You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கடற்கரை மணல் துகள்களைவிட நட்சத்திரங்களின் எண்ணிக்கை அதிகமா?
"இந்த புவியில் உள்ள அனைத்து கடற்கரையிலும் இருக்கும் மணல் துகள்களைவிட இந்த பிரபஞ்சத்தில் அதிக நட்சத்திரங்கள் இருக்கின்றன."
இதை சொன்னவர் பிரபல வானியல் அறிஞர் கார்ல் சகன். என்பதுகளில் மிகவும் பிரபலமாக இருந்த காஸ்மோஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில்தான் கார்ல் சகன் இவ்வாறாக கூறினார்.
ஆனால் அது உண்மையா? இதனை கணக்கிட முடியுமா?
இதனை பிபிசி ஆய்வாளர்களின் துணையுடன் கணக்கிட்டது.
நாம் பெரிய எண்ணிக்கைகளை எடுத்து விளையாட போகிறோம். என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.
நட்சத்திர விளையாட்டு
பேராசிரியர் கெர்ரி கில்மோர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானியல் அறிஞர் இந்த பிரபஞ்சத்தில் உள்ள நட்சத்திரங்களை எண்ணும் பணியில் ஈடுபட்டு இருக்கிறார்.
பிரிட்டனின் திட்டமான கையா அவர் தலைமையில்தான் நடந்து வருகிறது. கையா திட்டம் மூலம் நட்சத்திரங்களை எண்ணுவதுதான் செயல்திட்டம்.
இந்த திட்டத்தில் ஐரோப்பியன் விண்வெளிக்கலமும் இருக்கிறது. இப்போது அந்த விண்வெளிக்கலம் வட்டப்பாதையை சுற்றி வருகிறது.
பிபிசியிடம் பேசிய பேராசிரியர் கெர்ரி கில்மோர், "கையா வெளியிட்டுள்ள முதற்கட்ட தகவல்களின் படி, இரண்டு பில்லியன் நட்சத்திரங்கள் இருக்கின்றன. இந்த பால்வீதியில் உள்ள மொத்த நட்சத்திரங்களில் ஒரு சதவீதம்தான் இது" என்கிறார்.
இந்த கேல்க்ஸியில் மட்டும் 200 பில்லியன் நட்சத்திரங்கள் இருக்கின்றன.
ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். இந்த கேலக்ஸியில் மட்டும்தான் 200 பில்லியன் நட்சத்திரங்கள்.
இந்த பிரபஞ்சத்தில் எத்தனை கேலக்ஸிகள் இருக்கின்றன. அதில் எத்தனை நட்சத்திரங்கள் இருக்கின்றன என்று எப்படி கணக்கிடுவது?
ஹப்பில்ஸ் லாவைக் கொண்டு கில்மோர் கணக்கிடுகிறார். அதன்படி நூறு பில்லியன் கேலக்ஸிகள் இந்த பிரபஞ்சத்தில் இருக்கின்றன. ஒவ்வொரு கேலக்ஸியிலும் 200 பில்லியன் நட்சத்திரங்கள் இருக்கின்றன. அப்படியான இந்த புவியில் எத்தனை நட்சத்திரங்கள் இருக்கின்றன? கணக்கிட முடிகிறதா அல்லது கற்பனையாவது செய்து பார்க்க முடிகிறதா?
சரி இப்போது கடற்கரைக்கு வருவோம்.
கடற்கரையும் மணலும்
முதலில் இந்த புவியில் எத்தனை கடற்கரை இருக்கின்றன என்று கனக்கிட வேண்டும். அதன் நீளம், அகலம், ஆழத்தை பின் கணக்கிட வேண்டும்.
சரி முதலில் கரையோர எல்லையிலிருந்து தொடங்குவோம். கடல் அல்ல, கடற்கரையோர எல்லை.
டெல்டேர்ஸ் ஆய்வு நிறுவனத்தில் ஆய்வு செய்து வரும் கென்னடி டோன்சிட்ஸ் இந்த உலகத்தின் கடற்கரை ஓர நீளத்தை கணக்கிட்டு இருக்கிறார்.
ஒபன் ஸ்ட்ரீட் அமைப்பு என்பது அனைவரையும் ஒன்றிணைத்த ஒரு வரைப்பட திட்டம். உலகம் முழுவதும் 2 மில்லியன் மக்கள் இது தொடர்பான ஒரு வரைப்படத்தை உண்டாக்க தகவல்களை அளித்து வருகிறார்கள்.
அமெரிக்கா, கனடா மற்றும் பிரிட்டன் அரசாங்கமும் இது குறித்த தகவல்களை அளித்து வருகின்றன.
இந்த தகவல்களை கொண்டு கணக்கிட்டதில் 3 லட்சம் கி.மீ நீளத்திற்கு மணற்பாங்கான கடல்கள் உள்ளன என்கிறார் அவர்.
சரி நீளம் 3 லட்சம் கி.மீ. அதன் கன அளவு எவ்வளவு?
இதனை கணக்கிடுவது கடினம்தான். ஆனால், பெரும்பாலான கடல்கள் 50 மீட்டர் அகலத்திலும், 25 மீட்டர் அளவுக்கு ஆழத்திலும் இருக்கின்றன.
இதனை சரியாக கணக்கிட்டால் 375 பில்லியன் கியூபிக் மீட்டர் அளவுக்கு மணல் இருப்பது தெரிய வருகிறது.
துகள்களின் கணக்கு
ஒரு கியூபிக் மீட்டரில் 10 பில்லியன் அளவுக்கு மணல் துகள்கள் இருக்கின்றன.
நாம் முன்பே கணக்கிட்ட 375 பில்லியன் க்யூபிக் மீட்டரை மணல் இந்த 10 பில்லியனுடன் பெருக்கினால், கடற்கரைகளில் மொத்தம் எவ்வளவு மணல் துகள்கள் இருக்கின்றன என்பது தெரியவரும்.
அதாவது இந்த பிரபஞ்சத்தில் 10,000,000,000,000,000,000,000 நட்சத்திரங்கள் இருக்கின்றன.
உலகத்தில் உள்ள கடல்களில் மொத்தமாக 4,000,000,000,000,000,000,000 மணல் துகள்கள் உள்ளன.
ஆக, கார்ல் சாகன் சொன்னது சரி. நட்சத்திரங்கள்தான் மணலைவிட அதிகமாக உள்ளன.
தொடர்புடைய செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :