குழந்தைகள் இறப்பு: பாதுகாப்பு குறித்த கவலையை உண்டாக்கும் இந்திய தயாரிப்பு மருந்துகள்

இருமல் மருந்து மரணங்கள்

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, 42 பில்லியன் டாலர் வருவாயில் பகுதி அளவு ஏற்றுமதியில் இருந்து கிடைக்கும் மருந்துகள் தயாரிப்பு தொழில் துறை, தரக்குறைவான மருந்துகள், குழந்தைகளின் துயர மரணங்கள் ஆகியவற்றின் மூலம் மீண்டும் கவனம் பெற்றிருக்கிறது.
    • எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
    • பதவி, இந்திய செய்தியாளர்

2019ம் ஆண்டின் குளிர்காலத்தில் இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சில குழந்தைகள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர். இது ஒரு மர்மமான உடல்நலக்கோளாறு என்று பலரும் கருதினர்.

இருமல் மற்றும் சளியால் பாதிக்கப்பட்ட அந்த குழந்தைகளுக்கு உள்ளூர் மருத்துவர்கள் இருமல் மருந்தை பரிந்துரை செய்தனர். ஆனால், அதில் இருந்து குணம் அடைவதற்கு பதில் அந்த குழந்தைகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டனர். வாந்தியெடுத்தனர், காய்ச்சல் அதிகரித்தது; சிறுநீரகம் செயல் இழந்தது. உடல்நலக்கோளாறு எதனால் நேரிட்டது என்று கண்டுபிடித்த தருணத்தில் 2 மாதம் முதல் 6 வயதுக்கு உட்பட்ட 11 குழந்தைகள் உயிரிழந்து விட்டனர்.

டிஜிட்டல் விஷன் என்று அழைக்கப்படும் இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தில் இருந்து சோதனைக்காக சேகரிக்கப்பட்ட மூன்று மாதிரிகளில் இருந்து, டைதிலீன் கிளைகோல் அல்லது DEG இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பெயிண்ட், மை, பிரேக் திரவங்கள் தயாரிக்கும்போது சேர்க்கப்படும் தொழிற்சாலை கரைப்பானாக இது உபயோகிக்கப்படுகிறது. இந்த நச்சு ஆல்கஹாலை குடிப்பவர்களுக்கு பொதுவாக சிறுநீரக செயலிழப்பு நேரிடுகிறது.

காம்பியா நாட்டில் 66 குழந்தைகள் உயிரிழந்ததுடன் தொடர்புடைய, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துகள் குறித்து உலகளாவிய எச்சரிக்கையை இந்த மாதத்தின் தொடக்கத்தில் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டது.

மெய்டன் பார்மாசட்டிக்கல்ஸ் லிமிடெட் என்று அழைக்கப்படும் 32 ஆண்டுகளாக செயல்படும் அந்த நிறுவனம் தயாரித்த மருந்தின் மாதிரிகள் ஆய்வக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, அதில் டைதிலீன் கிளைகோலின் மற்றும் எத்திலீன் கிளைகோல் எனப்படும் நச்சு ஆல்கஹால் ஆகியவை ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு இருந்தது உறுதி செய்யப்பட்டது.

சிவப்புக் கோடு
சிவப்புக் கோடு

42 பில்லியன் டாலர் வருவாயில் பகுதி அளவு ஏற்றுமதியில் இருந்து கிடைக்கும் இந்திய மருந்துகள் தயாரிப்பு தொழில் துறை, தரக்குறைவான மருந்துகள், குழந்தைகளின் துயர மரணங்கள் ஆகியவற்றின் மூலம் மீண்டும் கவனம் பெற்றிருக்கிறது.

உலகின் பெரும் அளவு மருந்து தயாரிக்கும் நாடுகளில் ஒன்றான இந்தியாவில் மருத்துவர்களின் பரிந்துரைகள் இன்றி கடைகளில் விற்கப்படும் மருந்துகள், தடுப்பூசிகள், மருந்துப் பொருட்களை 3,000 நிறுவனங்களின் 10,000 மருந்து தொழிற்சாலைகள் ஜெனரிக் (generic) எனப்படும் பொதுவான (பிராண்ட் மருந்துகளின் நகல்களை பொதுவாக ஒரு சிறு தொகையில் விற்பனை செய்யப்படுகின்றன) மருந்துகளை தயாரிக்கின்றன. மருந்துகளுக்காக தேவைப்படும் ரசாயனங்களில் 70 சதவிகிதத்தை சீனாவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்கிறது. அதில் பெரும்பாலானவற்றை உள்நாட்டிலேயே தயாரிக்கவும் இந்தியா முயற்சிக்கிறது.

