ஜெர்மனி: ஒரு மில்லியன் இணைய தொடர்புகள் ஹேக்கர்களால் துண்டிப்பு
இணைய வலையமைப்பில் புகுந்து சேவைகளை முடக்குவோர் ஏறக்குறைய ஒரு மில்லியன் பயன்பாட்டாளர்களின் இணைய தொடர்புகளை துண்டித்திருக்கலாம் என்று ஜெர்மனியின் தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனமான டோயிட்ச்சே டெலகாம் தெரிவித்திருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய சேவையில் ஏற்பட்டிருக்கும் இந்த தடங்கல், வீடுகளுக்கு இணைய தொடர்புகளை வழங்கும் கருவிகளான ரவுட்டர்களை பாதித்துள்ளது.
"வெளிபுறத்தார்" என்று அது கூறியிருப்போரால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று இந்த நிறுவனம் கூறியிருக்கிறது.
இதனால் அரசு பாதிக்கப்படவில்லை என்று ஜெர்மனி தெரிவித்திருக்கிறது.
இத்தகைய முக்கிய இணைய உள்கட்டமைப்பில் நடத்தப்பட்டுள்ள பெரிய தாக்குதல், இணையவெளிப் பாதுகாப்பு பற்றிய கவலைகள் எழுவதற்கு காரணமாகலாம் என்று செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஆண்டு நடத்தப்பட்ட இணையவெளி தாக்குதல்கள் ஜெர்மனி நாடாளுமன்றத்தை இலக்கு வைத்தது. அதற்கு ரஷ்யர்களை ஜெர்மனிய பாதுகாப்பு துறை குற்றஞ்சாட்டியது.








