பதான்கோட் தாக்குதல்:மோடி தலைமையில் உயர்மட்டக் கூட்டம்
இந்தியாவின் பஞ்சாப் மாகாணம் பதான்கோட் பகுதியிலுள்ள விமானப் படைத் தளத்தின் மீது இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல் தொடர்பிலான உயர்மட்டக் குழுக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறுகிறது.

பட மூலாதாரம், AFP
டில்லியில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் உயர்நிலை பாதுகாப்புத்துறையினர் பங்கேற்கின்றனர்.
அந்த விமானப் படைத் தளத்தில் நுழைந்த அனைத்து தாக்குதலாளிகளும் கொல்லப்பட்டுள்ளனரா என்பது தெளிவில்லாமல் உள்ளது.

பட மூலாதாரம், AFP
எனினும் இந்தியாவின் உள்துறைச் செயலர் ராஜீவ் மெஹ்ரிஷி, இன்னும் இரு துப்பாக்கிதாரிகளை தேடும் நடவடிக்கைகள் தொடருவதாகத் தெரிவித்துள்ளார்.
அங்கு தேடுதல் நடவடிக்கைள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இத்தாக்குதல்களுக்கு இதுவரை எந்தக் குழுவும் உரிமை கோரவில்லை என்றாலும், பாகிஸ்தானைத் தளமாகக் கொண்டு இயங்கும் தீவிரவாதக் குழுக்களே இதற்கு காரணம் என இந்திய அதிகாரிகள் கூறுகின்றனர்.