உலகின் மருந்தகம் என பிரதமர் நரேந்திர மோதி இந்தியாவை முன்னிறுத்துகிறார். இந்தியாவின் பாரம்பரிய நிபுணத்துவம் சக்திவாய்ந்த குறந்த விலை மருந்துகளை தயாரிக்கவும் , உலகின் உற்பத்தி கேந்திரமாக ஆக்கவும் உதவுகிறது.

அமெரிக்காவில் மருத்துவர்களின் பரிந்துரையின்றி, கடைகளில் நேரடியாக விற்கப்படும் 40 சதவிகிதத்துக்கும் அதிகமாக பொதுவான மருந்துகள் , இங்கிலாந்தில் விநியோகிக்கப்படும் அனைத்து வகையான மருந்துகளின் கால் பங்கு இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. உலக அளவில் எச்.ஐ.வி-க்கு எதிரான மருத்துவ சிகிச்சைக்குத் தேவைப்படும் ரெட்ரோவைரல் எதிர்ப்பு மருந்துகளில் மூன்றில் இரண்டு பங்கை இந்தியா விநியோகிக்கிறது.

அமெரிக்காவுக்கு வெளியே அதிக எண்ணிக்கையில் இந்தியா 800 மருந்து தயாரிக்கும் தொழிற்சாலைகளை கொண்டுள்ளது. இவை அமெரிக்காவின் சுகாதார மற்றும் தேவையான பாதுகாப்பு நடைமுறைகளுக்கு இணங்க செயல்படுகின்றன.

இப்படியான வளர்ச்சியில் தரம் மற்றும் நடைமுறைகளை பின்பற்றுவதில் குறைபாடு ஆகிய குற்றச்சாட்டுகளால் பத்தாண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் 9 சதவிகிதம் அளவுக்கு இந்த துறை பாதிக்கப்படுகிறது.

இருமல் மருந்து மரணங்கள்

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, 2013ம் ஆண்டில் இந்தியாவின் முன்னணி மருந்து தயாரிப்பாளரான ரான்பாக்ஸி ஆய்வகத்துக்கு 500 மில்லியன் டாலர் அபராதமாக செலுத்த வேண்டும் என அமெரிக்கா உத்தரவிட்டது.

பெரும்பாலும் சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் விற்கப்படும் அளவற்ற போலி மருந்துகளின் பிரச்னையால் எப்போதுமே இந்தியா தவித்து வருகிறது என்று பலர் நம்புகின்றனர். போலி மருந்துகள் என்று அவர்கள் கருதும் தரக்குறைவான மருந்துகள் குறித்து மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் குழப்பத்தில் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பல மாநிலங்களில் அரசு சார்பில் செயல்படும் ஆய்வங்கள் குறைவான நிதியிலும், போதுமான பணியாளர்கள் இன்றியும், போதுமான கருவிகள் இன்றியும் உள்ளன. ஒழுங்குமுறை அமைப்பின் ஆய்வு மற்றும் அமலாக்கம் கவனக்குறைவாக உள்ளது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்தியாவின் முன்னணி மருந்தக கட்டுப்பாட்டாளர் ஒரு நாளிதழிடம் , "நான் அமெரிக்காவின் தரமுறைகளை பின்பற்றினால், பெரும்பாலான மருந்தக தொழிற்சாலைகளை நான் மூட வேண்டியிருக்கும்," என்றார்.

1972ம் ஆண்டில் இருந்து டிஇஜியுடன் கூடிய மருந்துகள், தொடர்பான ஐந்து வெகுஜன நச்சு நிகழ்வுகளில் 70 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள்.

7 ஆண்டுகள் நீண்ட விசாரணைக்குப் பின்னர் 2013ம் ஆண்டில் இந்தியாவின் முன்னணி மருந்து தயாரிப்பாளரான ரான்பாக்ஸி ஆய்வகத்துக்கு 500 மில்லியன் டாலர் அபராதமாக செலுத்த வேண்டும் என அமெரிக்கா உத்தரவிட்டது. மருந்துகளை முறையற்ற வகையில் தயாரித்து சேமித்து வைத்தல், ஆய்வு செய்தல் ஆகியவற்றுக்காக அந்த ஜெனரிக் மருந்து தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய தொகையாக அபாரதம் செலுத்தும்படி உத்தரவிடப்பட்டது.

