You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
Exit Polls 2019: ஆச்சர்யங்கள் நிறைந்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்
இந்திய மக்களவைத் தேர்தலின் ஏழாம் மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவுக்கான நேரம் இன்று மாலை 6 மணிக்கு முடிவடைந்த நிலையில், தேர்லுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகின.
இவை அனைத்தும் பிற நிறுவனங்கள் நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளே. பிபிசி தேர்தல் கருத்துக்கணிப்புகள் நடத்துவதில்லை.
இந்திய ஊடகங்கள் நடத்திய கருத்துக்கணிப்பில், தேர்தல் முடிவுகள் பெரும்பாலும் பாஜகவுக்கு சாதகமாக உள்ளதாகவே குறிப்பிடுகின்றன.
ரிபப்ளிக் தொலைக்காட்சி மற்றும் சி-வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பு பாஜக கூட்டணிக்கு 287 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 128 இடங்களும், பிற கட்சிகளுக்கு 127 இடங்களும் கிடைக்கும் என்று கூறுகிறது.
பாஜக கூட்டணி 306 இடங்கள், காங்கிரஸ் கூட்டணி 132 இடங்கள் மற்றும் பிற கட்சிகள் 104 இடங்கள் பெறும் என டைம்ஸ் நவ் தொலைக்காட்சி நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றன.
பாஜக கூட்டணி 242 இடங்கள், காங்கிரஸ் கூட்டணி 164 இடங்கள் மற்றும் பிற கட்சிகள் 136 இடங்கள் பெறும் என நியூஸ் எக்ஸ் தொலைக்காட்சி நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றன.
தமிழகத்தில் திமுக கூட்டணி 34 முதல் 38 இடங்களிலும், அதிமுக அதிகபட்சம் நான்கு தொகுதிகளிலும் வெல்லும் என இந்தியா டுடே - ஏக்சிஸ் கருத்துக்கணிப்பு கூறுகிறது.
புதுச்சேரி தொகுதி காங்கிரஸ் கட்சியின் வசமாகும் என்று இந்தக் கருத்துக்கணிப்பு கூறுகிறது.
மாநிலம் : தமிழ்நாடு
இந்தியா டுடே ஆக்சிஸ் வெளியிட்ட கருத்துக்கணிப்பில் தென் மாநிலங்களை பொறுத்த வரை, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 55 - 63 தொகுதிகளிலும், தேசிய ஜனநாயக கூட்டணி 23 - 33 தொகுதிகளிலும், பிற கட்சிகள் 35 - 46 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்பிருப்பதாக கூறியுள்ளன.
மாநிலம் : உத்தர பிரதேசம்
மாலை 6.30 மணிக்கு மணிக்கு முன்பு தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிடக்கூடாது என்று இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
இதனால் இன்று மாலை 6.30 மணிக்கு மேல் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகின.
இந்தியாவின் 17வது மக்களவை தேர்தல், கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி மே 19ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடந்து முடிந்தது.
மொத்தமுள்ள 543 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வேலூர் தொகுதி தவிர 542 தொகுதிகளில் நடத்தப்பட்ட தேர்தலின் முடிவுகள் மே23ம் தேதி வெளியாக உள்ளன.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்