உலகம் முதல் உள்ளூர் வரை இன்று
சமீபத்திய நிலவரம் குறித்து அறிந்துகொள்ள பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கத்துக்கு செல்லுங்கள்.
கொரோனா வைரஸ் தொற்றால் உலகளவில் இதுவரை 1,02,606 பேர் பலியாகி உள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் கூறுகின்றன. இத்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,91,719ஆக உயர்ந்திருக்கிறது.
சமீபத்திய நிலவரம் குறித்து அறிந்துகொள்ள பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கத்துக்கு செல்லுங்கள்.
நாளை காலை மீண்டும் வேறொரு நேரலை தொடங்கும். மேலதிக செய்திகளை பிபிசி இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் உள்ள பிற கட்டுரைகளுக்கான இணைப்புகளில் படிக்கலாம்.
கொரோனா: அமெரிக்கா முதல் தமிழ்நாடு வரை - நடப்பவை என்ன?
இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோதி மாநில முதல்வர்களுடன் கொரோனா தொடர்பாக எடுக்கப்பட்ட, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதித்தார்.
அதன் பின் பல மாநில முதல்வர்கள் ஊரடங்கை இந்த மாத இறுதி வரை நீடிக்க இருப்பதாக கூறி உள்ளனர்.
ஆனால், இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை செயலாளர் சண்முகம், ஊரடங்கை நீடிக்க வேண்டும் என தமிழக முதல்வர் கோரிக்கை வைத்துள்ளதாகவும், ஊரடங்கு நீட்டிப்பு குறித்து பிரதமர் அறிவித்த பின்பே தமிழக முதல்வர் அறிவிப்பார் என தெரிவித்தார்.
ஒரு முக்கியமான விஷயத்தை குறிப்பிட வேண்டுமானால், மாநிலங்களுக்கு பேரிடர் நிதி ஒதுக்குவதில் முரண் உள்ளதாக தமிழக முதல்வர் மோதியிடம் கூறியதாக தெரிகிறது. மாநிலங்களுக்கு பேரிடர் நிதி ஒதுக்குவதில் 15வது நிதிக்குழுவின் வரைமுறையே தவறாக உள்ளது என்றும் மற்ற மாநிலங்களுக்கு 120.33 சதவீதம் நிதி ஒதுக்கப்படும் போது தமிழகத்திற்கு மட்டும் 64.65 சதவீத நிதி மட்டுமே ஒதுக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோதியிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளதாக தெரிகிறது.
தமிழகத்தில் புதிதாக 58 நபர்களுக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது என்றும், 485 நபர்களுக்கான சோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது என்று தமிழக தலைமை செயலர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து, தற்போது கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 969ஆக உயர்ந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் ஒரு நபர் இன்று (ஏப்ரல் 11) இறந்துள்ளதால், தற்போது இறப்பு எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது என தலைமை செயலர் சண்முகம் தெரிவித்தார்.
இந்திய அளவில் பார்த்தோமாம்னால், கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் போது கூட்டத்தை கூட்டி கர்நாடக பா.ஜ.க எம்.எல்,ஏ ஜெயராம் பிறந்த நாள் கொண்டாடியது சர்ச்சையாகி உள்ளது.
அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன. தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தராஜன் கற்பூரத்துக்கு கொரோனாவை கட்டுபடுத்தும் ஆற்றல் உள்ளது என தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இதுவரை 7447 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 40 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 239ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர ஊரடங்கை நீடிப்பது மிக முக்கியம். நாம் மட்டும் சரியான நேரத்தில் இந்த முடிவை எடுத்திருக்காவிட்டால் 8.2 லட்சம் பேர் கொரோனாவால் இந்நேரம் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்கிறார் சுகாதார அமைச்சகத்தின் இணை செயலாளர் லாவ் அகர்வால்.
இது போன்ற ஒரு விஷயத்தைதான் உலக சுகாதார நிறுவனத்தில் தலைவர் டெட்ரோஸும் கூறி உள்ளார். கொரோனா வைரஸ் கட்டுப்படுத்துவதற்கு முன்பே ஊரடங்கை தளர்த்தினால் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் எச்சரித்துள்ளார்.
கட்டுப்பாடுகளை தளர்த்துவதில் அமைப்புகள் மிகக் கவனமாக இருக்க வேண்டும் என அவர் கோரி உள்ளார். ஐரோப்பிய நாடுகளில் வைரஸ் பரவலின் வேகம் குறைந்துள்ளதற்கு மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார். அதேநேரம் ஆப்ரிக்காவின் ஊரக பகுதிகளில் கூட கொரோனா பரவ தொடங்கி உள்ளதென டெட்ரோஸ் கவலை தெரிவித்திருக்கிறார்.