28 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களைக் கொண்ட இந்தியாவில் 3 மாநிலங்களில் இருந்து ஆய்வக சோதனைக்காக 2007 மற்றும் 2020ம் ஆண்டுக்கும் இடையே எடுக்கப்பட்ட 7500 மாதிரிகள் தரப்பரிசோதனையில் தோல்வியடைந்தன. இதன் காரணமாக அவை சரியான தரத்தில் இல்லை அல்லது தரமற்றவை என்று அறிவிக்கப்பட்டதாக அரசின் ஆவணங்கள் சொல்வதாக இந்திய மருந்து நிர்வாகியாக இருந்து ஓய்வு பெற்ற பின் பொது சுகாதார நிபுணராக மாறிய தினேஷ் தாக்கூர் என்பவர் கண்டுபிடித்துள்ளார்.

போதுமான மூலப்பொருள் ரசாயனங்கள் இல்லை, நோயாளிகளின் ரத்தத்தில் கரைக்கும் திறன் குறைபாடு அல்லது மாசுபட்டது போன்ற சோதனைகளில் இந்த மருந்துகள் தோல்வியடைந்தன.

தோல்வியடைந்த ஒவ்வொரு மாதிரியும் ஆயிரக்கணக்கான ஊசிகளாகவும், காப்ஸ்யூல்களாகவும், மாத்திரைகளாகவும் தயாரிக்கப்பட்டு மாற்றடையும் தொகுப்பு மருந்துகளின் பிரதிநிதித்துவத்தை கொண்டவையாகும். "இது போன்ற தரக்குறவான மருந்துகளால் பாதிக்கப்பட்ட ஒட்டுமொத்த நோயாளிகள் எண்ணிக்கை என்பது ஆயிரக்கணக்கான அளவிலும், கடந்த பத்தாண்டுகளில் ஒருவேளை பல லட்சங்களாகவும் இருந்திருக்கலாம்," என இந்தியாவில் மருந்து கட்டுப்பாட்டை ஆழ்ந்து கவனிக்கும் த ட்ரூத் பில் என்ற நூலின் துணை எழுத்தாளர் தாக்கூர் கூறுகிறார்.

தரக்கட்டுப்பாடு சோதனைக்காக மருந்து தொழில்துறையில் மேற்கொள்ளப்படும் ஜிஎம்பி (Good manufacturing practice) என்ற சிறந்த தயாரிப்பு நடைமுறைகளை பல இந்திய நிறுவனங்கள் பின்பற்றவில்லை என தாக்கூர் கவலை தெரிவிக்கிறார்.

"விற்பனைக்காக சந்தைக்கு அனுப்பும் முன்பு மேற்கொள்ளப்படும் இறுதி கட்ட தயாரிப்பு முறையிலோ அல்லது மூலப்பொருட்கள் சோதனையிலோ அடிக்கடி தோல்வியடைகின்றன."

இருமல் மருந்து மரணங்கள்

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, பெரும்பாலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மருந்துகள் மீது நம்பிக்கை கொள்வதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

"மருந்துகளின் தரம் கடந்த பத்தாண்டுகளில் சந்தையில் நிலையான தரத்தில் இல்லை என்று கண்டறியப்பட்டது" என்றார் தாக்கூர்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்தி, இந்தியாவில் அரசுக்கு சொந்தமான மருந்து ஆய்வங்களில் முக்கிய கருவி இல்லாத சூழல் இருப்பதாக தாக்கூர் கண்டறிந்தார். மருந்து மாதிரி நடைமுறைகள் காலனித்துவ 1875ம் ஆண்டின் சட்டத்திற்கு முந்தையது என்று குறிப்பிடுகிறார். இந்த சட்டத்தின்படி ஆய்வாளர்கள் சந்தையில் இருந்து ஒரு சிறிய எண்ணிக்கையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சீரற்ற மாதிரிகளை சேகரிக்கின்றனர்.

அரை நூற்றாண்டு காலமாகவே, தரமற்ற மருந்துகள் சந்தையில் கண்டறியப்பட்டால் அத்தகைய மருந்துகளை திரும்பப் பெற வகை செய்யும் சட்டம் தேவை என்பது குறித்து இந்தியாவில் விவாதம் நடைபெற்று வருகிறது. "அதில் உள்ள அனைத்தும் வழிகாட்டுதல்கள் மட்டுமே, இது பல மாநில கட்டுப்பாட்டாளர்களுக்குத் தெரியாது. இந்தியாவில் மருந்துகளை திரும்பப் பெறுவது குறித்து எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா," என்று கேள்வி எழுப்புகிறார் தாக்கூர்.

