You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஹுவாவே ஸ்மார்ட் ஃபோன்களில் இனி கூகுள் செயலி இருக்காது - காரணம் என்ன?
ஆண்ட்ராய்ட் ஆப்ரேடிங் சிஸ்டத்தில் உள்ள சில மேம்படுதல்களை ஹுவாவே அலைப்பேசி நிறுவனம் பெறமுடியாதபடி கூகுள் அதனை நிறுத்தியுள்ளது.
இது சீன அலைப்பேசி தயாரிப்பு நிறுவனமான ஹூவேவுக்கு ஒரு பலத்த அடியாக இருக்கும்.
ஹுவாவேவின் புதிய ஸ்மார்ட்ஃபோன்களில் கூகுள் மேப்ஸுக்கான அனுமதியும் மறுக்கப்பட்டுள்ளது.
அனுமதி இல்லாமல் அமெரிக்க நிறுவனங்களுடன் வர்த்தகம் செய்ய முடியாத நிறுவனத்தின் பட்டியலில் ஹுவாவேயின் பெயரை அமெரிக்கா அறிவித்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கூகுள் வெளியிட்ட அறிக்கையில், "ஆணையுடன் இணைந்து செயல்படுவதாகவும், விளைவுகள் குறித்து மறு ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது."
இதுகுறித்து ஹுவாவே இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
கூகுளின் இந்த நடவடிக்கை குறித்து முதலில் செய்தி வெளியிட்ட ராயடர்ஸ் நிறுவனம், "கூகுளின் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாடுகளை ஹுவாவே இழக்கிறது என்றும், மேலும் புதிய அலைப்பேசிகளில் யூடியூப் மற்றும் மேப்ஸ் போன்ற வசதிகள் இருக்காது." என்றும் தெரிவித்துள்ளது.
பொதுவான அனுமதியுடன்(open source) இருக்கும் ஆண்ட்ராய்ட் ஆப்ரேடிங் சிஸ்டமை ஹுவாவே ஸ்மார்ட் ஃபோன்களில் இனி கூகுள் செயலி இருக்காது - காரணம் என்ன? பயன்படுத்திக் கொள்ளலாம்.
கடந்த புதன்கிழமையன்று, அனுமதி இல்லாமல் அமெரிக்க நிறுவனத்துடன் வர்த்தகம் செய்ய முடியாது என்ற பட்டியலில் ஹுவாவேவை சேர்த்தது அமெரிக்கா.
ஹுவே வாடிக்கையாளர் வர்த்தகத்தில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என சிசிஎஸ் இன்சைட் கன்சல்டன்ஸியை சேர்ந்த பென் வுட் தெரிவித்துள்ளார்.
5ஜி மொபைல் நெட்வொர்க்குகளில் ஹுவாவேயின் உபகரணங்களை பயன்படுத்த வேண்டாம் என பல நாடுகளில் உள்ள தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு கூறப்பட்டுள்ளது.
இதுவரை இதுகுறித்து பிரிட்டன் எந்த ஒரு அதிகாரப்பூர்வ தடையும் அறிவிக்கவில்லை.
ஹுவாவே தனக்கு சொந்தமான செயலிகளை உருவாக்க முயன்று வருகிறது.
இந்த நடவடிக்கை மேற்கத்திய நாடுகளில் ஹுவாவேவின் வர்த்தகத்தை பாதிக்கலாம் என பிபிசியின் தொழில்நுட்ப ஆசிரியர் லியோ கெலியான் தெரிவிக்கிறார்.
"கூகுள் ப்ளே ஸ்டோர் அல்லது அதன் பாதுகாப்பு மேம்படுதல்கள் இல்லாத அலைப்பேசிகளை வாங்க பெரும்பாலும் பயனர்கள் விரும்பமாட்டார்கள்."
"ஆனால் கூகுள் ஆப்ரேடிங் சிஸ்டம் அல்லாத ஒரு ஆப்ரேடிங் சிஸ்டத்தின் தேவை குறித்து அலைப்பேசி விற்பனையாளர்கள் தீவிரமாக யோசிப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாக இது அமையும்." என்றும் அவர் கூறுகிறார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்