குறிப்பாக சொல்ல வேண்டுமானால். பிரேசிலில் கொரோனா வைரஸ் தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 1000த்தை கடந்து உள்ளது. அங்கே மட்டும் 19 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்நாட்டில் உள்ள பல மாகாணங்கள் கொரோனா தொடர்பாக கடுமையான கட்டுபாடுகளை விதித்துள்ளன. ஆனாலும், அந்நாட்டு அதிபர் பொல்சினாரூ இந்த கட்டுபாடுகள் எல்லாம் தேவையற்றவை என தொடர்ந்து கூறி வர்றாரு.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலை அமெரிக்காதான் முதல் இடத்தில் உள்ளது. அந்நாட்டுல கொரோனாவால பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டி உள்ளது. கடந்த 24 மணி நேரத்துல மட்டும் அங்கே 2000க்கும் அதிகமான பேர் பலி ஆகி உள்ளனர். அங்கு மட்டும் இதுவரை 18 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர்.
பிரிட்டனிலும் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 10 ஆயிரத்தை நெருங்கிவிட்டது. மருத்துவமனையில் உள்ள போரிஸ் ஜான்சனின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளதாக பிரிட்டன் பிரதமர் அலுவலகம் தெரிவிக்கிறது. மலேசியாவில் பொது நடமாட்டக் கட்டுபாட்டு ஆணையை மீறிய குற்றத்தின் பேரில் சுமார் 7500 பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், DIPR
மாநிலங்களுக்கு பேரிடர் நிதி ஒதுக்குவதில் 15வது நிதிக்குழுவின் வரைமுறையே தவறாக உள்ளது. மற்ற மாநிலங்களுக்கு 120.33 சதவீதம் தமிழகத்திற்கு மட்டும் 64.65 சதவீத நிதி மட்டுமே ஒதுக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோதியிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
கொரோனா தொற்றுநோயை கட்டுப்படுத்த தமிழகத்தில் ஊரடங்கு நீடிக்கப்படவேண்டும் என தமிழக முதல்வர் பிரதமர் மோதியிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
சனிக்கிழமை இரவு 8மணிக்கு பிரதமர் மோதி வெளியிடவுள்ள அறிவிப்பை பொறுத்து தமிழக அரசு முடிவை அறிவிக்கும் என்றும் தமிழக தலைமை செயலர் சண்முகம் தெரிவித்தார்.
அதிக எண்ணிக்கை கொண்ட மாநிலங்கள் பட்டியலில், இரண்டாவது இடத்தில் தமிழகம் உள்ளது என்பதால், ஊரடங்கு நீடிப்பது குறித்து முடிவு பிரதமரின் உரையை அடுத்து முதல்வர் அறிவிப்பை வெளியிடுவார் என சண்முகம் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Facebook
தமிழகத்தில் புதிதாக 58 நபர்களுக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது என்றும், 485 நபர்களுக்கான சோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது என்று தமிழக தலைமை செயலர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து, தற்போது கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 969ஆக உயர்ந்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் ஒரு நபர் இன்று (ஏப்ரல் 11) இறந்துள்ளதால், தற்போது இறப்பு எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது என தலைமை செயலர் சண்முகம் தெரிவித்தார்.
''நாட்டின் முடக்க நிலையை நீடிப்பது என்பது பிரதமர் நரேந்திர மோதி மேற்கொள்ளும் நல்ல முடிவு என்றே கருதுகிறேன். மற்ற வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் நிலைமை சற்று சிறந்ததாகவே உள்ளது. ஏனெனில் இந்தியா சற்று விரைவாகவே முடக்க நிலையை பின்பற்றியது. தற்போது உடனே இதை பின்வாங்குவது நல்ல யோசனை அல்ல. எனவே ஒருங்கிணைந்த நன்மைக்காக இந்த முடக்க நிலையை நீடிக்க வேண்டும்'' என்கிறார் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு

பட மூலாதாரம், Getty Images
தென் துருவத்தில் முதல் முறையாக பிரேசில் நாட்டில் ஆயிரம் மரணம் பதிவாகி உள்ளது.