பிரச்னையின் அளவை புரிந்து கொள்வது சிக்கலான ஒன்றாகும். இந்தியாவில் உள்ள பல மருந்து தொழிற்சாலைகள் உண்மையில் உலகத்தரம் வாய்ந்தவை. பெரும்பாலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மருந்துகள் மீது நம்பிக்கை கொள்வதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மும்பையை சேர்ந்த சர்க்கரை நோய் மருத்துவர் ராகுல் பாக்ஸி, அண்மை காலங்களில் ஒரு முறை மட்டுமே ஒரு மருந்தின் மீது சதேகம் கொண்டதாக என்னிடம் கூறினார். பிராண்ட் மருந்துக்குப் பதில் மலிவான மருந்தை நோயாளிக்கு கொடுத்தபோது நோயாளியின் குளுக்கோஸ் அளவு அதிகரித்தாக கூறுகிறார்.

சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் தரமற்ற அல்லது போலியான மருந்துகள் விற்கப்பட்டிருக்கலாம் என்று அவர் சந்தேகிக்கின்றார். " என்னுடைய பெரும்பாலான நோயாளிகள் இந்தியாவின் தொலைதூரப் பகுதிகளில் இருந்து வருகின்றனர். பரிந்துரைக்கும் மருந்துகளை நகரில் உள்ள மருந்தகங்களில் இருந்து ஆறுமாதத்துக்கு வாங்கிக் கொள்கின்றனர். அவர்கள் பகுதியில் கிடைக்கும் மருந்துகள் மீது நம்பிக்கையில்லை என்று சொல்கின்றனர்," என மருத்துவர் பாக்ஸி கூறுகிறார்.

இருமல் மருந்து மரணங்கள்

பட மூலாதாரம், AFP

காம்பியாவில் குழந்தைகள் உயிரிழந்ததையடுத்து, தங்களது மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு வலுவானது என்றும் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட இருமல் மருந்து காரணமாக குழந்தைகள் உயிரிழந்தது குறித்து உலக சுகாதார நிறுவனம் மேலும் தகவலை அளிக்கும்படி இந்தியா கோரிக்கை விடுத்தது.

அமெரிக்காவில் மருத்துவ பொருட்கள் விற்பனையை முறைப்படுத்தும் எஃப்டிஏ எனப்படும் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு அமெரிக்காவுக்கு மருந்துகள் விநியோக்கும் நிறுவனங்களின் ஆய்வு நிலை மற்றும் எச்சரிக்கை கடிதங்களையும் பதிவிட்டிருந்தது.

"நிறுவனங்கள் - எங்கு அமைந்திருந்தாலும் - மருந்துகளை தயாரிப்பதற்கான எஃப்டிஏவின் கடுமையான தரநிலைகளை கொண்டு உயர் தரமான, பாதுகாப்பான மருந்துகளை அமெரிக்க நோயாளிகளுக்கு தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை எஃபிடிஏ கொள்கைகள் உறுதி படுத்துவதாக செய்தித் தொடர்பாளர் ஒருவர் என்னிடம் கூறினார்.

மருந்து தயாரிப்பு தொழில்நிறுவனம் ஒன்றின் தலைவர் பெயர் குறிப்பிட வேண்டாம் என்ற வலியுறுத்தலுடன், சில நாடுகள் மிகவும் கடுமையான தரம் கொண்ட மருந்துகளை கொண்டிருந்தாலும், இந்திய மருந்துகள் முழுவதும் பாதுகாப்பானவை. "நாங்கள் அபாயங்களை சார்ந்திருப்பதில்லை, ஆனால், இவையெல்லாம் சில மாறுபாடுகள், " என்றார்.

"மாறுபாடுகள் ஒரே முறை மட்டுமே நிகழவேண்டும். நீங்கள் மக்களின் உயிரில் விளையாடக்கூடாது," என்றார் தாக்கூர்.

சிவப்புக் கோடு
காணொளிக் குறிப்பு, தைராய்டு குறைபாடு: மாதவிடாய், இதயத்துடிப்பு, உடல் எடை, மகப்பேறு ஆகியவற்றை எப்படி பாதிக்கும்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: