட்டம் அதிகம் இருக்கக் கூடிய பகுதிக்குச் சென்று கொண்டிருக்கிறது. இந்த பலமான நீரோட்டத்தால், தெற்கு ஜோர்ஜாவைச் சுற்றி இருக்கும் சிறிய பனிப்பிளவுகளை எல்லாம் துடைத்து வடக்குப் பக்கம் எரிந்துவிடும் என எதிர்பார்க்கலாம்.

அன்டார்டிகா

பட மூலாதாரம், PLANET LABS INC

A68a பனிப்பாறை, தெற்கு ஜோர்ஜா தீவின் ஆழமில்லாத பகுதிகளில் (Continental shelf) இருந்து வருவதால், அதை செயற்கைக் கோள்கள் கண்காணிக்கும். இந்த பனிப்பாறையின் பிளவுகள், பல இடங்களில் நங்கூரமிட்டு நிற்க வாய்ப்பிருகிறது.

முதன்முதலில் A68a பனிப்பாறை அன்டார்டிகாவில் இருந்து உடைந்து வந்த போது சுமாராக 6,000 சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்டதாக இருந்தது. தற்போது சுமாராக 2,600 சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்டதாக இருக்கிறது. இப்போதும் இது க்ரேட்டர் லண்டன் நகரத்தை விட மிகப் பெரியது.

ஏன் A68a பனிப்பாறை சூழலியல் மாற்றத்துக்கு பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது?

பனிப்பாறை

பட மூலாதாரம், MOD/CROWN COPYRIGHT

இந்த A68a பனிப்பாறை, மிகவும் குளிர்ச்சியான, லார்சன் சி பனி அடுக்கு எனப்படும் அன்டார்டிக் பகுதியில் இருந்து வந்தது. இந்த பனி அடுக்கு மிகப் பெரிய மிதக்கும் பனிப்பாறை. அன்டார்டிக் தீபகற்பத்தின் கிழக்குப் பகுதியில் இருந்து பெருங்கடலுக்கு வழிந்து வரும் நீரினாலும், சிறிய சிறிய பனிப்பாறைகளாலும் இந்த மிகப் பெரிய பனி அடுக்குகள் உருவாகின்றன.

பனிப்பாறைகள் தண்ணீரைத் தொடும் போது, கனமற்ற பகுதி மேல் நோக்கி உயரும். இத்தனை பிரமாண்ட பனி அடுக்குளில் இருந்து, பனிப்பாறைகள் உடைந்து வருவது இயற்கையான செயல்பாடுகளே.

பனி அடுக்குகள் தன்னுடைய சமநிலையை உறுதிப்படுத்திக் கொள்ள, பனிப்பாறைகளை வெளிப்படுத்துவது ஒரு வழி தான். லார்சன் சி பனி அடுக்கு தசாப்தங்களுக்கு ஒருமுறை பனிப்பாறைகளை வெளியிடுகிறது.

தொடர்புடைய காணொளி

காணொளிக் குறிப்பு, சீனாவில் இருகும் பனிப்பாறைகள்: எதிர்காலத்தில் என்ன ஆகும்?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :