You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விரைவில் வருகிறது ஆண் கருத்தடை மாத்திரைகள்!
பல வருடங்களாக பேசப்பட்டு வந்த விஷயம் இது. தற்போது, ஆண்களுக்கான கருத்தடை மாத்திரைகள் வெகு விரைவில் வெளிவர வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
இந்த மாத்திரை என்பது, உண்மையில் ஊசி மருந்து வடிவில் உள்ளது. இதை ரிஸுக் என்றழைக்கிறார்கள். ஆணுறைகளை போன்று பயன் தரும் என்றும், தற்போது நடைமுறையில் உள்ள கருத்தடை வழிமுறைகளை காட்டிலும் மிகவும் மலிவானன கருத்தடை வழி இது என்றும் ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.
மேலும், இது மீளெடுக்கக்கூடியது. இந்த ஆண்டு சுகாதார கட்டுப்பாட்டாளர்களிடம் சமர்பிக்கப்பட உள்ளது.
இதற்காக, உடனே உற்காகத்தில் துள்ளிக் குதிக்காதீர்கள். காரணம், மிகப்பெரிய மருத்து உற்பத்தி நிறுவனங்களின் கவனத்தை ஈர்க்க இம்மருந்து போராடி வருகிறது.
''மிகப்பெரிய மருத்து உற்பத்தி நிறுவனங்கள் வெள்ளை இன மற்றும் நடுத்தர வயது ஆண்களால் நடத்தப்படுகிறது. இதை யாரும் பயன்படுத்தமாட்டார்கள் என்று மற்றவர்களுக்கு இருக்கும் அதே உணர்வு இவர்களுக்கு உள்ளது. அதுதான் மிகப்பெரிய பங்கை வகிக்கிறது,'' என்று மகப்பேறு மருத்துவரான ஹெர்ஜன் கோலிங் பென்னிங் ப்ளூம்பெர்க்கிடம் தெரிவித்துள்ளார். பெண்களுக்கான கருத்தடை மாத்திரைகளை உருவாக்குவதில் இவர் பெரிதும் உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது.
''இந்த நிறுவனங்கள் பெண்களால் நடத்தப்பட்டால் ஒருவேளை முடிவு வேறு மாதிரியாக இருக்கலாம்'' என்கிறார் அவர்.
பிறப்பு கட்டுப்பாடு குறித்து ஆண்கள் பொறுப்பேற்க விரும்பவில்லை என்ற கூற்று நீண்டகாலமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், இந்த நம்பிக்கை தற்போது கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.
பணம்தான் உண்மையான காரணமா ? பெண்கள் கருத்தடை மருந்துகள் மூலம் தற்போது 10 பில்லியன் டாலர் லாபம் சம்பாதிக்கும் மருத்து உற்பத்தி நிறுவனங்களுக்கு ரிஸுக் போன்ற மருந்துகளால் லாபம் பாதியாகக் குறையலாம். அதுமட்டுமின்றி ஆணுறைகளுக்கு இருக்கும் சந்தைக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறிவிடும்.
இது கண்டிப்பாக, மலிவான, ஏதுவான மற்றும் மீளெடுக்கக்கூடிய கருத்தடை மாத்திரைகளுக்கான சந்தை என்பதை மறுக்க முடியாது.
வளரும் நாடுகளில் உள்ள சுமார் 225 மில்லியன் பெண்கள் குழந்தை பெறுதலை தாமதப்படுத்தவோ அல்லது நிறுத்தவோ முயற்சிப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வு கூறுகிறது.
ஆனால், அதற்கான அதிகளவிலான கருத்தடை செய்வதற்கான வழிமுறைகள் என்பது இன்னும் போதியளவில் எட்டப்படவில்லை.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்