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் தரும் தகவலின்படி இந்த தென் அமெரிக்க நாட்டில் 1,068 பேர் பலியாகி உள்ளனர். 19, 789 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பல பிரேசில் மாகாணங்கள் கொரோனாவை எதிர்கொள்ளக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட சூழலில் , அந்நாட்டு அதிபர் இந்த கட்டுப்பாடுகள் எல்லாம் தேவையற்றவை என தொடர்ந்து பேசி வருகிறார்.
அமெரிக்காவில் ஒரே நாளில் 2000 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். போர்சுகலில் ஊரடங்கு மே 1ஆம் தேதி வரை நீடிக்கப்பட உள்ளது.
ஐர்லாந்து நாட்டில் மே 5 வரை ஊரடங்கு நீடிக்கப்பட உள்ளது.
துருக்கியில் இஸ்தான்புல் உள்ளிட்ட 31 நகரங்களுக்கு அடுத்த 48 மணி நேரத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் எப்படி படிப்படியாக ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படும் என விளக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்த தொடங்கிவிட்டன. ஆனால், கொரோனா கட்டுப்பாட்டுக்கு வந்த பின்பே ஊரடங்கு தளர்த்தப்படும் என ஆளும் அரசு கூறுகிறது.

பட மூலாதாரம், Getty Images
திவாலாகும் நிலையில் உள்ள விமான நிறுவனங்களுக்கு உதவ வேண்டாம் என்று கோரிக்கை வைத்திருக்கின்றன தொழிற்சங்கங்களும், சூழலியல் அமைப்புகளும்.
காலநிலை மாற்றம் தொடர்பான பிரச்சனை ஆக்கப்பூர்வமான எந்த பங்களிப்பையும் விமான நிறுவனங்கள் செய்யவில்லை. லாபத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு இந்த நிறுவனங்கள் செயல்படுகின்றன என்று குற்றஞ்சாட்டுகின்றன சூழலியல் அமைப்புகள்.
கொரோனா வைரஸ் காரணமாக விமான நிறுவனங்கள் மிக மோசமான பொருளாதார சிக்கலை சந்தித்து வரும் இந்த சூழலில், தங்களுக்கு உதவ வேண்டும் என அரசுகளிடம் கோரிக்கை வைத்துள்ளன.
இந்தநிலையில் இவர்களுக்கு எந்த பொருளாதார உதவியும் செய்யக் கூடாது என கடிதம் எழுதி உள்ளன 250 அமைப்புகள்.
உலகம் முழுவதும் எப்படி அடக்கம் நடக்கிறது என்பதை இந்தக் காணொளி விளக்குகிறது.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
கொரோனாவை விரைவாக கண்டறியும் ரேபிட் டெஸ்ட் கருவி இன்னும் இந்தியாவுக்கே வரவில்லை என்பதால் சென்னை நகரத்தில் எப்போது ரேபிட் டெஸ்ட் சோதனை செய்யப்படும் என்பதற்கான பதிலை தற்போது சொல்லமுடியாது என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.
ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஆணையர் பிரகாஷ், ரேபிட் டெஸ்ட் கருவிகள் வராததற்கான காரணங்கள் தெரியவில்லை என்றார். ''கொரோனா பரவலை தடுக்க அதிக கவனத்துடன் போக்குவரத்தை மேற்கொள்ளவேண்டும். மிகவும் அவசியமான போக்குவரத்தை மட்டுமே குறிப்பிட்ட காலத்தில் மேற்கொள்ளவேண்டும். விரைவில் சென்னையிலும் வாகனங்களுக்கு 'பாஸ்கள்' வழங்கப்பட உள்ளன,'' என்றார்.
மேலும், அத்தியவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு தடை இல்லை என ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நாள் முதல் அரசு தெரிவித்து வருகிறது. இதில் குழப்பம் இல்லை. விவசாயப்பொருட்கள் மற்றும்அத்தியவசிய பொருட்களை தயாரிக்கும் மையங்களில் தற்போதுஏற்பட்டுள்ள தேவைக்கு ஏற்ப பொருட்களை தயாரிக்கவும், சரக்கை கொண்டு செல்லவும் தடை கிடையாது என்றார்.
''செய்தித்தாள்கள் விநியோகத்திற்கு செல்வதற்கு முன்னர், வாகனத்தில் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. பேப்பர் விநியோகம் செய்பவர்களும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் என்பதால் முகக்கவசம், கையுறை அணியவேண்டும் என்பதை அறிவுறுத்தியுள்ளோம்,'' என்றார் ஆணையர் பிரகாஷ்.
கோவையில் மதுபோதைக்கு அடிமையான வாலிபர் கைகளை கழுவ பயன்படுத்தப்படும் கிருமிநாசினியை (சானிடைசர்) குடித்ததால் உயிரிழந்துள்ளார்.
