எலி சைசில் ஒரு யானை - 50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கண்டுபிடிப்பு மற்றும் பிற செய்திகள்

பட மூலாதாரம், STEVEN HERITAGE
யானையின் சிறப்பே அதன் பெரிய உருவம்தான். அப்படி இருக்கும்போது எலி சைசில் யானையா என்று தலைப்பைப் பார்த்து ஆச்சரியம் வருகிறதுதானே? புலியின் இனத்தில் பூனை இல்லையா? அது போல தோற்றத்தில் எலி போல குட்டியாக இருக்கும் இந்த காட்டு விலங்கு யானையின் இனம் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.
சரி விஷயத்துக்கு வருவோம். இப்போது ஏன் இந்த விலங்கு பற்றி செய்தி வருகிறது தெரியுமா? மிகச்சிறிய பாலூட்டி விலங்கான இந்த குட்டி யானை 50 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டறியப்பட்டுள்ளது.
இது பற்றி பிபிசி சுற்றுச்சூழல் செய்தியாளர் ஹெலன் பிரிக்ஸ் எழுதியுல்ள செய்தி:
யானை மூஞ்சூறு என்று அழைக்கப்படும் இந்த விலங்கு ஒன்றினை, ஆப்பிரிக்க நாடானா ஜிபூட்டியில் அறிவியல் ஆராய்ச்சிப் பயணம் ஒன்றின்போது தற்போது பார்த்துள்ளார்கள்.
யானை மூஞ்சூறுவை கடைசியாக 1970ல் பார்த்ததாக அறிவியல் பதிவு உள்ளது. அவ்வளவுதான். பிறகு அதைக் காணவே இல்லை.

பட மூலாதாரம், HOUSSEIN RAYALEH
பெயரில் யானையும், மூஞ்சூறும் இருந்தாலும் இது யானையும் அல்ல. மூஞ்சூறும் அல்ல. எனினும், இவற்றுக்கும் aardvark என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் ஆப்பிரிக்க எறும்புத் தின்னிகள், யானைகள் மற்றும் மனாடீ (manatee) என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பாலூட்டி வகை விலங்குகள் ஆகியவற்றுக்கும் உறவு உள்ளது.
சோமாலி செஞ்ஜி என்றும் இவை அழைக்கப்படும். முன்பு ஒரு காலத்தில் இவை சோமாலியாவில் மட்டுமே காணப்பட்டன.
நீண்ட கூரிய முகத்தைப் பயன்படுத்தி இந்த யானை மூஞ்சூறுகள் பூச்சிகளைப் பிடித்து திண்ணும்.
தற்போது ஜிபூட்டியில் வறண்ட, பாறைகள் நிறைந்த பகுதியில் யானை மூஞ்சூறுகள் பிடிபட்டுள்ளன.
விவசாயமோ, மனித நடமாட்டமோ இல்லாத இடத்தில் இவை கண்டறியப்பட்டுள்ளதால் இந்த இனத்துக்கு பெரிதாக பாதிப்பு இல்லை என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எத்தியோப்பியாவிலும் யானை மூஞ்சூறுகள் இருக்க வாய்ப்புள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் : இதுவே கடைசி கொள்ளை நோய் அல்ல
- கொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன?

தமிழர் மருத்துவ முறை: அம்மை முதல் கொரோனா வரை கை கொடுக்கும் வைத்தியம் - பெரிதாக கவனிக்கப்படாதது ஏன்? #தமிழர்_பெருமை

பட மூலாதாரம், Getty Images
தமிழகர்களின் பாரம்பரிய மருத்துவ முறை என கருதப்படும் சித்த மருத்துவ முறை பல பெருந்தொற்று காலங்களை கடந்து இன்று கொரோனா பெருந்தொற்று காலத்திலும் தனது பங்கை ஆற்றி வருகிறது.
ஏன் எல்லை கடந்து பயணிக்கவில்லை?
சித்தர்களால் பழங்காலத்தில் எழுதி வைக்கப்பட்ட ஓலைச்சுவடிகளில் உள்ள மருத்துவ குறிப்புகளின்படி வைத்தியம் பார்ப்பது அல்லது மூலிகை தயாரிப்பது, சித்த மருத்துவமுறை என கருதப்படுகிறது.
இந்த சித்த மருத்துவம் தமிழர்களின் பாரம்பரிய மருத்துவமுறையாக கருதப்பட்டாலும், ஆங்கில மருந்துகளை போன்று மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொண்டு நவீன அறிவியல் மொழியில் அதனை இயற்றாமல் போன காரணத்தால் இந்த மருத்துவமுறை தமிழகத்தை தாண்டியும், உலகளவிலும் பரவிச் செல்ல முடியாமல் போனது என்கின்றனர் சித்த மருத்துவம் சார்ந்து பணிபுரியும் நிபுணர்கள்.
அமெரிக்க அதிபர் தேர்தல் 2020: டிரம்ப் Vs பைடன் - முன்னணியில் இருப்பது யார்?

அமெரிக்காவின் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப், மேலும் நான்கு ஆண்டுகளுக்கு அந்த பதவியில் நீடிப்பாரா, இல்லையா என்பதை அந்த நாட்டு மக்கள் வரும் நவம்பர் 3ஆம் தேதி தீர்மானிக்க உள்ளனர்.
குடியரசு கட்சியை சேர்ந்த டிரம்பை எதிர்த்து, வரவிருக்கும் தேர்தலில் களம் காண்கிறார் ஜோ பைடன். அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் ஆட்சிக்காலத்தில், துணை அதிபராக இருந்தவராக இவர் அறியப்பட்டாலும், உண்மையில் பைடன் 1970களிலிருந்தே அமெரிக்க அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.
தேர்தல் நாள் நெருங்கி வரும் நிலையில் கருத்துக்கணிப்பு நிறுவனங்கள், மக்கள் எந்த வேட்பாளரை விரும்புகிறார்கள் என்று கேட்டு நாட்டின் மனநிலையை அறிய முயற்சிக்கும்.
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரிய வேதாந்தா மனுக்கள் தள்ளுபடி

பட மூலாதாரம், Reuters
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மூட வேண்டுமென தமிழக அரசு விதித்த உத்தரவு நீடிக்குமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
முன்னதாக, தூத்துக்குடி மாவட்டத்தில் வேதாந்தா நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மூடக் கோரி அப்பகுதி மக்கள் போராட்டங்களை நடத்திவந்தனர்.
இது தொடர்பாக கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த போராட்டம் பெரும் கலவரத்தில் முடிவடைந்தது. மே 22ஆம் தேதி நடந்த போராட்டத்தில் காவல்துறையால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.
இதற்குப் பிறகு அந்த ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. 2018 மே 28ஆம் தேதி அந்த ஆலை மூடி சீல்வைக்கப்பட்டது.
விரிவாகப் படிக்க:ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரிய வேதாந்தா மனுக்கள் தள்ளுபடி
லெபனான்: ரஃபீக் ஹரிரி படுகொலை வழக்கில் ஒருவர் குற்றவாளி என சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு

பட மூலாதாரம், Getty Images
லெபனான் முன்னாள் பிரதமர் ரஃபீக் ஹரிரி, 2005ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த இரான் ஆதரவு பெற்ற ஹெஸ்போலா தீவிரவாத குழுவைச் சேர்ந்த நால்வரில் ஒருவர் குற்றவாளி என்று சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2015ஆம் ஆண்டு முதல், இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக ஹெஸ்போலா குழுவைச் சேர்ந்த சலீம் அய்யாஷ் மற்றும் மேலும் மூவருக்கு எதிரான வழக்கு, சர்வதேச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