இத்தாலி, ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் தாக்கம் சற்று குறையத் தொடங்கியுள்ள நிலையில், ஒருசில நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாகி வருவதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் எச்சரித்துள்ளார்.
குறிப்பாக ஆப்பிரிக்கா. அங்கு கிராமப்புறங்களில் கூட வைரஸ் பரவிவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.
ஆப்பிரிக்காவில் இதுவரை 10,000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அங்கு இதுவரை 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றின் மையமாக ஆப்பிரிக்கா ஆகிவிடலாம் என்ற அச்சமும் இருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
கொரோனா தாக்கத்தை அடுத்து, தமிழக அரசின் தோட்டக்கலை துறையின் நடமாடும் காய்கறி விற்பனை நிலையம் மூலமாக காய்கறிகளை விற்பனை செய்வது மற்றும் ஆன்லைன் மூலமாக காய்கறிகளை விற்பனை செய்வது பிரபலமாகி வருகின்றது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ள சென்னை நகரத்தில், ஆன்லைன்(https://ethottam.com/) மூலம் பதிவுசெய்யப்படும் ஆர்டர்களின் பேரில் தினமும் 1,000க்கும் மேற்பட்ட காய்கறி தொகுப்புகள் விற்பனையாகின்றன.
இலங்கையின் தற்போதைய சூழ்நிலையில் வளிமண்டலத்தில் காற்றுமாசு வீதம் வெகுவாக குறைவடைந்துள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவிக்கின்றது.
இலங்கை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட ஆராய்ச்சியாளர் சரத் பிரேமசிறி பிபிசி தமிழுக்கு இதனைக் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், Getty Images
தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கொரோனா வைரசால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள்படி, அங்கு 19,789 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,068 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரேசிலின் பல மாகாணங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதற்கு அந்நாட்டு அதிபர் சயீர் போல்சினாரூ எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டுப்பாடுகளால் பொருளாதாரத்தில் தேவையில்லாத தாக்கம் ஏற்படுவதாக அவர் கூறுகிறார்.

பட மூலாதாரம், AFP
மகாராஷ்டிராவில் இன்று மட்டுமே 92 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதுவரை அங்கு 1,666 பேர் கோவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்தியாவிலேயே அதிக கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ள மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. அதற்கு அடுத்த இடங்களில் தமிழ்நாடு மற்றும் டெல்லி உள்ளன.
மும்பையில் கொரோனா எவ்வாறு பரவியது என்பது குறித்த பிபிசி தமிழின் சிறப்புக் கட்டுரை கீழே.
காணொளிக் காட்சி வாயிலாக மாநில முதல்வர்கள் உடனான ஆலோசனைக் கூட்டத்தைத் தொடங்கினார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி.
இந்தக் கூட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக அமலில் உள்ள ஊரடங்கு குறித்து ஆலோசிக்கப்பட்டு, முக்கிய முடிகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
மனித இனத்துடன் பரிணாம வளர்ச்சி ரீதியாக நெருங்கிய தொடர்புடையதாகக் கருதப்படும் மனிதக் குரங்குகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மனிதர்கள் எவ்வாறு முடக்கப்பட்டிருக்கிறார்களோ, அதேபோல மனிதக் குரங்குகளும் அவற்றின் வாழ்விடங்களில் இருந்து வெளியேற முடியாத வகையில் முடக்கப்பட்டுள்ளன.
இதனால், மனிதக் குரங்குகள், ஒராங்குட்டான் போன்றவை இருக்கும் உயிரியல் பூங்காக்கள் ஆப்பிரிக்காவில் மூடப்பட்டுள்ளன.
அதிக சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் இடம் என்பதால் மனிதர்களிடம் இருந்து, அவற்றுக்கு பரவக்கூடிய வாய்ப்பு இருப்பதால் இவை மூடப்பட்டுள்ளன.
எனினும், மனிதர்களிடம் இருந்து மனிதக் குரங்குகளுக்கு வைரஸ் பரவுமா என்பது இதுவரை தெரியவில்லை.
இந்த கொரோனா பிரச்னை எப்போது முடியும்? - இதுதான் பலரின் கேள்வி. ஆனால் கொரோனாவுக்கு பின்னர் உலகத்துக்கு ஒரு பேராபத்து இருக்கிறது. அது குறித்து யோசிக்க வேண்டியது அவசியம். அது என்ன? விரிவாக விளக்குகிறது இந்த காணொளி.